ஆவியில் நடத்தப்படும் நாம் பல நேரங்களில் "ஒரு சில குறிப்பிட்ட காரியம் குறித்து அதை செய்யலாமா, கூடாதா? அது சரியா அல்லது தவறா" என்பதை அறியாமல் குழம்பி போகிறோம்.
உதாரணமாக:
என் உறவினர் மூலம் நான் எனது கம்பெனி சார்பில் ஒரு வருமானம் ஈட்டினேன். அதில் ஒரு பகுதியை நான் எடுத்துகொண்டு மீதியை மட்டும் கம்பெனி கணக்கில் போடலாமா.
வேறு ஒருவருக்கு ஒரு டிக்கட் கேன்சல் செய்ததில் பணம் எதுவும் கிடைக்காது சொல்லிவிட்டேன். ஆனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் எதிர்பாராத விதமாக ஒரு பணம் திரும்ப கிடைத்தது. அந்த பணத்தை அவருக்கு திருப்பி கொடுப்பதுபோல் ஒரு வவுச்சரை போட்டு அதை நான் எடுத்து கொள்ளலாமா.
ஒரு முதலாளிக்கு நான் ஒரு வேலை செய்து கொடுத்தேன். அந்த வேலை நான் தான் செய்தேன் என்றால் அவர் பணம் எதுவும் தர மாட்டார். எனவே வேறோ ஒருவரிடம் பில் வாங்கி கொடுத்து பணம் வாங்கலாமா
மீசைக்கு மை போடலாமா? தலைக்கு டை அடிக்கலாமா?
பஸ்ஸில் பயணம் செய்துவிட்டு ஆட்டோ சார்ஜ் கிளைம் பண்ணலாமா?
மருத்துவ தேவைக்காக மதுபானம் பண்ணலாமா?
என்பது போன்ற பல குழப்பங்கள் நமக்கு வருவது உண்டு. இது குறித்து நீண்ட நாட்களாக எந்த முடியும் எடுக்காமல் ஆண்டவரிடம் விசாரித்து கொண்டே இருந்தேன்.
இவ்வாறு சில காரியங்களை குறித்து பவுல் சொல்லும் போது
என்றும் சொல்லியிருக்கிறார் அனால் இந்த வசனங்கள்மூலம் ஒரு தெளிவான ஒரு முடிவை என்னால் எட்ட முடியாத காரணத்தால் இது குறித்து நீண்ட நாட்களாக எந்த முடியும் எடுக்காமல் ஆண்டவரிடம் விசாரித்து கொண்டே இருந்தேன்.
அதற்க்கு ஆண்டவர் எனக்கு கொடுத்த பதில் இதோ:
நீ என்ன செய்கிறாயோ/ சொல்கிறாயோ அந்த செயல்கள் பேச்சுக்கள் எல்லாம் ஒரு நாளில் எல்லோருக்கும் பகிரங்கமாக தெரிவிக்கப்படும்
லூக்கா 12:3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னதுஎதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
அவ்வாறு சொல்லப்படும்போது "நல்லவன் என்று நாம் நினைத்த இவன் இப்படி செய்திருக்கிறானே" என்று எவர் ஒருவரும் மனத்தாக்கல் அடையாத அல்லது அடைய முடியாத எந்த ஒரு செயலும் நீ செய்யலாம் அதற்க்கு மிஞ்சியது தீமையால் உண்டானது என்றார்.
எனவே மேலே சொன்ன இரண்டு எண்ணங்களையும் நான் கைவிட்டுவிட்டேன். காரணம் என் வேலை ஸ்தலத்திலும் சரி எனக்கு தெரிந்தவர்கள் மத்தியிலும் சரி நான் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாக நடக்க வாஞ்சிக்கிறேன். நான் கிறிஸ்த்தவன் என்று அவர்களுக்கு நிரூபித்திருக்கிறேன். இந்நிலையில் அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் அனுமதியின்றி எந்த ஒரு பணத்தை எடுத்தாலும் அவர்கள் நிச்சயம் "இவன் இப்படியெல்லாம் பணம் சம்பாதித்திருக்கிரானா" என்று எண்ணி நிச்சயம் மனத்தாக்கல் அடைவார்கள எனவே எனது எனக்கு தேவையே இல்லை என்று விட்டுவிட்டேன்.
அதுபோல் ஒவ்வொருவரும் தாங்கள் பிறருக்கு மறைத்து ஒரு காரியத்தை செய்யும்போது ஒருவேளை அந்த காரியம் நாளைக்கு பகிரங்கமாக எல்லோருக்கும் தெரிவிக்கபட்டால் அதனால் யாரும் நம்மீது வேதனையோ வருத்தமோ அடையாதபடிக்கு இருக்கும் காரியங்களை மாத்திரம் செய்வோம்.
மற்றது எல்லாமே தீமையினால் உண்டானதுதான்!
