ஒருமுறை என்னுடைய நண்பன், எண்ணிடம் பணத்தை கொடுத்து சாப்பிட ஏதாவது வாங்கி வரசொன்னான்.
நான் வாங்கி கொண்டு வந்து, அவனிடம் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த சில்லரையை, எனக்கு தேவைபட்டதால் நானே வைத்துகொண்டேன்.
அன்று அலுவலக பணி முடிந்து வீட்டுக்கு திரும்பவும்போது, செலவுக்காக நுறு ரூபாய் பணம் ATM ல் எடுத்து கொண்டு, மேல் பாக்கெட்டில் வைத்தகொண்டு போய்விட்டேன்.
மேல் பாக்கெட்டில் போட்டு வைத்துயிருந்த பணம், வீட்டுக்கு வந்ததும் காணாமல் போய்விட்டது ?
என்னடா இது, பணம் காணமே? என்று தேவனிடத்தில் புலம்ப ஆரம்பித்தேன் !
தேவனே, காரணம் இல்லாமல் ஒன்றையும் அனுமதிக்கமாட்டிரே, என் பணம் கானமால் போனதற்கு என்ன காரணம் ஆண்டவரே ? சொல்லுங்க என்று அவரை ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன் !
அன்று இரவே, பரிசுத்த ஆவியானவர் என்னோடு பேசி, நீ உன் நண்பனுடைய பணத்தை அவனை கேட்காமல் எடுத்தாயே, மற்றவர்களுடைய,
பணத்தையோ, பொருளையோ., அவர்களை கேட்காமல் எடுப்பதும் திருட்டு என்பது உனக்கு தெரியாதா ? என்றார்."
எனக்கு ரொம்ப ஆச்சரியமாகி விட்டது, ஆவியானவர் பேசினது ஒருபுறம், சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு புறம், இப்படியெல்லாம் தவறுகள் இருக்கின்றதா ? என்று.
உண்மையாக சொல்கின்றேன் நான் திருடவில்லை, அவன் எனக்கு close friend என்பதாலும், சில்லரை தேவை என்பதாலும், உரிமையோடு எடுத்துகொண்டேன், அதுவும் 20 ரூபாய்.
எனக்கே அப்ப தான் தெரியும்! மற்றவர்கள் பொருளையும், பணத்தையும், அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்தால், அதுவும் திருட்டுக்கு சமமாகின்றது என்று"
நான் என் வாழ்க்கையில், கற்றுகொண்ட மிக பெரிய பாடம் இது!!!
அன்றிலிருந்து ஒரு முடிவெடுத்தேன் " மற்றவர்கள் ஆனாலும் சரி, அம்மா, மனைவியானலும் சரி, அவர்களை கேட்காமல், அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள், பணத்தையே, , பொருளையும், ஏன் செல்போனையே கூட எடுப்பதில்லை என்று........
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)