இன்று ஒவ்வொரு உயிரினமும் வேறு சில உயிரினங்களை பகைக்கவும், கொல்லவும்! ஏன், தன சொந்த இனத்தையே ஒன்றை ஓன்று பகைத்து வெறுக்கும் நிலையில் இருக்கின்றன. ஓரிடத்தில் இருக்கும் நான் வேறு இடத்துக்கு போனால் மற்ற நாய்கள் எல்லாம் சேர்ந்து கடிக்கின்றன. நாய்கள் ஏன், ஆறறிவு உள்ள மனுஷர்களே மிருகங்கள்போல நடந்து சக மனுஷர்களை பகைக்கவும் கொடூரமாக கொல்லவும் துணிகின்றனர். அத்தனைக்கும் காரணமாக இருக்கும் அந்த "பகை" எங்கே எவ்வாறு உருவானது!
ஆதியாகமம் 3:15உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
அது ஏதேன தோட்டத்திலேயே முதல் முதலில் உண்டானது!
மனுஷன் செய்த பாவத்தின் காரணமாகவே "பகை" உண்டானது
பகையை உண்டாக்கியது தேவனின் சாபம் போல தெரிந்தாலும் அதற்க்கு தேவன் காரணர் அல்ல! மனுஷனின் பாவமே காரணம். அதனால்தான் தேவன் பகையை கொல்லவும் வழிமுறைகளை நிர்ணயித்தார்.
அந்த பகை எங்கே எவ்வாறு கொல்லப்பட்டது!
எபேசியர் 2:14. அவரே (கிரிச்த்துவே)நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,16பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
ஏதேனில் உருவான அந்த கொடிய பகை கொல்லபட்ட இடம் நம் இரட்சகர் மரித்த சிலுவை!
கொன்றவர் - நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து.
ஆகினும் இன்னும் எந்த பகையும் கொலையும் வெறுப்பும் உலகில் ஒழிந்தபாடில்லை.
காரணம்:
இயேசுவைபோல் அன்பு மற்றும் மனதுருக்கத்தால் நிரப்பபட்டு அவர் வார்த்தைகள்படி வாழ்ந்தால் மட்டுமே நம்முள் குடிகொண்டிருக்கும் அந்த "ஆதி பகையை" ஒழிக்க முடியும்!
மேலும் தேவனின் ராஜ்ஜியம் ஸ்தபிக்கபட்ட பின்னரே அது பூரணப்படும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)