இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சக மனுஷர்களை நாம் ஏன் மனதார மன்னிக்க வேண்டும்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சக மனுஷர்களை நாம் ஏன் மனதார மன்னிக்க வேண்டும்?
Permalink  
 


ஒரு ஆவிக்குரிய கிறிஸ்த்தவரின் மனதில் யாரைபற்றியும் கசப்போ வஞ்சமோ இருக்கவே கூடாது. அப்படி இருக்குமாயின் அது ஒன்றே அவனை தேவனிடம் இருந்து பிரித்து மன்னிப்பு பெற தகுதி அற்றவர்களாக ஆக்கி நரக ஆக்கினைக்கு எதுவாக வழி  நடத்தும்.

 
எனவே நாம் இப்பொழுதே நம்மை நாமே சோதித்தறிந்து யார் மீதாவது நமக்கு கசப்பு /வஞ்சம்/வெறுப்பு/பழி வாங்கும் எண்ணம் இருக்குமாயின் உடனே அவர்களை மனதார மன்னித்துவிடுங்கள்.    
 
நாம் எதற்க்காக பிறரை மனதார மன்னிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்? 
 
1. நம் தப்பிதங்கள்/ பாவங்கள் தேவனால் மன்னிக்கப்படும்போருட்டு  நாம் மற்றவர்களை மன்னித்தே ஆக வேண்டும். 
 
மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
 
பிற  மனுஷனின் தப்பிதங்களை நாம் மன்னிக்கவில்லை என்றால் நமது தப்பிதங்கள் மன்னிக்கபடாது அதற்காக நாம் கட்டாயம் பிறரை மன்னிக்க வேண்டும். 
 
2. ஜீவனுள்ள எவனும் தேவனுக்கும் முன்னால் நீதிமானாக இல்லாத படியால் நாம் நம்போன்ற பிற பாவிகளையும் மன்னிக்க வேண்டியது அவசியம். 
 
சங்கீதம் 143:2 ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும்.
 
சங்கீதம் 14:3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; 
 
நம்மீது பாவமிருக்கும் பட்சத்தில் நாம் பாவியின் மேல் குற்றம் சுமத்த (முதலில் கல்லெறிய) முடியாது எனவே நமக்கு விரோதமானவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.
 
3. அவரவருக்கு வரும் சோதனைக்கும் வேதனைக்கும் அவனவனே பொறுப்பு ஆவான். 
 
யாக்கோபு 1:14 வனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
 
எனவே நமக்கு வரும் பிரச்சனைகளுக்கு நாம் யாரையும் குற்றம் சுமத்த முடியாது. நமக்கு எதிராளியானவன் நமக்கு தண்டனை கொடுக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியேயன்றி மற்றபடியல்ல.எனவே பிறர் மீது பழியை போடாமல் அவர்களை மனதார மன்னித்தல் அவசியம்.
 
4. தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு இரக்கம் காட்டியதால்,  நாம் பிறரின் குற்றங்கள் குறைகளை மன்னிக்க வேண்டியது அவசியம். 
 
எபேசியர் 4:32 கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
 
பாவியாகிய நமக்கு தேவன் இரங்கி கிறிஸ்த்துவின் மூலம் மன்னிப்பு அருளியதால் பிற பாவிகளுக்கு இரங்கவேண்டியது நமது கடமையாகிறது. 
 
 
5. இயேசுவின் மேல் நாம் அன்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்ய நாம் அவருக்கு செவிகொடுத்து அவர் கற்பனைகளை கைகொள்ள வேண்டும். எனவே 
 
லூக்கா 6:27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
 
என்ற இயேசுவின் கற்பனையை கைகொள்ளும் பொருட்டு நாம் பிறரை மன்னித்து அவர்களுக்காக ஜெபித்தல் அவசியமாகிறது. 
 
இறுதியாக:
தேவனால் படைக்கபட்ட எந்த மனுஷனுமே சுபாவத்தில் நல்லவன்தான். பிசாசானவன் அவனை நிறப்பும்போது அவன் தகாத தான்  விரும்பாத செயலைகூட செய்ய தூண்டப்படுகிறான். பிறகு தன தீய செயலுக்காக மனஸ்தாபபடுகிறான். 
 
