கடந்த நாள் காலையில் மிக நெருங்கிய ஒருவரின் தவறான வார்த்தை மற்றும் செயல்பாட்டிநிமித்தம் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. நான் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் மிக கடினமாக பேசிவிட்டார்.
"இனி எந்த ஒரு காரியத்துக்கும் இவரிடம் வரவே கூடாது, இனி அவருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இருக்க கூடாது அவர் யாரோ நான் யாரோ" என்றும் எண்ணிக்கொண்டு மிகுந்த வருத்தம் மற்றும் கோபத்துடன் அலுவலகம் கடந்து வந்தேன்.
சுமார் 3 மணிக்கும் என்னை தொடர்பு கொண்ட அந்த நபர் "என்ன லஞ்ச் முடிந்ததா? காலையில் நடந்த சம்பவத்திநிமித்தம் மனதுக்கு கஷ்டமாக இருந்தது அதுதான் போன் பண்ணினேன்" என்று சொன்னதுதான் தாமதம் என் கோபம் ஆதங்கம் எல்லாமே எங்கோ போய்விட்டது மனது கரைத்துவிட்டது. மிக சாதாரணமாக எதுவுமே நடக்காத மாதிரி பேசிவிட்டு போனை வைத்துவிட்டேன். மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
அற்ப மனுஷனாகிய நானே இவ்வாறு இருக்கும்போது அன்பே உருவான தேவன் எப்படிபட்டவராக இருப்பார் என்று சற்றே யோசித்து பாருங்கள்.
நாம் எப்படிபட்டவர்கள் நமது பெலகீனம் என்ன நாம் எந்த அளவு பரிசுத்தமாக செயல்பட முடியும் எதெல்லாம் செய்யமுடியாது எங்கெல்லாம் நாம் விழுவோம் என்பதெல்லாம் பற்றி தேவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் தன்னையே நமக்காக தந்து மேலான மன்னிப்பை நம் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தை உண்டாக்கினார்.
நாம் எந்தனை முறை பாவம் செய்தாலும் அதினிமித்தம் மனஸ்தாப பட்டு தேவனிடம் வந்து நிற்கும்போது அவர் மன்னிக்க தயாராக இருக்கிறார் இல்லை இல்லை ஒருவரை மன்னிக்க அவர் ஆவலாய் ஏங்குகிறார் என்றே சொல்ல வேண்டும்.
பாவம் செய்து சாகும் எந்த ஒரு ஆத்துமாவின் சாவையும் அவர் விரும்பவேயில்லை!
எசேக்கியேல் 18:32மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
பாவத்தை செய்துவிட்டு நியாயப்படுத்தி நிர்விசாரமாக இருக்காமல் அதை உணரும் இருதயம் வேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு. எனவே பாவம் செய்து விட்டதாக ஆவியானவரால் உணர்த்தபாட்டால் தாவீதைபோல மனஸ்தாபபட்டு மன்னிப்பு கேட்போம். ஒரு சில பாவம் செயதவுடேன் இனி அவ்வளவுதான் என்று சோர்ந்து போகாமல் வேறு எதை செய்கிறோமோ இல்லையோ தேவ கிருபையை விட்டு மாத்திரம் விலகாமல் இருப்போமாக!
துன்மார்க்க வழியை விட்டு ஒருவன் திரும்பினால் போதும் நான் உன்மேல் மனதுருகுவேன் என்று உருக்கத்தோடு சொல்கிறார்.
ஏசாயா 55:7துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில்திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயைபெருத்திருக்கிறார்.
தன்னிடம் வரும் எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை என்று நம் ஆண்டவர் வாக்கு கொடுத்திருக்கிறாரே!
யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)