ஒரு ஆவிக்குரிய பெண்மணி சமீப நாட்களாக புதிதாக சபை ஒன்றுக்கு போய் வருகிறாள். அந்த சபை பாஸ்டர் மற்றும் பாஸ்டரம்மா குறித்து புகழ்த்து பேசாத நாளில்லை என்று சொல்லலாம். "ஆராதனை தேவ பிரசன்னத்தால் நிரம்புகிறது" "அசுத்த ஆவிகள் ஓடுகிறது" "அவர் சொல்லும் தரிசனம் அப்படியே நிறைவேறுகிறது" அவர் மிகவும் நல்லவர், தாழ்மையனவர் உயிரை கொடுத்து பாடல்களை பாடுபவர் என்று ஒரு புகழாரம்தான்.
நான் எதையும் மறுக்கவில்லை, நிச்சயம் இருக்கலாம்! அதிகம் தேவனின் பாதத்தில் அமர்ந்து ஜெபித்தால் நிச்சயம் ஆவியானவர் பெரிய காரியங்களை செய்வார் என்பது நான் அறிந்த ஒன்றே.
ஆனால் இத்தனை அபிஷேத்தில் குளித்து, ஆராதனை செய்துவிட்டு அதிக நேரத்தை சபையில் செலவிட்டு தேவ பிரசன்னத்தில் மிதந்து வரும் என் அந்த பெண்மணியின் அடிப்படை குணத்தில் சிறிதேனும் மாற்றம் இல்லாததுதான் எனக்கு புரியாத மிகப்பெரிய புதிராக இருக்கிறது.
எடுத்ததற்க்கெல்லாம் கோபப்படுதல், கொஞ்சமும் கீழ்படியாத நிலை, பசங்களை அடிக்கடி திட்டுவது, பணத்தை விரயம் பண்ணுவது, அநேகநேரம் சோம்பேறியாக எந்த வேலையும் செய்யாமல் படுத்து கிடப்பது! என்பது போன்ற மேன்மையான குணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இப்படி நடைமுறை வாழ்க்கைக்கு எந்த பயனும் இல்லாததால் கூட்டத்தோடு சேர்ந்து ஓவென்று கத்தி ஊருக்கெல்லாம் கேட்கும்படி சத்தம்போடும் ஒரு ஆராதனையால் யாருக்கு என்ன பயன்?
அதையா தேவன் விரும்புகிறார்?
அல்லது சொல்லபட்ட வார்த்தைக்கு எதுவும் கீழ்படிய வேண்டாம் இப்படி கத்தி சத்தம்போட்டு ஆராதித்தால் போதும் நான் கனமடைது விடுவேன் அதைதான் நான் விரும்புகிறேன் என்று தேவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா?
ரோமர் 12:1சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
பலியாக கொடுக்கபட்ட சரீரம் எதற்கும் எதிர்த்து நிற்காதே எல்லாற்றிக்கும் தன்னை விட்டுகொடுக்குமே இதுவல்லவா புத்தியுள்ள ஆராதனை என்று வேதம் சொல்கிறது. ஆனால் இங்கோ எல்லாவற்றிக்கும் எதிர்த்து நின்றுகொண்டு நான் ஆவியில் நிரம்பி ஆராதிக்கிறேன் என்று சொல்வது எப்படி?
அத்தோடு வேத வசனங்களை கரைத்து குடித்து எங்கெல்லாமோ உள்ளேபோய் கருத்துக்களை பிரசங்கிக்கும் பாஸ்டர்கள்
கொலோ 3:18மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
எபேசியர் 5:22மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
என்பது போன்ற அடிப்படை கீழ்படிதல், ஒரு சாதாரண அன்பு நிலை போன்றவற்றை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகவும் கண்டிஷனுடனும் சொல்லிகொடுக்காமல் வேறு என்னத்தை சொல்லிகொடுக்கிறார்கள்?
பாஸ்டரை பெரிதாக மதிக்கும் ஸ்திரிகள், அவர் இதுபோன்ற கீழ்படிதலை அன்பை குறித்துகொஞ்சம் கண்டித்து அதிகமாக போதித்தால் அதற்க்கு கீழப்படிய வாய்ப்பிருக்கிறதே!
ஆனால் அந்த பாஸ்டர்கள் தங்கள் சபைக்கு கூட்டம் வந்தால் போதும் என்ற தொனியில் எதையோ போதிக்கிறார்கள்
"பேதுரு வலை நிறைய மீன் பிடித்தான்"
"இயேசு அப்பத்தையும் மீனையும் ஐயாயிரம் பேருக்கு பங்கு போட்டார்"
வீடு மாறியதிநிமித்தம் புதிதாக நான் செல்லும் எங்கள் சபைக்கு வரும் ஒரு அருமையான ஆவிக்குரிய சகோதரி உண்டு.
எந்த வசனம் சொன்னாலும் முதலில் எடுத்து படிப்பது அவர்கள்தான். எதற்க்கெடுத்தாலும் "ஆமென்" "அல்லேலூயா" என்று அதிகம் ஆவியில் நிறைந்து ஜெபிக்கும், பாஸ்டருக்கு ஓடி ஓடி ஊழியம் செய்யும், "இயேசப்பா என்னை அப்படி பாதுகாத்தார்" "என் பிள்ளையை இப்படி பாதுகாத்தார்" என்று அழுது அழுது அடிக்கடி சாட்சி சொல்லும். நமக்கும் கூட அதன் சாட்சியை கேட்டால் அழுகை வந்துவிடும் அப்படி உருகி உருகி ஆண்டவரை பற்றி சொல்லி மேன்மைபடுத்தும்.
அவர்கள்தான் அந்த சபையிலேயே அதிகம் ஆவிக்குரிய பெண்மணி என்று நானும் எண்ணியிருந்தேன்
ஆனால் சில வாரங்களாக அந்த சகோதரி சபைக்கு வருவதை நிருத்திக்கொண்டது.
அவர்கள் ஏன் சபைக்கு வரவில்லை என்று என் பாஸ்டரிடம் போன் பண்ணி விசாரித்த போது அவர் சொன்ன பதில்:
அந்த சகோதரி பாஸ்டரிடம் எதோ அவசர தேவை என்று சொல்லி ஏற்கெனவே ரூ 5000/- வாங்கிவிட்டு பல நாட்கள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லையாம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் போன் பண்ணி இன்னொரு 5000/- மிக அவசரமாக வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். பாஸ்டரிடம் பணம் இல்லாததால் அவர் கொடுக்கவில்லை எனவே சபைக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள்.
அந்த சகோதரிக்கு தெரிந்த ஒரு ஆஸ்பிட்டலில் வேலை வாங்கி கொடுத்தாராம் பாஸ்டர் ஆனால் அங்கு சக வேலை பார்க்கும் பெண்ணிடம் பயங்கர சண்டை போட்டுவிட்டு வேலையை விட்டு நின்றதோடு, வேலை பாரத்தை 12 நாளுக்கும் உடனே சம்பளத்தை
வாங்கி தாருங்கள் என்று பாஸ்டரிடம் விடா பிடியாக கேட்டுள்ளது.
பாஸ்டர் ஆண்டவரை பற்றி சொல்லி சபைக்கு அழைக்க அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு பக்கத்து விட்டுக்கு சென்றாராம். ஆனால் அவர்களோ இந்த பெண் வரும் சபை என்றால் நாங்கள் வரவே மாட்ட்டோம் என்று சொல்லும் அளவுக்கு தங்கியிருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டு பெண்களிடம் எல்லாம் மோசமான கேட்ட வார்த்தைகள் பேசி சண்டையிட்டுள்ளதாம்.
இப்படி வெளியில் எல்லாம் சத்துருவின் குணத்துடன் நடந்து கொண்டு சபைக்குள் ஆவிக்குரிய வேஷம் போடும் இவர்கள் போன்றவர்களின் கனியற்ற வாழ்க்கையால் தேவனின் நாமம் எவ்வாறு மகிமைப்படும்?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்று ஆராதனையை வெறும் கைதட்டுதலும் அபிஷேகத்தில் துள்ளுவதும்,சத்தமாய் துதிப்பதும் என்ற பாரம்பரியத்துக்குள் அடக்கிவிட்டார்கள்.
ஒருவன் கிறிஸ்துவின் அன்பை உணரும்போது மிக சத்தமாய் தேவனை நோக்கி கதறுவான் அப்படியான நொருங்குண்ட இருதயத்தின் சத்தம் இல்லாமல் இப்போது பாரம்பரியமான உணர்ச்சிவசப்படும் சத்தமாக மாறிப்போய்விட்டது!
தேவனை நன்றியோடு கைகள் தட்டி மகிழ்ச்சியோடு பாடல்பாடும் தன்மைகள் இல்லாமல் இன்று கரங்களின் ஓசையை எழுப்பவேண்டும் என்று ஊழியர்களின் கட்டாயத்தால் கைதட்டி உள்ளான மகிழ்ச்சி இல்லாமல் உள்ளான உணர்வும் இல்லாமல் கைத்தட்டும் ஓசைகள் அரங்கேற்றப்படுகிறது.
அன்று தேவனுடைய அபிஷேகத்தால் செத்தவனைப்போல விழுந்து கதறி அழுது தேவனே நான் அசுத்த உதடுள்ள மனுசன் என்று புலம்பி பாவ அறிக்கை செய்தது இன்றோ அது இல்லாமல் வெறும் பாடல் இசையின் உணர்ச்சியாலும் போதகரின் நவீன ஒலியை எழுப்புவதாலும் பரவசம் அடைந்து தலையை ஆட்டிக்கொண்டு குதிக்கிறார்கள்.
ஆவிக்குரிய கனியில்லாத எல்லாம் செயலும் தேவனுக்கு முன்பு மாய்மால நடிப்பாகவே தெரியும் தேவன் உள்ளத்தின் ஆழத்தில் உருவாகும் சிந்தைனையை அறிகிறவர்.