சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் உலகில் நடக்கும் கொடுமை துன்பங்களிநிமிதம் அதிக துக்கத்துக்குள்ளாகி இந்த உலகத்தில் மீளமுடியாத துன்பம் வேதனையில் வாடும் மனுஷர்களை மீட்க வழியே இல்லையா? என்று ஆண்டவரை நோக்கி அழுது புலம்பியதோடு மும்பை தெருக்களில் இரவு பகல் என்று பாராது பரத்தோடு அலைந்து திரிந்து பிளாட் பாரத்தில் படுத்து கிடந்தவன் நான்.
அப்பொழுது ஆண்டவர் எனக்கு தெரிவித்தது "இந்த உலகில் தீமை எதனால் வந்தது வந்தது? மனுஷர்களை துன்பபடுத்தி அதில் இன்பம் காணும் சத்துருவால்தானே. அவன் ஜெயிக்கபட வேண்டும். மனுஷர்களை பாவம் செய்ய தூண்டுகிறான், பின்னர் அதற்க்கான தணடனையை பெற்று கொடுத்து பார்த்து ரசிக்கிறான்.
இன்றும் பலர் சொரனையே இல்லாமல் துர்நாற்றம் எடுக்கும் கூவத்தில் குழிப்பதுபோல், என்னவென்றே தெரியாமல் அனேக மனுஷர்கள் பாவத்தில் மூழ்கி அத்தோடு பழகிபோய், தாங்களும் இடறி இன்னும் அநேகரை இடரவைத்துகொண்டு சத்துருக்கு சகோதரராக இருக்கிறார்கள் அதில் அனேக கிறிஸ்த்தவர்களும் அடக்கம்
சத்துருவுக்கு மனுஷர்கள் மேலுள்ள அதிகாரம் பிடுங்கபட வேண்டும் என்று சொன்னதோடு, அதை நிறைவேற்ற ஒரே வழி: ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு ஆவியானவரின் துணையுடன் தேவன் எழுதிக்கொடுத்துள்ள வார்த்தைகளை கைகொண்டு வாழ்வது மட்டுமே. எனவேதான் நான் வேதம் முழுவதும் என் கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன்"
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
என்று சொன்னதோடு, அதற்க்கான தொடர்புடைய வேத வசனங்களையும் விளக்கி காண்பித்தார்.
தேவன் தம் வார்த்தையை மாம்சமாக்கி தானே இங்கு வந்து 99% காரியங்களை செய்து முடித்துவிட்டார். வழிகளை ஏற்ப்படுத்தி கொடுத்தார், வாழ்ந்து காட்டிசென்றார், தம் ஆவியை தேற்றரவாளராக தந்துள்ளார். எனினும் மீதம் இருக்கும் அந்த சொற்ப செயலை செய்து முடித்து சத்துருவை ஜெயம்கொள்ள" முடியாத நிலையில் மனுஷன் இடறி விழுகிறான்.
சத்துருவை ஜெயம்கொள்ளும் வரை இந்த் உலகத்தில் துன்பம் ஒழியாது!
மனுஷன், தேவனோடு கூட இணைந்து கீழ்படிந்து ஒத்துழைத்தாலன்றி இது நடக்காது.
Matthew 19:26 - But Jesus beheld [them], and said unto them, With men this is impossible; but with God all things are possible
தேவனோடு இணைந்து அவர் சித்தத்துக்கு ஒப்புகொடுத்து செயல்பட்டால் எல்லாமே செய்ய முடியும்.
இயேசுவுக்காக மரிக்கவும் அநேகர் சித்தமாக இருக்கிறார்கள் ஆனால் இன்று தேவன் எதிர்பார்ப்பதோ "மரணமே வந்தாலும் நான் இயேசுவும் வார்த்தைகளை கைகொண்டு வாழ்வேன்" என்று அற்ப்பணிப்புடன் வாழ்வோரையே! அப்படிபட்டவர் யாரையும் பார்த்துள்ளீர்களா? மரிக்க துணியும் நாம் அவர் வார்த்தையை கைக்கொள்ள மாத்திரம் முடியாமல் தவிக்கிரோமே ஏன்?
"தன்னைப்போல (தன் பிள்ளைபோல) எல்லோரையும் நேசிக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை திருப்பி கொடுக்க வேண்டும், உள்ளதை உள்ளதென்றும் இல்லத்தை இல்லதென்றும் பேசவேண்டும், நமக்குண்டானத்தை விற்று பிச்சை போட வேண்டும், இரண்டு அங்கி இருந்தால் ஒன்றை இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும், கேட்பவனுக்கு கடன் கொடுக்க வேண்டும் அதை திருப்பி தருவார்கள் என்று எதிர்பாக்க கூடாது" இதுபோல் இன்னும் அநேகம் உண்டு.
இயேசுமேல் உயிரையும் வைத்திருக்கிறேன் அவருக்காக மரிக்கவும் ஆயத்தமாக இருக்கிறேன் என்று சொல்வோர்களே. உங்களை பார்த்து இயேசு சொல்லும் ஒரே வார்த்தை
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக்கைக்கொள்ளுவான், யோவான் 14:23
"இல்லையெனில் நீ பொய்யன்" என்று வேதம் திட்டமாக சொல்கிறது.
I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
ஆம்! அவர் வார்த்தைகளை கைகொள்ள பிரயாசம் எடுக்காத நீங்கள் எல்லோருமே அவர்மேல் அன்பாயிருக்கிறேன் என்று பொய் சொல்லுகிறீர்கள்.
வசனம் மாறாதது! நாமோ சத்துருவால் வஞ்சிக்கபட்ட நிலையில் இருக்கிறோம்.
ஆகையால் நான் எல்லோருக்கும் சொல்வது ஒவ்வொருவரும் இன்னும் அதிகமாக விடாபிடியாக வேத வார்த்தைகளை உங்கள் வாழ்வில் கைகொண்டு வாழ பிரயாசம் எடுங்கள்.
உபவாசம் இருந்து விடலாம், காணிக்கை போட்டுவிடலாம், சபைக்கு தவறாமல் போய்விடலாம், பிரசங்கம் செய்துவிடலாம், பெரிய சபையை கட்டிவிடலாம் ஆனால் இயேசுவின் வார்த்தைகளை கைகொள்ளுவது அதிக கஷ்டம்தான் என்பது அனுபவிக்கும் எனக்கு தெரியாமலில்லை. மனைவி ஒத்துழைக்க மாட்டாள், பிள்ளைகள் திட்டுவார்கள். உலகம் உன்னை ஏமாளி என்று பரிகசிக்கும், எதோ வினோதமான பூச்சியை பார்ப்பதுபோல ஏளனமாகதான் உன்னை பார்க்கும். ஆனால் வேறு வழியில்லையே!
ஆவியானவர் நிச்சயம் உதவி செய்வார். நம்மை சத்தியத்துக்குள் நடத்தவே அவர் அருளப்பட்டிருக்கிறார். அதற்க்கான தேவ பெலன் நமக்கு கொடுக்கப்படும்!
நிச்சயமாகவே ஒரு விடிவும் ஒரு முடிவும் உண்டு! நம் நம்பிக்கை வீண் போகாது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)