01 “இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு விட்டார்”. அப்படியிருக்க நான் செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டா?
“இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்படடு விட்டார். எனவே இனி நான் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் எனக்கு தண்டணை இல்லை” என்னும் கருத்து மிகவும் தவறாகும்.
ஏனெனில் வேதம் தெளிவாக சொல்கிறது “தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடுபவனேஇரக்கம் பெறுவான்” மன்னிப்பு கேட்டும் அதை விட்டு விடாதவனுக்கு இரக்கம் இல்லை.
மேலும் கிருபையின் காலத்தில் வாழுகிறோம். கிருபையால் மன்னிப்பு உண்டு எனவே பாவம் செய்தாலும் தண்டணை இல்லை என்னும் கருத்தும் முற்றிலும் தவறாகும். பாவம் பெருகும் இடத்தில் கிருபை பெருகும் எனினும் கிருபை பெருகும் படி நாம் பாவம் செய்யலாகாது என் வேதம் கூறுகிறது (ரோமர்-05:20-06:01).
02 “நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், எனவே என் பாவங்களுக்கு தண்டணை இல்லை” எனும் இக்கருத்து சரியா?
ஒரு வகையில் இக்கருத்து சரியானதே. எவ்வாறெனில் இரட்சிக்கப்பட முன்பு செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டது. ஆனால் இனி பாவம் செய்ய கூடாது. இரட்சிக்கப்பட்ட பின்பு செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டு. எல்லா விதைப்புக்கும் அறுவடை உண்டு.
ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் போது தான் அதுவரை செய்த பாவங்களுக்கு மரித்து விடுகிறான்.(ரோமர்-06:02). அவன் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடி அவனுடைய பாவ சரீரம் ஒழிந்து போகும் படி அவனுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுகிறான்.(ரோமர்-06:06)
இப்படியிருக்க “இரட்சிக்கப் பட்டேனென்று சொல்லும் மனிதன் பாவம் செய்கிறான்” என்றால் என்ன அர்த்தம்? அவனுடைய பழைய மனுஷன் சிலுவையில் அறையப்படவில்லை என்றல்லவா?
ரோமர்-08:01 சொல்கிறது கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களாயிருந்தும் மாம்சத்தின் படி நடப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு உண்டு.
செய்கிறார்கள்தான். ஆனால் அதற்காக அதை நாம் நியாயப்படுத்த முடியாது. பாவம் செய்கிற யாராயிருந்தாலும் அவர்களுக்கு தண்டணை உண்டு. “சத்தியத்தை அறிந்த பிறகும் மனப்பூர்வமாய் பாவம் செய்தால் நியாயத்தீர்ப்பு வரும்” என்று வேதம் எச்சரிக்கிறது. (எபிரேயர்-10:26)(வெளிப்படுத்தல்-21:08)
உண்மையில் இரட்சிக்கப் பட்டவர்கள் யாரும் இல்லை. கிறிஸ்துவை விசுவாசித்த போது நமது இரட்சிப்பு ஆரம்பமானது. அந்த இரட்சிப்பு நிறைவேற நாமெல்லாரும் நாள் தோறும் பிரயாசப்படுகிறோம். (பிலிப்பியர்-02:12) அதாவது தினமும் இரட்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்
04 இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் செய்கிறோம். அதற்கும் தண்டணை உண்டென்றால் இரட்சிப்பென்பது என்னத்திற்கு?
நாம் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவதே இரட்சிப்பாகும். நாம் மரணத்தின் பின்னர் நரகத்திலிருந்து தப்புவோமென்றாலும் இம்மையில் பாவத்துக்கான தண்டணையை பெறுவது நிச்சயம்.
இங்கே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இரட்சிக்கப்படாத மனிதனுக்கு இரட்சிக்கப்படுவதற்கான கிருபை கிடைக்கிறது. இரட்சிக்கப்பட்ட மனிதனுக்கு பாவம் செய்யாமல் அதை மேற்கொள்வதற்கான கிருபை கிடைக்கிறது.
