ஆண்டவர் ஒரு காரியத்தினிமித்தம் என்னை அழைத்து சுமார் மூன்று நாட்கள் வழி நடத்தியபோது, ஒரு கட்டத்தில் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கீழே போட்டுவிடு என்று சொன்னார். ஆனால் பணத்தை எப்படி கீழே போடுவது என்று எண்ணி கால் ஷீக்குள் போடுக்கு வைத்த நான், தொடர்ந்து வந்த ஒரு சூழ்நிலையில் அப்பணத்தால் தவறு செய்துவிட்டேன். அப்பொழுது ஆண்டவர் என்னை பார்த்து சொன்ன வார்த்தை இது.
பிரசங்கி 10:1செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
எல்லாவற்றையும் விட்டு, எவ்வளவோ கஷ்டபட்டு நான் செய்த பல செயல்கள் அன்று வீணானது. தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படியவேண்டியதின் அவசியத்தை எனக்கு உணரவைத்த வசனம் இது.
இந்த வார்த்தையை எழுதிகொண்டுத்த சாலமொனுக்கே இவ்வசனம் மிகவும் பொருத்தமாக அமைவதாக இருக்கிறது. தேவனால் மிகப்பெரிய ஞானத்தை பெற்ற அவன், அந்நிய ஜாதி மனைவியர்களை கொண்டதால் இறுதியில் வழி விலகினான் அல்லவா?
1 ராஜா 11: 4. சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகியகர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.
அதுபோல் ஒருவர் வாழ்க்கையின் பெரும் பகுதியில் நல்லவனாக/ தேவனுக்கு ஏற்றவனாக வாழ்ந்திருக்கலாம், ஆனால் இறுதியில் அவர் செய்யும் சிறு தவறுகள் கூட அவர் வாழ்க்கை முழுவதையும் நாறிபோக பண்ணிவிடலாம்.
எசேக்கியேல் 18:24நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
சத்துருவானவன் ஒருவரை எங்கே பிடிக்கலாம், எப்பொழுது கவிழ்க்கலாம் என்று சுற்றி சுற்றி வருகிறான். எனவே முடிவு பரியந்தம் எச்சூழ்நிலையிலும் தேவனிடத்தில் ஒப்புரவும், வாழ்க்கை நடக்கையில் எச்சரிக்கையும் மிக மிக அவசியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)