சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அலையும் தெரு நாய் ஓன்று 5 குட்டிகளை போட்டது. அதில் இரண்டு குட்டிகள் செத்து போனது. மற்ற மூன்று குட்டிகளை எப்படியாது பாதுகாத்து பெரியதாக்கி விட வேண்டும் என்று எண்ணிய நான், எங்கள் வீட்டு கார் பார்க்கின் ஏரியாவில் சிறிதாக மறைப்பு அமைத்து தங்குவதற்கு ஏற்பாடு செய்து, தினமும் அதற்கு உணவு மற்றும் பால் ஊற்றி வந்தேன். ஆனால் அந்த நாய் குட்டிகளோ என்னுடைய உணவில் திருப்தி அடையாமல், அடிக்கடி தெருவில் சென்று பலர் வீட்டுக்குள் நுழைந்து பொறுக்குவதும் பின்னர் தெருவிலேயே படுத்து கொள்வதும் நான் வீட்டுக்கு வரும்போது மட்டும் என்னுடன் ஓடி வருவதுமாக இருந்தது.
நான் அதை பாதுகாப்பாக வைக்க எவ்வளவோ முயன்றும் அது தன தெரு பொறுக்கும் புத்தியை விடுவதாக இல்லை. சில நாட்களில் ஒரு குட்டியை யாரோ அடித்து கொன்று விட்டார்கள் என்று கேள்விபட்டேன். மீதம் இரண்டு குட்டிகள் இருந்தது அதையாவது எப்படியும் பாதுகாத்துவிட வேண்டும் என்று செயல்பட்டேன். ஆனால் அடுத்த சில நாட்களில் இன்னொரு குட்டி யாரிடமோ அடிபட்டு கத்தும் சத்தம் கேட்டது, நான் ஓடி சென்று பார்த்தும் அகப்படவில்லை. ஆனால் மறுநாள் காலை எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் செத்து கிடந்தது. கடைசியாக இருந்த இன்னொரு குட்டியையும் கூட யாரோ காலில் அடித்து அது நொண்டி நொண்டி நடந்துகொண்டு அலைகிறது.
எனக்கு இப்பொழுது அந்த நாய் குட்டியை பார்த்தாலே வெறுப்பாகி போனது. அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை.
இந்த சம்பவத்தை நான் மனதில் வைத்து சற்று யோசித்து பார்த்தபோது என் வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் நம் பரம தகப்பனின் செயல்பாடுகள்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.
நானும் தேவனும்!
மும்பை பட்டணத்தில் செம்பூர் பகுதியில் எந்த கட்டுபாடிமின்றி தெருவில் பொறுக்கிக்கொண்டு அலைந்த என்னை என் தேவன் அழைத்து அபிஷேகம் செய்து, என்னை சுத்திகரித்து நல்ல வாழ்க்கை ஒன்றை கொடுத்து என் வார்த்தைகளை கைகொண்டு இதன்படி நீ வாழ்ந்தால் உன்னை நான் உயர்த்துவேன் என்று வாக்கும் கொடுத்தார்.
ஆனால் எந்த கட்டுபாடுமின்றி தெருவியே அலைந்து பழக்கபட்ட நானோ அடிக்கடி அவர் வார்த்தைக்கு வெளியே பொய் பொறுக்குவதும் பின்னர் யாரிடமாவது அடிபட்டு வந்து ஆண்டவர் சமூகத்தில் மன்னிப்பு கேட்பதுமே என்னுடைய வழக்கமாக கொண்டிருந்தேன்.அனால் நான் வேதனை துன்பம் என்று வந்த எல்லா நேரங்களிலும் தேவன் என்னை மன்னித்து அன்போடு ஏற்றுக்கொண்டுள்ளார். சுமார் பத்து வருடங்களுக்கு பிறகுதான் ஓரளவுக்கு தேவனுக்கு கீழ்படிந்து நடக்கும் பக்குவத்தை பெற்றுள்ளேன். நான் இன்னும் தேவன் எதிர்பார்க்கும் முழுமையான நிலையை எட்டவில்லை என்றாலும் அவர் கரத்துக்குள் அடங்கி இருந்தால் நம் வாழ்வை குறித்த எந்த அச்சமும் தேவையில்லை என்றும் நமக்கும் நம் வீட்டாருக்கும
நிச்சயம் முழு பாதுகாப்பு உண்டு என்பதை மட்டும் என்னால் அருதியுட்டு சொல்ல முடியும்!
தேவனும் மனுஷர்களும்!
என்னை போலவே இன்று எந்த கட்டுப்படும் இல்லாமல் தெருவில் அலையும் எத்தனையோ மனுஷர்களை சத்துருவின் கையில் அடிபட்டு சாகாதபடிக்கு, எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்ற பரிதபிப்பில் தேவன் எத்தனையோ பிரயாசங்களை மேற்க்கொள்ளுகிரார்.
ஆங்காங்கே ஊளியக்காரர்களையும், தேவ மனுஷர்களையும் ஆவியில் ஏவி தெருவில் அலையும் மனுஷர்கள் செவியில் ஏறும்படிக்கு எச்சரிக்கிரார். ஆனால் பாதுகாப்பான இடத்தை விரும்பாமல் பாவத்தை தேடியே ஓடும் மனுஷர்களுக்கு அங்கு மரணம் நிச்சயம் என்பதை அறிந்தும் தேவனின் அழைப்பை ஏற்க்க மனதில்லாமல் செவிகளை மூடிக்கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் தெருவில் அடிவாங்கி அழுதுகொண்டு ஆயிரம் பிரச்சனைகளுடன் வாழக்கையை தள்ளுகின்றனர் ஆனாலும் ஆண்டவரின் காரத்துக்குள் வர அவர்களுக்கு மனதில்லை.
தெரு நாய் குட்டிகளை பாதுகாக்க முடியாத நானோ, ஓர் நாளில் சோர்ந்துபோய் அது எக்கேடும் கேட்டுபோகட்டும் என்று விட்டுவிட்டேன்!
ஆனால் தேவனோ நீடிய இரக்கம் உள்ளவராய் "இவன் வந்துவிட மாட்டானா! அவன் வந்துவிட மாட்டானா! மரண குழியில் இருந்து தப்பிவிட மாட்டானா" என்ற பரிதபிப்பில், இன்று வரை இடை விடாமல் மனுஷர்களை பாதுக்காக முயர்ச்சித்துகொண்டு இருக்கிரார்.
இப்பொழுதாவது இந்த கடைசி நாட்களிலாவது அவரின் ஈடு இணை இல்லா அன்பை புரிந்துகொள்ளுங்கள் இதயம் உங்களுக்கு உண்டானால் நலமாயிருக்குமே என் ஜனமே!
-- Edited by SUNDAR on Tuesday 9th of December 2014 11:32:01 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)