இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்சிக்கபட்ட ஆத்துமாவுக்குள் சாத்தான் உட்புக முடியாதா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இரட்சிக்கபட்ட ஆத்துமாவுக்குள் சாத்தான் உட்புக முடியாதா?
Permalink  
 


பிசாசாகிய சாத்தான் யாருக்குள்ளும் எந்த நேரத்திலும் உட்புகுந்து அவனை கெடுக்க முடியும். எனவேதான்

மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.என்று இயேசு சொல்லியிருக்கிரார்!

 

ஆதி திருச்சபையில் இருந்த விசுவாசிக்குள்ளேயே பிசாசாகிய சாத்தான் புகுந்து இருதயத்தை நிரப்பியது என்று வசனம் சொல்கிறது. 

 

அப்போஸ்தலர் 5 அதிகாரம் 3. பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

 

கொரிந்து சபையில் விபச்சார ஆவியுடயவனை சாத்தானுக்கு ஒப்பு கொடுப்பதாக பவுல் சொல்கிறார்.

 I கொரிந்தியர் 5 அதிகாரம் 1. உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொIண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.

5. அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடையகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
============================================================

ரட்சிக்க பட்ட பின்னர்கூட பிசாசு வைக்கும் கண்ணியில் விழுந்தால் மீழ்வது கடினம்.

எபிரெயர் 6 அதிகாரம் 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,

5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.

 

இப்படி ஒரு மனுஷன் திரும்ப புதுப்பிக்க முடியாதபடி எதனால் மறுதலித்து போகிரான்? சத்துரு என்னும் சாத்தான் வைக்கும் கண்ணியின் மூலமே. அதில் ஒருவன் விழும்போது அவன் இருதயம் முழுவதும் பிசாசால் நிரப்பப்படும். எனவே அங்கு பரிசுத்த ஆவியானவரால் இருக்க முடியாமல் துக்கத்துடன் வெளியேறுகிறார்.

கெர்ச்சிக்கிற சிங்கம்போல் சுற்றி திரியும் பிசாசாகிய சாத்தானை குறித்து நிர்விசாரமாக எண்ணிவிட வேண்டாம். ரட்சிக்கபட்ட பின்னர்கூட பிசாசு வைக்கும் கண்ணியில் விழுந்தால் மீழ்வது கடினம். ஒரு மனுஷன் எந்த நிலையில் இருந்தும் விழுந்துவிட கூடும் என்பதற்கும் ஜீவ புஸ்த்தகத்தில் பெயர் எழுதபட்ட பின்னர்கூட கிருக்கிபோடபட முடியும் என்பதற்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆவியானவரின் அனேக வார்த்தைகள் ஆதாரம்.

அன்னிய சப்பீராள் போல, யூதாஸ் போல சாத்தான் உள்ளே நிரப்பினால்தான் அவனை விழ வைக்க முடியும். எனவே இரட்சிக்கபட்ட்வர்களுக்குள் பிசாசு உட்புக முடியாது என்பது ஒரு தவறான கருத்து.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: இரட்சிக்கபட்ட ஆத்துமாவுக்குள் சாத்தான் உட்புக முடியாதா?
Permalink  
 


Word from facebook: 
///நம்முடைய மனதில் உட்புகும் பிசாசின் கிரியைகளான பொய்,பெருமை,மேட்டிமை,விபச்ச ரம்,இச்சை,பொருளாசை,பொறாமை,இகழ்தல் ....... போன்ற காரியங்களை, எந்த ஊழியர்களும் வெளியரங்கமாக இங்கு விரட்டவில்லை .... விரட்டவும் முடியாது…////
 
/// தேவனால் உலகத்தோற்றத்திற்கு முன்னமே முன் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, அவரது ஆளுகைக்குள் வாசம் செய்ய, நம்முடைய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மூலமாக தெரிந்து கொள்ளப்படப் போகிற, எந்த ஒரு ஆத்துமாக்குள்ளும், பிசாசு உட்புக முடியாது ///
 
 
சகோதரர் கூற்றுப்படி "பிசாசு உட்புக முடியாது, ஆனால் பிசாசின் கிரியைகள் மட்டும் செயல்படும்" என்று சொல்லுவது  "நாய் அங்கே இருக்காது ஆனால் குறைக்கும் சத்தம் மட்டும் கேட்கும்" என்று சொல்வதுபோல் இருக்கிறது.
 
தாங்கள் மீண்டும் மீண்டும் "பிசாசு உட்புகவே முடியாது" என்று அறுதியிட்டு சொல்லுவது, அநேகரை நிர்விசாரமாக வாழ தூண்டும் வார்த்தைகள்  என்பதை கருத்தில் கொள்ளவும். கள்ள ஊழியர்களை அடையாளம் காட்டுகிறேன் என்று சொல்லி நல்லவர்களை நிர்விசாரமாக்கலாமா? 
 
இரட்சிக்கபட்டு ஆதிசபையில் அங்கத்தினராக இருந்த அன்னிய சப்பீரால் இருதயத்துக்குள் சாத்தான் புகுந்தான்" என்று வசனம் தெளிவாக சொல்லும் பட்சத்தில் தாங்கள் எப்படி இவ்வாறு அறுதியிட்டு சொல்ல முடியும்?  
 
"வெளி 3:5  ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல்"  
 
என்று ஆவியானவர் சொல்வதன் மூலம் "தேவனால் தேர்வு செய்யபட்டு ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர கூட எதோ ஒரு கட்டத்தில் கிறுக்கிபோடபட வாய்ப்புள்ளது என்று அறிய முடிகிறதே  
 
மேலும், 
 
எபேசியர் 4:27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
 
என்று பவுல் எச்சரிக்க வேண்டிய அவசியம் என்ன?   இடம் கொடுத்தால் ஆகாதவனாக போய்விட வாய்ப்புண்டு என்பதனலேயல்லவா? 
 
இன்றைய ஊழியர்கள் பேய்களை விரட்டுவது சரியா தவறா என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. ஆனால் இரட்சிக்கபட்டு அபிஷேகம் பெற்று சாட்சியாக வாழும்  ஒரு சகோதரியினுள் மரித்துப்போன  ஒரு பாட்டியின் ஆவி வந்து சிலநாட்கள் தங்கியிருந்து நம்பவே முடியாத பல உண்மைகளை பேசியதை கண்கூடாக கண்டவன் நான். 
 
எனவே ஜெபம்/ வேத வாசிப்பு /ஆவியில் அனல் / பரிசுத்தமும்  இல்லாமல் இருந்து, சத்துருவுக்கு இடம்கொடுத்தால் ரோட்டில் அலையயும் எந்த ஆவியும்  யாருக்குள்ளும் வந்து புகுந்து வாசம் செய்ய முடியும்.
 
 
லூக்கா 11:26  தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்;
 
அதற்க்கு ஏற்ற எச்சரிப்பைதான் வேத வசனங்களும் சொல்கிறதேயன்றி. இரட்சிக்கபட்டவர்களுக்குள் பிசாசு உட்புகவே முடியாது என்று எந்த வசனமும் சொல்லவில்லை.
 
ஆனானபட்ட பவுலே  
I கொரி 9:27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
 
என்று எழுதி, தான் ஒருவேளை ஆகதவனாக போய்விட வாய்ப்புண்டு என்று எண்ணியிருக்கிறார். எனவே நாமும் எந்நேரமும் முடிவு பரியந்தமும் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard