"லூசிபர் நன்மை தீமை அறிந்தவனாக இருந்தான் அவனே ஏவாளை வஞ்சித்தான்" என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
லூசிபர் வஞ்சித்ததாலேயே ஆதாம் ஏவாள் இருவரும் பாவம் செய்தனர்.
இன்று தேவனால் படைக்கபட்ட நம்மையும் எப்பொழுது கெடுக்கலாம் என்று பிசாசு சுற்றி திரிவதாக வேதம் சொல்கிறது.
எனவே பரிசுத்தமான தேவனால் படைக்கபட்ட ஒருவரை வஞ்சிக்க ஒரு தீயவன் தேவைப்படுகிறான்..
லூசிபரும் தேவனால் படைக்கபட்டவனே ஒரு காலத்தில் தன் வழிகளில் குறைவற்று இருந்தவனே!
எசேக்கியேல் 28:15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன்வழிகளில் குறையற்றிருந்தாய்.
இவ்வாறு தன் வழியில் குறைவற்றிருந்த அவனை தீயவனாக்கியது யார்?
நான் கேட்பது விளங்க தாங்கள் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்
லூசிபர் மற்றும் தேவ தூதர்கள் யாரும் படைக்கப்படவில்லை. ஆதியில் தேவனும் அவர் குமாரனும் மட்டுமே அங்கு இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம் அந்த நிலையில் நண்மையை தவிர வேறு எதுவும் இருந்திருக்க முடியாதுதானே?
தேவன் பரிசுத்தர் எனவே இந்த உலகமோ எதுவும் தோன்றும் முன்னர் பரிசுத்தராகிய தேவன் மாத்திரம் இருந்திருக்கும் போது "நன்மை" தவிர வேறு எதுவுமே இருந்திருக்க வாய்ப்பில்லை தானே?
பின்னர் தேவன் தூதர்களை படைக்கிறார் என்று வைத்துகொள்வோம் அங்கு நன்மை மட்டுமே அறிய முடியும்! தீமையை அறியவேண்டி என்ன இருக்க போகிறது?
புரியவில்லை எனில் ஒரு உதாரணம் சொல்கிறேன்:
பெரிய காம்பவுண்ட் சுவருடன் ஒரு வீடு இருக்கிறது. அங்கு நன்மையே உருவான எனது அப்பா இருக்கிறார். அங்கு எல்லாமே நன்மையாகவே இருக்கிறது. நல்ல பழங்கள்/ நல்ல விளையாட்டு பொருட்கள்/ நல்ல மிருங்கங்கள் எல்லாமே அங்கு இருக்கிறது.
இப்பொழுது என் அப்பா என்னை அங்கு படைக்கிறார் என்று வைத்துகொள்வோம் எனக்கு தீமை என்றால் என்னவென்றே தெரியாதே! அந்த வீட்டுக்குள் இருக்கும் நன்மை மாத்திரம்தானே எனக்கு தெரியும். நான் தீமை செய்யவும் முடியாதே. நான் தீமையை அறிய வேண்டிய அவசியமும் இல்லையே!
இவ்வாறு இருக்க என்னை நன்மை/தீமை அறிந்தவனாக படைக்க வேண்டிய அவசியம் என்ன? இல்லாத ஒன்றை நான் எப்படி அறியமுடியும்? ஏன் அறிய வேண்டும்?
அப்படி நான் அறியவேண்டும் என்றால் அந்த தீமை எங்கிருந்து வந்தது?
தூதர்கள் நிலையும் இதுதானே!
அதாவது வேத கூற்றுப்படி ஆராய்ந்தால்
ஆதியாகமம் : 3 : 5 : நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது."
அதாவது தூதர்களுக்கும் தேவர்களுக்கு நன்மை தீமையைப் பற்றின அறிவானது படைக்கும் பொழுதே இருந்திருக்கின்றது எனவே சாத்தானுக்கு ஆதிமுதலே தீமையைப் பற்றின அறிவானது இருந்தது என எடுத்துகொண்டால்.
சாத்தானும் தூதர்களும் படைக்கப்படும்போதே இருந்த நன்மை தீமை பற்றிய அந்த அறிவில் "நன்மை"யானது பரிசுத்தராகிய தேவன் மூலமாக வந்தது, ஆனால் அவர்கள் அறிந்துகொண்ட "தீமை"யானது யார் மூலமாக உலகினுள் வந்தது?
இதுவே எனது கேள்வி .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மேலேயுள்ள கேள்விக்கு பதிலை ஆராயும் முன் நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இந்த உலகில் எது அதிகமாக / அதி வேகமாக செயல்படுகிறது?
நன்மையா அல்லது தீமையா?
சுட சுட போட்டு வைக்கும் ஒரு காப்பியை நாம் ஒரு இடத்தில் அப்படியே வைத்துவிட்டால் அது தானாகவே கெட்டு போய்விடும் அதை கெட்டு போக வைக்க யாரும் எந்த முயர்ச்சியும் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு செம்பு நிறைய இருக்கும் பாலில் ஒரே ஒரு துளி சாக்கடை நீரை கலந்தால் செம்பில் இல்ல பால் முழுவது அசுத்தமாகிவிடும் அதே நேரம் ஒரு செம்பு சாக்கடை நீரில் எத்தனை செம்பு நல்ல பாலை கலந்தாலும் அதை சுத்தமாக்க முடியாது?
இதை ஆராய்ந்தால் இந்த பூமியில் எது அதிகம் பவர் உள்ளதாக காணப்படுகிறது?
அதேபோல் ஒருவன் உலகில் மனுஷனாக பிறந்துவிட்டால் அவன் எந்த செயலும் செய்யாவிட்டாலும் கூட தானாகவே கெட்டு தீயவனாகிவிடுவான்.
தேவன் மனுஷனை உண்டாக்கியபோது அவனை செம்மையாகவே உண்டாக்கினர் என்று வேதம் சொல்கிறது:
தேவன் படைத்த அதே செம்மை நிலையை மனுஷன் இருக்க வேண்டியது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இன்று உலகில் நடப்பதென்ன? ஒரே ஒரு வாரம் தேவன் சொன்ன வார்த்தைகள்படி செம்மையாய் வாழ்வது என்பது மிகப்பெரிய மலையை கடப்பதுபோல் இருக்கிறது.
என்றும் வேதம் திட்டமாக சொல்கிறது ஆனால் இந்த் சாதாரண வார்த்தையை கைகொண்டு நடக்க நம்மால் முடிகிறதா?
பொய்யை பேசிக்கொண்டு, "தேவன் என்னை மன்னிப்பார்" என்று சொல்வோமேயன்றி பொய் பேசாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர் கூட மிக மிக குறைவு.
ஆம்! இந்த உலகம் முற்றிலும் தேவனின் வார்த்தைக்கு எதிரான நிலையில் தீமையால் நிறைந்திருக்கிறது. தீமைதான் ஒருவரை சுலபமாக பற்றிக்கொள்கிறதேயன்றி நன்மையை தேடினாலும் நிலைநிர்ப்பது கடினமாக இருக்கிறது.
ஏன் இப்படி? ஏன் தீமையின் வல்லமை எதிர்கொள்ள முடியாததாக இருக்கிறது?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)