1. பிறரை பற்றி அவர் இல்லாத நேரத்தில் புறம் கூறுகிறோம்
2. பிறர் இல்லாத நேரத்தில் அவர்கள் பொருள்களை கடினமாக கையாளுகிறோம்
12. நமக்கு வரும் துன்பத்துக்கு யார்மீதாவது பழியை போடுகிறோம்.
இப்படி நம் மனதில் நினைப்பது பிறருக்கு தெரியாது என்று எண்ணியோ பிறர் கண் மறைவான நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் யாராலும் அறிய முடியாது என்று எண்ணியோ காரியங்களை செய்யாமல், நாம் செய்யும் இந்த காரியம் நாளை எல்லோரு முன்னிலையிலும் பகிரங்கமாக வெளியில் தெரிந்தால் நம் நிலை என்ன என்பதை சற்று யோசித்து செய்வோமாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அதுபோல் ஒவ்வொருவரும் தாங்கள் பிறருக்கு மறைத்து ஒரு காரியத்தை செய்யும்போது ஒருவேளை அந்த காரியம் நாளைக்கு பகிரங்கமாக எல்லோருக்கும் தெரிவிக்கபட்டால் அதனால் யாரும் நம்மீது வேதனையோ வருத்தமோ அடையாதபடிக்கு இருக்கும் காரியங்களை மாத்திரம் செய்வோம்.
.......//
சகோதரர் சுந்தர் சொல்வது மிகவும் சரியானதே,
இந்த உலகத்துக்கு சரி என்று தெரிவது நாளை தேவனின் பார்வையில் தவறாக இருக்க நேரிடும்
ஆகவே வேதம் சொல்கிறபடி
மத்தேயு, அதிகாரம் – 5 :37. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
சரி தவறு, அல்லது நல்லது கெட்டது என்று தன் சொந்த அறிவின்படி அவிசுவாசிகள் உட்பட, உலகில் பலர் நடக்கின்றனர். விசுவாசிகளாகிய நாமோ இதற்காக அழைக்கப்படவில்லை. நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம், நமக்குள் இருக்கும் கிறிஸ்து. நமக்குள் இருக்கும் இவரே, இவருடைய பேசுதலே, நம் வாழ்க்கைக்கான தரம். கொலோசெயர் 3 15 "தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது" என்று கூறுகிறது. கொலோ. 3 16, "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக" என்று கூறுகிறது. கிறிஸ்துவின் வசனம் நமக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருக்கும்போது, அதாவது அவருடைய பேசுதல் நமக்குள் சுதந்தரமாக வாழும்போது, அது நமக்கு சகல ஞானமாக இருக்கிறது. மேலும், நமக்குள்ளே இருக்கும் தேவ சமாதானத்தின் உணர்வே "சிக்னல்". ஒரு காரியத்தைச் செய்யும்போது நமக்குச் சமாதானம் இல்லை என்றால், அது "ரெட் சிக்னல்", நாம் அதை செய்யக்கூடாது, ஆனால் சமாதானத்தை நாம் இழக்கவில்லை என்றால், அது "க்ரீன் சிக்னல்", நாம் செய்யலாம். சமாதானம் இல்லாமல் சரியான எதைச் செய்தாலும் அது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல, மாறாக அது வெறுமனே ஒரு மதரீதியான, நன்னெறியான வாழ்க்கை. அதற்குக் கிறிஸ்து நமக்குள் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை. இந்த கிறிஸ்துவின் வசனத்தையும், உள்ளான சமாதானத்தைப் பின்பற்றி நாம் வாழ்ந்தால், நம் வாழ்க்கை சரி தவறு, செய் செய்யாதே போன்ற மதரீதியான சட்ட திட்டங்களின்படி இல்லாமல், நமக்குள் வாழ்கிற கிறிஸ்துவின் சமாதானத்தின்படி, அவர் நம்மை நோக்கி செய்யும் புன்னகையின்படி, இருக்கும்.
This is from the Amplified Bible And let the peace (soul harmony which comes) from Christ rule (act as umpire continually) in your hearts [deciding and settling with finality all questions that arise in your minds, in that peaceful state] to which as [members of Christ's] one body you were also called [to live]. And be thankful (appreciative), [giving praise to God always].
16 Let the word [spoken by] Christ (the Messiah) have its home [in your hearts and minds] and dwell in you in [all its] richness, as you teach and admonish and train one another in all insight and intelligence and wisdom [in spiritual things, and as you sing] psalms and hymns and spiritual songs, making melody to God with [His] grace in your hearts.
17 And whatever you do [no matter what it is] in word or deed, do everything in the name of the Lord Jesus and in [dependence upon] His Person, giving praise to God the Father through Him.
-- Edited by Samson on Thursday 19th of March 2015 10:50:28 PM
///சரி தவறு, அல்லது நல்லது கெட்டது என்று தன் சொந்த அறிவின்படி அவிசுவாசிகள் உட்பட, உலகில் பலர் நடக்கின்றனர். விசுவாசிகளாகிய நாமோ இதற்காக அழைக்கப்படவில்லை.///
சகோதரர் அவர்களே, நான் சொந்த அறிவின்படி நடப்பதற்கு இங்கு சொல்லவில்லை வேத வசனங்களை கைகொண்டு நடக்கவேண்டும் என்று தேவன் சொன்னதையே திரும்ப சொல்கிறேன்.
அதற்க்கு இயேசு சொன்ன வசன ஆதாரம் :
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்,
///நமக்குள்ளே இருக்கும் தேவ சமாதானத்தின் உணர்வே "சிக்னல்". ஒரு காரியத்தைச் செய்யும்போது நமக்குச் சமாதானம் இல்லை என்றால், அது "ரெட் சிக்னல்", நாம் அதை செய்யக்கூடாது, ஆனால் சமாதானத்தை நாம் இழக்கவில்லை என்றால், அது "க்ரீன் சிக்னல்", நாம் செய்யலாம்.///
தேவனோடு வாழ்ந்த ஆதாம் ஏவாள், தேவ அபிஷேகம் பெற்ற தாவீது, சவுல், இயேசுவோடு இருந்த யூதாஸ், புதிய ஏற்ப்பட்டு விசுவாசிகள் அன்னிய சபீராள் இவர்களில் யார் தங்கள் பாவத்தை செய்யும் முன்னர் சமாதானத்தை இழந்ததாக வேதம் சொல்கிறது?
எல்லோருமே பாவத்தை செய்து முடித்த பின்னர்தான் சமாதானத்தை இழந்திருக்கின்றனர்.
சில காரியங்களுக்கு தேவன் முன்னமே எச்சரிக்கை சிக்னல் கொடுக்கலாம் ஆனால் வேதத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் காரியத்தை துணித்து ஒருவர் மீறி நடக்கும்போது எந்த எச்சரிப்பும் வராது பின்னர் தண்டனைதான் வரும்.
செய்யும் தவறிநிமித்தம் சமாதானத்தை இழத்தல் என்பது கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல மனசாட்சியுடைய எல்லோருக்குமே அது தேவன் வைத்திருக்கும் ஒரு எச்சரிக்கை மணி.
கொடிய பாவம் செய்த வேற்று மதத்தோர் கூட மன சாட்சியின் உருத்துதலினால் நீண்ட நாட்களுக்கு பின்னர் உண்மைகளை ஒத்துகொண்டது உண்டு.
ஆனால் எல்லோருக்கும் தவறுகளை செய்யும் முன் சமாதான இழப்பு வராது
சில பாவங்களுக்கு செய்யும் முன்னே எச்சரிப்பு வரும்
சில தவறுகளுக்கு செய்யும் போதே எச்சரிப்பு வரும்.
சில தவறுகளுக்கு செய்து முடித்தபின்தான் சமாதான இழப்பு வரும்.
சில பாவங்களுக்கு எப்பொழுது சமாதான இழப்பு வரும் என்பதே தெரியாது.
கர்த்தரின் அபிஷேகம் தாவீதின்மேல் இருந்தும் அவன் உரியாவை கொலை செய்யும்வரை சமாதானத்தை இழந்ததாக தெரியவில்லை.
///சமாதானம் இல்லாமல் சரியான எதைச் செய்தாலும் அது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல, மாறாக அது வெறுமனே ஒரு மதரீதியான, நன்னெறியான வாழ்க்கை. அதற்குக் கிறிஸ்து நமக்குள் இருக்கவேண்டும் என்ற தேவை இல்லை. இந்த கிறிஸ்துவின் வசனத்தையும், உள்ளான சமாதானத்தைப் பின்பற்றி நாம் வாழ்ந்தால், நம் வாழ்க்கை சரி தவறு, செய் செய்யாதே போன்ற மதரீதியான சட்ட திட்டங்களின்படி இல்லாமல், நமக்குள் வாழ்கிற கிறிஸ்துவின் சமாதானத்தின்படி, அவர் நம்மை நோக்கி செய்யும் புன்னகையின்படி, இருக்கும்///
தங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்,
இன்றைய நாட்களில் ஆவிக்குரிய நிலையில் உயரத்திருக்கும் சிலர் கூட மிக சாதாரணமாக பொய்களை சொல்வதை நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறு பொய் சொல்வதால் எத்தனை கிறிஸ்த்தவர்கள் சமாதானத்தை இழக்கிறார்கள்?
இவ்வாறு அவர்கள் சமாதானத்தை இழக்காமல் பொய் சொல்கிறார்கள் என்றால் அதை இயேசு அங்கீகரிக்கிறாரா? அல்லது இயேசு சொன்ன கீழ்கண்ட வசனங்கள் தேவையற்றதா?
மத்தேயு 5:37உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
தாங்கள் சொல்ல வருவது என்ன? வேத வசனம் சொல்லும் வார்த்தைகளை நாம் கைகொண்டு நடக்க பிரயாசம் எடுப்பது அவசியமா அல்லது உங்களுக்கு சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் எதை வேண்டுமானலும் செய்யலாமா ?
சற்று பதில் தாருங்கள்.
-- Edited by SUNDAR on Wednesday 25th of March 2015 03:25:42 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)