இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
Permalink  
 


மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
 
மத்தேயு 7:12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
 
இப்படி, சிநேகியுங்கள்/ செய்யுங்கள்/ பண்ணுங்கள் / நடவுங்கள் என்று  ஆண்டவர் திரும்ப திரும்ப சொல்லிய வசனங்கள் அநேகம் வேதத்தில் இருக்க, தலைப்பு வசனத்தில் "ஒன்றும் செய்யகூடாது"  என்று இயேசு சொல்வதை எடுத்துகொண்டு  "நாம் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இல்லை" என்று தவறாக சிலர் போதிக்கிறார்கள் 
 
ஒருபுறம் "செய்யுங்கள்" என்று திரும்ப திரும்ப சொன்ன இயேசு இன்னொருபுறம் "என்னாலேயன்றி ஒன்றும்  செய்யகூடாது" என்று சொல்ல காரணம் என்ன?  
 
"நன்மையின் ஊற்று தேவனிடமே உள்ளது அவராலேயின்றி அவர் தரும் பலத்தினாலேயன்றி எந்த நமையும் நாமாக முயன்று செய்ய முடியாது, எனவே நாம் செய்யும் எல்லா நன்மைக்கும் அவரே காரணர்" என்றுதான் போருள்ப்படுமேயன்றி, அவர் சொன்னதை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று எப்படி பொருள்படும்? என்று புரியவில்லை.
 
ஒருபுறம் "செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு இன்னொருபுறம் "செய்யவேண்டியதில்லை" என்று அவரே சொல்வாரா?   
 
நான் என் மகனிடம் கடையில் போய் காய்கறி வாங்கு/ மளிகை வாங்கு என்று சொல்லிவிட்டு பணமில்லாமல் ஒன்றும் வாங்கமுடியாது என்று சொன்னால் அதன் பொருள் என்ன?  
 
பொருள் வாங்க பணம் அவசியம் தேவை அதை கொண்டுபோய் எல்லாம் வாங்கு என்றுதானே பொருள்படும்?
 
அதேபோல் இயேசுவின் வல்லமை இல்லாமல் அவர் சொன்னதை செய்யமுடியாது, எனவே முதலில் ஆவியானவரின் வல்லமையை  பெற்று அதன் மூலம் அவர் சொல்லியிருக்கும் நன்மையை செய்யுங்கள் அவரின் வல்லமை இல்லாமல் நம்மால் சொந்தமாக ஒன்றும் செய்ய முடியாது என்று சுலபமாக புரியலாமே.    
 
"ஒன்றுமே செய்யவேண்டாம்" என்றால், அட்லீஸ்ட் ஆண்டவராகி இயேசுவை நம் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்ளவாவது செய்ய வேண்டுமா அதுவும் வேண்டாமா? 
 
எப்படி இப்படியெல்லாம் போதிக்க முடிகிறது என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை! 
 
மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்ட சபையை பார்த்துதான் ஆவியானவர்  சொல்கிறார் (நீ ஒன்றும் செய்யவேணாம் என்றல்ல)  
 
வெளி 2:16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
வெளி 3:3 ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு.  
 
என்று சொல்கிறார்  
ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்புவெளி 3:19

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Sam Daniel  /Sundararaj Paulraj அவர்களே மின் விசிறி காற்றை தருவதோ, கிரைண்டர் மாவை அரைப்பதோ, பல்பு வெளிச்சம் தருவதோ எப்படியோ அப்படிதான் இது. நீங்க அந்ந அந்த பொருட்கள் முக்கியமானது என்கிறீர்கள். நான் பொருள்களை விட அதை இயக்குகிற மின்சாரம் முக்கியம் என்கிறேன். மின்சாரத்துடன் இணைக்கப்படாவிட்டால் இந்த பொருள்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறேன். மனிதனின் ஜீவன் கிறிஸ்து . ஜீவாதிபதியுடன் இணைந்திருந்தால் கனி கொடுக்க முடியும். தன் வேலையை செய்து நிறைவேற்ற முடியும். ஜீவன் இல்லாவிட்டால் பொருள்கள் வெறும் ஜடமே. இதில் என்ன கருத்து வேறுபாடு தேவையோ புரியவில்லை.
58 mins · Edited · Like facebook
 
இங்கு எது முக்கியமானது என்பது விவாதம் அல்ல சகோதரரே. கிறிஸ்த்து இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது பல்புக்கு மின்சாரத்தைபோல/ வாகனத்துக்கு பெட்ரோல் போல் அவர்தான் முக்கியம் என்பதில் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. 

ஆனால் மனுஷர்கள் சும்மா இருந்தால் போதும் என்று சொல்கிறீர்களே அதில் தான் எனக்கு மாற்று கருத்தது உண்டு. 

என்னதான் மின்சாரம் அதிகமாக பவர் கொடுத்தாலும் பீஸ் போன பல்பு எரியாது! அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது. எனவே மின்சாரத்தை பெற்று ஒளிதர பல்பும் சரியான நிலையில் இருக்க வேண்டும். 

எனவே ஒளி தருவதில் 1% ஆவது சடப்பொருளாகிய பல்பிற்கு பங்கு இருக்கிறது. அந்த 1%ஐயும் சேர்த்து தேவன் செய்வார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில், அப்படி எல்லாவற்றையும் அவரே செய்து அவரே எல்லோரையும் தூக்கி சுமப்பதாக இருந்தால். மனுஷனை நோக்கி ஆவியில் எழிமையாய் இரு/ இரக்கமுள்ளவனாக இரு / என் வார்த்தைகளை கைக்கொள் என்று வெளிப்படுத்தின விசேஷம் கடைசி அதிகாரம் வரை அவர் திரும்ப திரும்ப போதிக்க வேண்டிய அவசியமே இல்லையே! என்பதுதான்.

இன்னும் ஒரு உதாரணமாக பார்த்தால்:
கிறிஸ்த்து சபைக்கு தலை என்று வேதம் சொல்கிறது. தலை இல்லாமல் ஒரு மனுஷன் ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனால் தலை ஒரு கட்டளை கொடுக்க கை அதை செய்யாமல் வேறு எதையோ செய்துகொண்டு இருந்தால் தலை நினைக்கும் செயல்பாடு நடக்குமா? 

எனவே மனுஷன் தன விசுவாசத்தோடு சேர்ந்து தேவனின் கட்டளைகளுக்கு கீழ்படிய ஒத்துழைத்தால் மட்டுமே தேவ திட்டம் பூமியில் நிறைவேறும். கிறிஸ்த்து தலையாய் இருந்துகொண்டு ஒன்றை சொல்ல சபைகள் உள்ளவர்கள் எல்லாம் பணத்தை சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டு இருந்தால் தேவ திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. 

எனவே தேவ திட்டம் /சித்தம் நிறைவேற மனுஷன் தேவனோடு சேர்ந்து அவருக்கு கீழ்படிந்து ஒத்துழைக்க வேண்டியது மிக மிக அவசியம். 

இதற்குமேலும்"மனுஷன் சும்மா இருந்தால் போதும்" என்று இயேசு சொல்லாத" ஒரு கருத்து தங்களுக்கு இருக்குமாயின் நான் எதுவும் சொல்வதற்கில்லை.


-- Edited by SUNDAR on Saturday 2nd of August 2014 02:34:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard