ஒருவர் என்னதான் ஆவியில் நிறைந்து ஜெபித்தாலும் குதித்தாலும் உருண்டாலும் பிறண்டாலும் அவரிடம் இருக்கும் ஒரே ஒரு சிறு தேவையற்ற அசிங்கமான காரியம் தேவன் அவரை அங்கீகரிக்க முழு தடையாக இருந்துவிட வாய்ப்புண்டு. .
காரணம் அக்காரியம் தேவனின் பார்வையில் மிகுந்த அருவருப்பாக இருப்பதுதான்.
அதுபோன்ற முக்கியமான ஒரு அருவருப்பான காரியம் "ஆவிக்குரிய பெருமை" என்பது.
யோபு 35:12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை
அனேக சீனியர்கள் தங்களிடம் வரும் ஜூனியர்களை அற்பமாக எண்ணி நடத்துவது தேவனுக்கு அருவருப்பான ஓன்று. நான் அறிந்த சீனியர் பாஸ்டர் ஒருவர் தான் ஜீனியரை தான் முகம் பார்க்கும்போது கண்ணாடி பிடிக்க பயன்படுத்துகிறார். எத்தனை வேதனை பாருங்கள்!
எரேமியா 13:9இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்
என்று கர்த்தர் சொல்லியிருக்கிறாரே!
இந்த புதிய விசுவாசியைவிட நான் ஆண்டவரை அறிந்து இத்தனை வருடம் ஆகிறது/ வேதத்தை இந்ததனை முறை படித்துவிட்டேன்/ நான் பண்ணாத பிரசங்கம் கிடையாது /நான் வெளிநாட்டுக்கெல்லாம் சென்று பிரசங்கித்துள்ளேன் பல ஆவிக்குரிய புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் / எனக்கு தனியாக சபை இருக்கிறது போன்ற எந்த உலக எக்ஸ்பீரியன்ஸ்களும் தகுதிகளும் உங்களை தேவனுக்கு முன்னாக தகுதியுள்ளவனாக நிலைநிறுத்த மாட்டாது என்பதை ஐயமற அறிந்துகொள்ளுங்கள்.
கர்த்தர் உன்னை பயன்படுத்துகிறார் அதில் நீ பெருமை பாராட்ட என்ன இருக்கிறது? அவர் நினைத்தால் ஒரு கழுதையை கூட பயன்படுத்த முடியுமே!
அப்படிபட்ட அந்த சர்வ வல்ல தேவனின் பார்வையில் நேற்று வந்த அந்த மிக சிறியவனான ஜூனியரைவிட மட்டுமல்ல அவர் பயன்படுத்திய கழுதையைவிடகூட நீ எந்த விதத்திலும் பெரியவன் அல்ல என்பதை மனதார அங்கீகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவனால் உங்களை மனதார அங்கீகரிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
sundar wrote...\\
I பேதுரு 5:5 பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
...//
மேலே தலைப்பில் சொல்லப்பட்ட காரியத்தை நன் ஏற்றுகொள்கிறேன்.
மனுஷனுடைய எல்லா பெருமையும் இந்த உலகத்துக்கும் சகமனுசனுக்கும் முன்பாக ஒருவேளை பயன்படலாம் ஆனால் கர்த்தருக்கு முன்பாக அவைகள் ஒரு நாளும் ப்ரோயோஜனபடது மாறாக தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பிரதான தூதன் தள்ளபாட்டதை நினைத்து கொள்வது அவசியமாகிறது. தேவனோடு இருந்தவனுக்கு அந்த நிலைமை என்றல் சாதாரண நம்மை போன்ற மனிதர்களின் நிலைமையை யோசிக்கவேண்டியது அவசியமாகிறது.
இயேசு கிறிஸ்துவை நினைத்துகொள்ளுங்கள்
1. தேவனுடைய ரூபமாய் இருந்தும்.!
2. தேவனுக்கு சமமாய் இருந்தும்.!
3. மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தம் தன்னை தாழ்த்தினார் என்று வேதம் சொல்கிறது. அப்படி இருக்க நாமெல்லாம் எம்மாத்திரம்..!
கர்த்தர் நம்மை நினைபதற்கும் நம்மை விசரிபதற்கும் நாம் ஒரு பொருடெல்லவென்று நான் நினைக்கிறன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )