இயேசுவோடு கூட சிலுவையில் அறையபட்டு பாவத்துக்கு மரித்தவன் யார்?
1. ஒரு அழகான பெண் தன் அருகில் வந்து அமர்ந்தாலும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருதயத்தில்கூட எந்த விகல்ப எண்ணமும் தோன்றாமல் தன் போக்கில் இருப்பவனே!
2. ஒருவன் என்னதான் திட்டினாலும் கோபத்தை காட்டினாலும் தகாத பழிகாமல் சுமத்தினாலும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சமாதானமான நிலையில் இருப்பவனே!
3. யார் ஆட்சிக்குன் வந்தாலும் உலகில் என்னதான் நடந்தாலும் வானமே இடிந்து விழுந்தாலும் அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சமாதானமான நிலையில் இருப்பவனே!
காரணம் அவன் மரித்துவிட்டான்! அவனுக்கு இன்னொரு சாவு இல்லை. எனவே உலகின் மாம்ச சம்பந்தமான எந்த சம்பவமும் அவனை பாதிக்காது.
அப்படி ஒரு நிலையில் ஒருவர் இருந்தால் நிச்சயமமாக அவர் பாவத்துக்கு மரித்தவர்தான்! எனவே அவர் வேதத்தின் எந்த கற்பனையையும் பார்த்து பார்த்து கைகொள்ள வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை! காரணம்:
கொலோசெயர் 2:12ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே
ஒரு அழகான பெண்ணை பார்த்ததும்/ அது அருகில் வந்து அமர்ந்ததும் உணர்ச்சிகள் தூண்டப்படுகிறதா? உடனே நீங்கள் அங்கே தேவனின் வார்த்தை அது குறித்து என்ன சொல்கிறது என்பதை யோசிக்க வேண்டும். அந்த பெண் நம் மனைவியானால் அதை தேவன் அங்கீகரிக்கிறார். பிறன் மனைவியானால் அதை தேவன் வெறுக்கிறார் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! தேவன் வெறுக்கும் காரியங்களை விட்டு நாம்தான் கட்டாயமாக விலக வேண்டும்.
நான் மரித்துவிட்டேன் என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு உணர்ச்சியால் உந்தபட்டும் விலகாமல் இருந்தால் அது மாய்மால பாவமே! அதை தேவன் தண்டியாமல் விடார்!
அதுபோல் ஒருவர் நம்மை திட்டும்போதும் பழி சுமத்தும்போதும் தரக்குறைவாக விமர்சிக்கும்போதும் நமக்கு கோபம் உண்டாகிறது என்றால், அங்கும் நாம்தான் வேத வசனம் இதுகுறித்து என்ன சொல்கிறது எனபதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
"உங்களை சபிப்பைவனை ஆசீர்வதியுங்கள், அவனுக்காக ஜெபியுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைபடி, நாம்தான் முயன்று நமது கோபத்தை அடிக்கி அப்படிபட்டவர்கள் குடும்பத்துக்காக ஜெபிக்க வேண்டும்.
மற்றபடி, நான் மரித்துவிட்டேன் என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு தன்னை தூற்றுபவன்மேல் கோபமும் வன்மமும் வைத்துகொண்டு எல்லா இடங்களிலும் தூற்றி திரிந்தால் நம்மை நாமே நாம் ஏமாற்றுவதோடு தேவனையும் ஏமாற்ற துணிகிறோம் என்பதை கருத்தில் கொள்ளவும்.
நான் பாவத்துக்கு மரித்துவிட்டேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றிவிடலாம், ஆனால் உள்ளிந்திரியங்களை அறிந்துள்ள கர்த்தரை உங்களால் ஏமாற்றமுடியாது.