இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான்!
Permalink  
 


இயேசு சொன்னது :
 
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
 
நம்மை விடுவிக்கும் சத்தியமாவது என்ன? 
 
ஒரே வசன பதில்: 
யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
 
தேவனுடைய வசனமே சத்தியம்!
 
தேவனின் வசனமும் வார்த்தையும் யார்? 
 
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
 
தேவனின் வசனமும் வார்தையுமாகிய இயேசு சத்தியமாய் இருக்கிறார். எனவே அவரை அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.  
 
 
வார்த்தையாகிய இயேசு எவ்வாறு இருக்கிறார்? 
 
யோவான் 10:30 நானும் பிதாவும் ன்றாயிருக்கிறோம் என்றார்.
 
அவர் பிதாவோடு இணைந்து இருக்கிறார் எனவே பிதாவும் சத்தியம்  அவரையும் அறியவேண்டும். 
 
அடுத்து, 
 
என்னதான் நாம் சத்தியத்தை அறிந்தாலும், சத்தியத்தில் சரிவர நடக்க நம்மை பழக்குவிப்பவர் யார்? 
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
 
ஆம்! பரிசுத்த ஆவியானவரே நம்மை சத்தியத்துக்குள் நடக்க பழக்குவிப்பவர் அவரையும் நாம் அறிய வேண்டும்.
 
இதில் ஓன்று குறைவு பட்டாலும் நாம் பூரணராவது சாத்தியமில்லை!  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard