மேலேயுள்ள வசனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அநேகர் "நாங்கள் ஆவியின்படியே நடக்கிறோம் எனவே எங்களுக்கு அக்கினி தீர்ப்பு இல்லை" நாங்கள் தேவனின் கட்டளைகள் எச்சரிப்புகளை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாவம் செய்ய துணிகரம் கொள்கிறார்கள்.
"ஆவியில் நடக்கிறேன்" என்று தம்பட்டம் அடித்து சொல்வோரே ஆவியானவரின் முக்கிய பணி என்னவென்று உமக்கு தெரியுமா? "ஒருவரை சகல சத்தியதுக்குள்ளும் வழி நடத்துதலே அவரது பணி.
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகலசத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
வேத வசனங்களே சத்தியம்! அந்த சத்தியத்துக்குள் நம்மை நடக்கபண்ணவே சத்திய ஆவியானவர் நம்முள் வந்து தங்கி இருக்கிறார். (நம் இஸ்டத்துக்கு நம்மை நடத்த அல்ல) அவர் நடத்துதலில் நாம் பலமுறை விழலாம் எழுந்திருக்கலாம். அதை அவர் ஒரு சிறு குழந்தை முதல் முதலில் நடக்க பழகும்போது விழுந்து எழுவதை அப்படி ஒரு தாய் எப்படி ரசிப்பாளோ அப்படி ரசிக்கிறார் மன்னிக்கிறார். எனவே விடாது முயற்ச்சித்தால் ஓர் நாளில் தேவபெலன் நம்மை நிச்சயம் நிற்க வைக்கும்
ஆனால் ஆவியில் நடக்கிறேன் என்று சொல்லும் நீரோ வசனத்துக்கு கொஞ்சமும் நடுங்கி பயப்படாமல் வசனத்தை உதாசீனபடுத்தி கள்ளனாக இருந்துகொண்டு ஆவியில் நடத்தபடுகிறோம் என்று சொல்வதென்ன?
ஒரே ஒரு காரியத்தை வைத்து உம்மை நீரே சோதித்துபாரும்
மத்தேயு 5:37உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
வெளி 21:27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; வெளி 21:8 பயப்படுகிறவர்களும்,..............பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
என்று "பொய் சொல்வதை பற்றி" மிக கடினமாகவும் மிக மிக கடினமாகவும் ஆவியானவர் வேதத்தில் எழுதி வைத்துள்ளார்.
இந்த சத்தியத்துக்கு எத்தனைபேர் கீழ்படிகிறீர்கள்? அத்தோடு, "என்னை சத்திய ஆவியானவர் நடத்துகிறார்" என்று இன்னொரு பொய்யையும் ஏன் சேர்த்து சொல்கிறீர்?
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் ஒழிந்துபோகாத வேத வசனம் அவமாகிபோகுமா? அல்லது தேவன் பாவத்தோடு சமரசம் பண்ணுவார் என்ற உமது தவறான நம்பிக்கை அவமாகிபோகுமா?
வசன அட்டிப்படையிலான இந்த ஒரே சோதனைக்கே இப்படி என்றால் இன்னும் எத்தனையோ சோதனை இருக்கிறதே. நீ எப்படி தப்பிக்க போகிறாய்! சோதனைக்குள் கடந்துவராத தேவமனிதன் யாருமில்லையே!
சத்திய வார்த்தைகள் உம இருதயத்தை குத்தினால் உடனே உணர்ந்து மனந்திரும்பாமல், சத்தியத்தை சாகடிக்க துணிந்து சத்தியத்தை தள்ளிவிடும் உன்னுள் சத்திய ஆவியானவர் எப்படி தங்குவார்? நீர் வேத வசனமாகிய
சத்தியத்துக்கு கீழ்படியவில்லை என்றால் உம்மிடம் சத்திய ஆவியானவர் இல்லை உன்னை உள்ளிருந்து உன்னை நடத்துவது வேறு எதோ ஒரு ஆவி!? உன்னை நீயே உய்ந்து ஆராய்ந்து சோதித்து பார்! உனக்கு அது நன்றாகவே தெரியும்.
இப்பொழுதே உண்மையை உணர்ந்து தேவனிடத்துக்கு திரும்பு. இல்லையேல் உன் முடிவு மோசமாககூடும்!
-- Edited by SUNDAR on Wednesday 17th of September 2014 07:57:05 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)