இன்று அநேகர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண வசனங்களை கைகொள்ள வேண்டுமா வேண்டாமா அது அவசியமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் குழப்பத்தை சுலபமாக போக்க இதோ விளக்கம்!
பழைய ஏற்பாடு என்பது கிரியையை சார்த்தது மாம்சத்துகுரியது இந்த உலக வாழ்க்கைக்கு பயனுள்ளது. அனால் நியாயப்பிரமான நடக்கை பரலோக வாழ்வை தீர்மானிக்க மாட்டாது. இயேசுவின் இரத்தமும் பரிசத்த ஆவியின் நடத்துதலுமே பரலோக வாழ்வை தீர்மானிக்கும். நியாயப்பிரமாண நடக்கையோயோ இந்த உலகத்தில் நாம் துன்பமின்றி வாழும் வழியை போதிக்கிறது.
1. வெறும் நியாயப்பிரமாணத்தின்படி மட்டும் நடந்தால் ஒரு மனுஷன் இந்த உலகத்தில் அவைகளால் பிழைக்க முடியும்.
அனால் அவர்களுக்கு பரலோக மேன்மை இல்லை. இந்த உலகத்தில் சிறப்பாக வாழ்ந்து கணப்பொழுதில் பாதாளத்தில் இறங்கிபோவீர்கள். காரணம் நியாயப்பிரமாணத்தால் ஒருவரும் தேவனுக்கேற்ற நீதிமான் ஆகிவிட முடியாது!
கலாத்தியர் 5:4நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்
2. கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டு ஆவியின் நடத்துதலில் இருந்து
நியாயப்பிரமாணம் வேண்டாம் என்று தள்ளினால் நீங்கள் பவுலைப்போல இயேசுவை போல இந்த உலகத்தில் சுகமான வாழ்வை எதிர்பார்க்க கூடாது. மேலும் இங்கு உங்களுக்கு உபத்திரவமும் துன்பமும் உண்டு.
யோவான் 16:33என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம்உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்
அவ்வுபத்திரவங்களுக்கு மத்தியில் இயேசுவால் வரும் சமாதானமும் உண்டு!
3. கிறிஸ்த்துவை ஏற்று பரிசுத்த ஆவியை பெற்று பின்னர் நியாயப்பிரமாண கற்பனை நீதி நியாயங்களையும் சேர்த்து கைகொண்டு வாழ்ந்தால் இந்த உலகத்தில் இருக்கும் பல தீங்கு நோய் நொடிகள் மற்றும் மரண கண்ணிகளுக்கு தப்பலாம்.
உபாகமம் 7:3 நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், 7:15கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;
கூடவே பரலோக மேன்மையும் உண்டு.
ரோமர் 5:17 கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
இப்பொழுது தெரிவு உங்கள் கையில்!
எது தேவையோ அதை நீங்களே எடுத்துகொள்ளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)