யூதாசுக்குள் சாத்தான் புகுந்த பின்னரே அவன் இயேசுவை காட்டி கொடுத்தான், பின்னர் அதற்காக மனஸ்தாப பட்டான். 
 
லூக்கா 22:3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
 
பின்னர் அதற்காக மனஸ்தாப பட்டான். 
 
மத்தேயு 27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். 
 
எனவே ஒருவன் தீமை செய்வதில் சாத்தானின் பங்கு அதிகம் இருப்பதால் சாத்தானை மேற்கொள்ள முடியாமல் தவறு செய்த நம்போன்ற மனுஷர்களை மன்னிப்பது அவசியமாகிறது.
 
அன்பானவர்களே உங்களை தூற்றியவர்கள், ஏமாற்றியவர்கள், கொடூர வார்த்தைகளை பேசியவர்கள், குழிக்குள்ளே தள்ளியவர்கள் ஏன் காலால் உதைத்தவர்களுக்கு கூட இரங்கி அவர்களை  மனதார மன்னித்தால், நீங்கள் தேவனிடத்தில் மிகுந்த இரக்கம் பெறுவது உறுதி!  

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: சக மனுஷர்களை நாம் ஏன் மனதார மன்னிக்க வேண்டும்?
Permalink  
 


////Johnson Durai Mavadi commented on your status.
Johnson wrote: "எனக்கு தீங்கு செய்பவர்களை மன்னித்துவிட தேவனுடைய அன்பினால் முடிகிறது . ஆனால். ..ஏன் என்று தெரியவில்லை மற்றவர்களை வஞ்சித்துக்கொண்டு மனந்திரும்ப மனதில்லாமல் நல்லவர்களைப் பழிவாங்கி தேவனை தூசித்து என்னை எவனும் அசைக்கமுடியாது என்று நாள்தோறும் சிறுமைப்பட்ட ஜனத்தை ஒடுக்கும் கயவர்கள் மேல் மிக கோபம் வருகிறது .இது ஒருவேளை அவர்களை நான் மண்ணிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடுமா? என்று பல நாட்கள் தேவசமுகத்தில் கேட்டேன் . பொல்லாதவர்கள் மேல் எரிச்சல் அடையாதே அவனவன் செய்த கிரியைகளுக்குத் தண்டனை உண்டு அப்போது இதைக் காணும் போது அகங்காரமும் ,பெருமைக்கும் வரும் அழிவை கண்டு சந்தொசப்படுவாய். கூடுமானவரை சிறுமைப்பட்ட ஜனத்துக்காய் உன் வாயை திற ! என்று தேவனிடத்தில் இருந்து பதிலாக பெற்றேன்."////
 
 
மாம்ச வேகத்தில் செயல்பட்டு எகிப்த்தியனை கொன்றுபோட்ட மோசேவுக்கு நாட்டை விட்டு நல்ல வாழ்க்கையை விட்டு ஓடும் நிலை ஏற்ப்பட்டலும் அவன்தான் பின்னாளில்  மிகுந்த சாந்த குணமுள்ளவன் என்று கர்த்தரால் பாராட்டு பெற்றான்.  
 

சங்கீதம் 41:1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

என்று வேதம் சொல்கிறது. எனவே நிச்சயமாக சிறுமைப்பட்ட ஜனங்கள் மேல் நமக்கு இரக்க சிந்தை வேண்டும். 
 
ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் நமது ஒரே எதிராளி யார் நமக்கு யாரோடு போராட்டம் என்பதை சரியாக அடையாளம் காண வேண்டும். நம் எதிரி "பொல்லாத ஆவிகளும் சாத்தானுமேயன்றி சகமனுஷர்கள் அல்ல என்பதே"   
 
I பேதுரு 5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
 
எபேசியர் 6:12 மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
 
"மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல" என்பதால் அது நம்போன்ற மாம்ச மனுஷர்களோடு அல்ல என்று வேதம் நமக்கு திட்டமாக சொல்வதை நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
சக மனுஷர்களை நாம் ஏன் மனதார மன்னிக்க வேண்டும்?
Permalink  
 


சிறந்த உண்மைகளைகளை கூறும் பதிவு

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard