இந்த வசனமானது "நிற்கிறவன் எப்பொழுது வேண்டுமானாலும் விழ வாய்ப்புண்டு" என்ற எச்சரிப்பை நமக்கு போதிக்கிறது.
மிக உயரமான இடங்களில் பெயிண்ட் அடிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு மேலே ஏறுகிறார்கள். மேலே ஏறிய பின்னரும்கூட அவர்கள் சிறிது நிர்விசாரமாக இருந்தால் தவறி விழுந்துவிட அனேக வாய்ப்புண்டு எனவே எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த அநீதியான உலகத்தில் இருந்து கர்த்தர் நம்மை தன சொந்த ஜனமாக தெரிந்துகொண்டார் என்பது உண்மைதான். ஆனால் நம்மிடம் தேவனுக்கு பிரியமான நடக்கை இல்லாமல் நாம் துணிந்து தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்கிறவர்களாக இருப்போமாயின் அவர் எந்நேரமும் நம்மை தள்ளிபோட்டு வேறொருவரை அதே ஸ்தானத்துக்கு கொண்டுவரமுடியும்.
இங்கே எலியின் மகன்கள் கர்த்தருக்கு விரோதமாக செய்த கரியத்தினிமித்தம் கர்த்தர் தான் சொல்லியிருபதையே "அது தூரமாயிருப்பதாக" என்று சொல்லி அவர்களை தள்ளுவதை காணலாம்.
I சாமுவேல் 2:30ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர்சொல்லுகிறார்
இங்கு
கர்த்தர் தன கையில் மோதிரம்போல் மேலான நிலையில் ஒருவன் இருந்தாலும் அவனை கழற்றி எரிந்து விடுவேன் என்று கூறுகிறார்.
எரேமியா 22 : 24. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இங்கு செப்னா என்ற பொக்கிஷ காரனை தள்ளி அவன் இடத்தில் எலியாக்கீம் என்னும் ஒருவனை வைப்பதை நாம் காணலாம்.
ஏசாயா 22:15. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்
19. உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய்
20. அந்நாளிலே இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
21. உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்.
முதன் முதலில் ராஜாவாக அபிஷேகத்தை பெற்ற சவுல் அதை இழந்து அதே இடத்தில் தாவீது வைக்கபட்டத்தை நாம் அனைவரும் அறிவோம்.
இப்படி தேவனால் அங்கீகரிக்கபட்ட பல வேதாகம புருஷர்கள் தள்ளபட்டு நமக்கு திருஷ்டாந்திரமாக இருப்பதால் தேவனுக்கு முன்னால் நிற்கிறோம் என்று சொல்லும் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் விழும் சாத்தியங்கள் இருப்பதால் நிர்விசாரமாயிராமல் அதிக எச்சரிக்கையாக நிற்ககடவோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)