தேவ கிருபையை நம்பியிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அநேகர் துணிந்து இயேசுவின் வார்த்தைகளை மீறி நடந்து பாவம் செய்கிறார்கள். அப்படிபட்டவர்கள் தேவன் என்றும் எப்பொழுதும் பாவத்துடன் சமரசம் செய்பவர் அல்ல! என்பதை கண்டிப்பாக அறியவேண்டும்.
"கிருபை" மட்டும் போதும் என்றால் கிருபையின் நாயகனாகிய இயேசு அனேக கற்பனைகள் அறிவுரைகளை போதிக்க வேண்டிய அவசியமே இல்லை. மறித்து உயிர்த்த பின்னர்கூட ஆவியானவர் மூலம்
எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
ரோமர் 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.
போன்ற வசனங்கள் கிருபையின் மேன்மையை விளக்குகின்றன.
அதாவது "பாவியான ஒரு மனுஷன் இரட்சிக்கபடுவது முற்றிலும் தேவ கிருபையே. வேறு எந்த ஒரு கிரியையினாலும் எவரின் நன் நடத்தையாலும் இரட்சிப்பானது உண்டாகவே முடியாது" என்பதையே இங்கு பவுல் சொல்கிறார்.
என்றும் சொல்கிறார் அதையும் நாம் கவனத்தில் கொல்வது அவசியம்.
இதன் பொருள் என்ன?
இரட்சிப்பட்ட பின்னர் மேற்கண்ட காரியங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும். இல்லையேல் தேவனின் ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்ற பொருளையே இந்த வசனம் தருகிறது
இதில் "கொலைகள்" என்ற வார்த்தை "கொலை செய்யாதிருப்பாயாக" என்ற பத்து கற்பனைகளில் ஒன்றுதான்.
எனவேதான் சொல்கிறேன் "கிருபை என்பது தேவனின் கற்பனைகளை வியர்த்தமாக்காது "
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)