நாம் அறியவேண்டிய வேதனைக்குரிய முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்த்தர் அவருக்காகவும் அவருடைய நன்மைக்காக நம்மிடம் எதையும் கேட்கவுமில்லை எதையும் செய்ய சொல்லவுமில்லை. மாறாக அவருடைய ஜனமாகிய நாம் கஷ்டபடுவதை தாங்க முடியாத அவர் நம்முடைய நன்மைக்காகவும் நாம் பிழைதது தீங்கை விட்டு நீங்கி சுகமாயிருக்கவுமே இப்படி தலை தலையை அடித்து "என் வார்த்தையை கைகொள்ளுங்கள்" "வார்த்தையின் படி நடவுங்கள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
எரேமியா 7:23நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள்உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்
லேவியராகமம் 25:18என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி
நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
ஆம்! நாம் சாகாமல் பிழைக்க வேண்டும் என்பதே தேவனின் ஒரே விருப்பம்.
ஆனால் நாமோ அவருக்கு எதோ பெரிய பேவர் செய்வதுபோல் எண்ணிக்கொண்டு எதாவது ஒரு சாக்கு போக்கை சொல்லி அது வேண்டாம் பிரதர் இது தேவையில்லை ப்ரதர் என்று சொல்லி அவரின் கற்பனைகளில் இருந்து எஸ்கேப் ஆகவே முயற்ச்சிக்கிறோம்.
இதனால் யாருக்கு ஐயா நட்டம்? மீறி நடப்பவருக்ககுதானே!
உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு கர்த்தர் கற்பித்த எல்லா வழியிலும், நடவுங்கள்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)