இதையே வேதம் பாவம் பெருகும் இடத்தில் கிருபையும் பெருகும் என்று கூறுகிறது.(ரோமர்-05:20/06:01)
இரட்சிப்புக்கேதுவான கிருபையை உதாசீனம் செய்பவன் இரட்சிக்கப்படாமல் போகிறான். பாவத்தை மேற்கொள்ளும் கிருபையை உதாசீனம் செய்பவன் பாவம் செய்து விடுகிறான்.
ஒருவன் இரட்சிக்கப்பட்டால் அவன் பாவத்தை மேற்கொள்வதற்கு தேவையான கிருபையையும், பரிசுத்தாவியானவரின் துணையையும் பெறுவான். அதை உதாசீனம் செய்பவன்தான் பாவம் செய்கிறான். ஆகவே இரட்சிப்பு மிகவும் முக்கியம்.
இன்னுமொன்றை அறிந்து கொள்ள வேண்டும். இரட்சிக்கப்படாத மனிதனுக்கு பாவத்தை மேற்கொள்வதற்கு தேவையான கிருபையும், பரிசுத்தாவியானவரின் துணையும் கிடைப்பதில்லை, அவற்றை பெறும் இரட்சிக்கப்பட்ட மனிதன் அவற்றை உதாசீனம் பண்ணி அவன் பாவம் செய்தால் இரட்சிக்கப்படாதவனைவிட அதிக தண்டணையைப் பெறுவான்.
05 பாவத்தை விட முடியாமல் திண்டாடும் “இரட்சிக்கப்பட்டேன்” என்று கூறும் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இரட்சிக்கப் பட்டவர்கள் பாவம் செய்யாதிருக்க மிகவும் பிரயாசப்பட வேண்டும். பாவம் செய்யாமலிருக்க இரத்தம் சிந்தியாகிலும் போராட வேண்டும் என்று வேதம் கூறுகிறது. (எபிரேயர்-12:04)
இயேசுவை ஒருவன் விசுவாசிக்கும் அன்று அவனுடைய இரட்சிப்பு ஆரம்பமாகிறது. அந்த இரட்சிப்பு நிறைவேற அந்த மனிதன் தினமும் பிரயாசப்பட வேண்டும். (பிலிப்பியர்-02:12)
அதை விட்டுவிட்டு என்னால் பாவத்தை விட முடியவில்லை என்று சொல்ல முடியாது. பாவத்தை விட்டு விடுவது பரிசுத்தாவியானவருக்கும், கிருபைக்கும் கீழ்ப்படியும் எல்லோருக்கும் சாத்தியமானது.
நமக்குள் பாவம் செய்யும் விருப்பம் சிறிதேனும் இருந்தாலும் நம்மால் அந்த பாவத்தை மேற்கொள்ள முடியாது. பாவத்தை வெறுப்பது நம்முடைய கடைமை. பாவமொன்றை செய்ய உள்ளத்தில் தீர்மானித்து விட்டு தேவனை நோக்கி “தேவனே இந்த பாவத்தை செய்யாத படி என்னை காப்பாற்றும்” என்று ஜெபிப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.
06 நான் விரும்பாததை செய்கிறேன் என்று பவுல் சொல்கிறாரே? (ரோமர்-07:15-17) அப்படியானால் பாவம் செய்யாமலிருக்க முடியாது என்றுதானே அர்த்தம்?
அப்படியல்ல அவர் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவராயிருக்கும் போது தன்னுடைய நிலைமை அப்படிப்பட்டது என்பதையே அவ்வாறு சொல்கிறார். அதை தொடர்ந்து வரும் எட்டாம் அதிகாரத்தில், தான் இப்போது நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்டவரல்லவென்றும், இப்போது மாம்சத்தின் படி பிழைக்காமல் ஆவியின் படி பிழைப்பவரென்றும் தன்னைக் குறித்து சொல்கிறார்
ரோமர்-08:01 சொல்கிறது கிறிஸ்துவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை.
கிறிஸ்தவனென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்பவன் மன்னிப்பையும் கிருபையையும் நம்பி இனிமேல் பாவம் செய்யாதிருக்கக்கடவன். பாவத்தின் சம்பளம் மரணம்(ரோமர்-06:23). அது உன்னை நரகத்துக்கு கொண்டு போய்விடும்.