கர்த்தராகிய தேவன் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் நடத்தி வந்தபோது தன சொந்த விரலால் எழுதிய பத்து கற்பனைகளை கொடுத்தார்.
யாத்திராகமம் 31:18சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்டகற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
அக் கற்பனைகளை கண்டிப்பாக கருத்தாக கைகொண்டு நடக்க வேண்டும் என்று பல இடங்களில் திடகாத்திரமாக எச்சரித்தார்.
உபாகமம் 6:17உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.
நம் ஆண்டவராகிய இயேசு அந்த பத்து கற்பனைகளை சுருக்கி இரண்டு கற்பனைகளாக கொடுத்தார்:
மாற்கு 12:29இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதானகற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதானகற்பனை.
மாற்கு 12:31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
இப்படி சொல்லிய இயேசு இந்த இரண்டு கற்பனைகளுக்குள் நியாய பிரமாணம் மற்றும் தீர்க்க தரிசனம் அடங்கும் என்றும் சொன்னார்.
மத்தேயு 22:40இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
ஆகினும், ஆண்டவராகிய இயேசு தேவனின் கற்பனைகளை கைகொள்ள வேண்டும் என்று போதிக்க தவறவில்லை, தேவனின் கற்பனைகளை மீறி நடப்பவர்களை எச்சரிக்க தவறவில்லை:
மத்தேயு 19:17 நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
மத்தேயு 15:3அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
அவருக்கு பின்னால் வந்த இயேசுவின் ஊழியக்காரராகிய பவுல் அந்த இரண்டு கற்பனைகளை சுருக்கி ஒரே கற்பனையாக கொடுத்தார்.
ரோமர் 13:9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறேஎந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய்அடங்கியிருக்கிறது.
அதைகூட கைகொள்ள விரும்பாத அதற்க்கு பின்னால் வந்த இன்றைய அனேக ஊழியர்களும் தீர்க்கதரிசிகளும் "தேவனின் கற்பனைகளை நாம் கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை கிருபையும் விசுவாசமும் மட்டுமே போதும்" என்று போதித்து தேவனின் கற்பனைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்கள்!
ஆனால் பவுலும் மற்ற அப்போஸ்த்தலர்களும் தேவனின் கற்பனைகளை கைகொள்ள வேண்டும் என்றும் போதிதுதுள்ளார்கள். அது இன்றைய மேதாவிகள் கண்ணுக்கு தெரியவில்லை என்பதுதான் எனக்கு புரியவில்லை.
I கொரிந்தியர் 7:19விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
I யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
II யோவான் 1:6நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
II பேதுரு 2:21 அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
I யோவான் 5:3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடையகற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
அதுமட்டுமல்ல வெளிப்படுத்திய விசேஷம் கூட கற்பனைகளை கைகொள்ள வேண்டும் என்று போதிக்கிரத்தை காண முடியும்:
வலு சர்ப்பத்தின் முக்கிய எதிரி தேவனின் கற்பனைகளை கைகொள்ளுகிறவர்கள்தான் என்பதை இங்கு அறியலாம்
வெளி 14:12தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
மிக முக்கியமாக, தேவனின் கற்பனைபடி செய்கிறவர்களே விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் என்பதை இவ்வசனத்தின் மூலம் அறியலாம்.
வெளி 22:14ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
வேத வசனங்கள் இவ்வளவு தெளிவாக கற்பனையின் முக்கியத்தை விளக்கியிருக்க, மரணத்தை உலகத்துக்குள் கொண்டு வந்த சாத்தான் இப்படி மிக முக்கியம் வாய்ந்த தேவனின் கற்பனைகளை கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்து ஜனங்களை திசைதிருப்பும் தந்திரம்தான் என்ன?
மரணத்தை ஜெயிக்கும் ஜீவ விருட்சத்தை எவரும் சுதந்தரித்துகொள்ளவிடாமல் தடுப்பதே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)