இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உன்னைப்போல பிறரை நேசிக்க தெரியாத நீ குற்றவாளிதானே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
உன்னைப்போல பிறரை நேசிக்க தெரியாத நீ குற்றவாளிதானே!
Permalink  
 


தேவனின் மொத்த கற்பனைகளும் சுருக்கபட்டு ஒரே கற்பனையாக மாறியிருப்பதாக வேதத்தில் பதிவு செய்யபட்டுள்ளது.
 
ரோமர் 13:9 வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய்அடங்கியிருக்கிறது. 
 
இந்நிலையில் நாம் இந்த ஒரு கற்பனையை சரியாக கைகொள்ளவில்லை என்றால் தேவனின் மொத்த கற்பனைகளையும் கைகொள்ளாத நிலைக்கு தள்ளபடுவோம் என்பது உறுதியல்லவா?
 
எனவே அன்பானவர்களே இயேசுவை ஏற்றுக்கொண்டு மீட்பை பெற்று பரலோகத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு கிரிஸ்த்தவனும் இரட்சிக்கபடாத எந்த ஒரு மனுஷனையும் தன இருதயத்தில் அவமதிக்கமல் அவனுக்காக பரிதபிக்க கடவன்.
 
அவ்வாறு அவர்களுக்காக பரிதபிக்காமல் அவர்களை  நரகத்துக்கு பாத்திரவான்  என்று உங்கள் இருதயத்தில் நியாயம் தீர்த்து, அவர்களை அற்பமாக நினைப்பீர்கள் என்றால் நீங்கள் தேவனின் இந்த ஒரே கற்பனையையும் மீறுகிறீர்கள் என்பதை நிச்சயமாக அறியக்கடவீர்கள்.
 
எப்படியெனில், இந்த உலகத்தில் நானோ நீங்களோ அல்லது எந்த மனுஷனோ பிறக்கும்போதே பரிசுத்தவாளியாக பிறக்கவில்லை. அனேக பாவம் செய்து ஆகாதவர்களாக இருந்த நாம் எதோ தேவ கிருபையால் இன்று தேவனை அறிந்துகொண்டு மீட்பை பெற்றுள்ளோம். அது நம்முடைய முயற்ச்சியால் உண்டானதல்ல  "தேவனின் ஈவு" என்று வேதம் தெளிவாக சொல்கிறது. 
 
எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
 
உண்மை இவ்வாறு இருக்கையில், தேவனால் கிருபையை பெற்ற நாம் எப்படி நம்மை நாம் அதிகமாக  நேசித்து   பரலோக சந்தோஷ வாழ்வை வாஞ்சிக்கிரோமோ, அதே போல் நம்மை போன்ற மனுஷர்கள் ஒவ்வொருவரும் எப்படியாது தேவனின் கரத்தின் கீழ் வரவேண்டும் என்ற ஒரே மன்றாட்டை தவிர அவர்கள் நியாயம் தீர்க்கும் எண்ணம் உள் மனதில் இருக்குமாயின் நீங்கள் உங்களை நேசிப்பது போல் பிறரை நேசிக்கவில்லை என்றே தீர்மானிக்கப்படும் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள கடவீர்கள்.
 
 
ஏனெனில் நம் ஆண்டவராகிய இயேசு தன கரத்தின் கீழ் இருக்கும் 99 ஆட்டைவிட காணாமல் போன ஆட்டை குறித்தே அதிக கரிசனை உள்ளவராக இருந்து அது கண்டுபிடிக்கும் வரை தேடுபவராகவே வேதத்தில் அடையாளம் காட்டபட்டுளார்.
 
லூக்கா 15:4 உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
 
 
அதேபோல் தேவனும்கூட ஒருவரும் கெட்டுபோக கூடாது என்ற நோக்கத்தினால்யே தாமதித்து கொண்டு இருப்பதாக வேதம் சொல்கிறது.
 
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
 
மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
 
இப்படி ஒருவரும் கெட்டுபோகாமல் எல்லோரையும் மீட்பதே  பரலோக தேவனின் சித்தமாக இருக்கும், பட்சத்தில் நீங்களோ உங்களை போல மற்றவர்களையும் நேசிக்காமல்/ நேசிக்க முடியாமல் அவர்களுக்காக பரிதபிக்காமல், அவர்களை நரகத்துக்கு பாத்திரவான் என்று நியாயம் தீர்த்து, கடினமாக இருப்பீர்களானால் தேவனின் சித்தத்து எதிராக செயல்படும் அப்பிரயோஜமான ஊழியக்காரராக மாற வாய்ப்புள்ளதே!
 
"கர்த்தரை பகைக்கிரவரக்ளை நானும் முழு பகையாக  பகைப்பேன்" என்று சகீதக்காரன் சொன்னது பழைய ஏற்பாட்டு காலம். ஆனால் கர்த்தரே அவரை பகைத்த நமக்காக மரித்து நம்மை மீட்டெடுத்திருக்கும் நிலையில் நம்மைப்போல சக மனுஷர்களையும் நாம் நேசித்து அவர்களுக்காக பரிதபித்து அழ வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள்.   
 
எனவே அன்பானவர்களே! முடிவு சமீபமாக இருப்பதால், உங்கள் இருதயத்தில் எந்த மனுஷன்  மீதும் கசப்போ அவமதிப்போ வெறுப்போ விரோதமோ  இருக்காமல் எல்லோருக்காகவும் உண்மையாக முழு மனதோடு பரிதபித்து ஜெபியுங்கள்! அழுது ஜெபியுங்கள் அப்பொழுது உங்கள் இருதயம் தேவனுக்கு ஏற்ற பரிசுத்தமாக மாறும்.
 
இல்லையேல்!
 
மத்தேயு 7:2 நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்;  
 
தேவனின் பார்வையில் எவனும் முழு பரிசுத்தவான் இல்லை! எனவே நமக்கு சொல்லபட்டதை நாம் செய்வோம் துன்மார்க்கரை குறித்து வேத வசனம் என்ன சொல்கிறதோ அதை தேவன் பார்த்துகொள்வார் 
     

 



-- Edited by SUNDAR on Thursday 30th of October 2014 04:50:59 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard