ஒரு அழுவலகத்தில் முதலாளி தன்னிடம் பணிபுரியும் ஊழியனை நோக்கி, நான் சிறிதுகாலம் இங்கே இருக்கபோவதில்லை ஆதலால் நீ என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்ற சில திட்டங்களையும், வேலைகளையும் இந்த புத்தகத்தில் எழுதி வைத்து இருக்கின்றேன், அதன்படி நட என்று சொல்லி சென்றுவிட்டார்.
அந்த ஊழியனோ, புத்தகத்தில் முதலாளி தனக்கு எழுதி கொடுத்ததை போலவே நடந்துகொண்டான், அந்த நேரத்தில் அவனுக்கு எல்லாமே முதலாளி எழுதிகொடுத்த அந்த புத்தகம் தான்.
வெளியே சென்று இருந்த முதலாளி திரும்ப வந்துவிட்டார், தன்னிடம் பனிபுரியும் ஊழியனை நோக்கி புதிதாக ஒரு வேலையை, இப்படியாக செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஆனால் அந்த ஊழியன், புத்தகத்தை எடுத்துபார்த்து" முதலாளி இதுபோல ஒரு வேலையை நீங்கள் புத்தகத்தில் எழுதவே இல்லையே, நான் எப்படி செய்ய என்றான்?
அதற்கு அந்த முதலாளி முட்டாளே நான் எழுதினால் என்ன ? எழுதாவிடில் என்ன ? நான் உன் முதலாளி, உனக்கு நான் என்ன சொல்கின்றேனோ அதை செய்" என்னைவிட, நான் எழுதிகொடுத்த புத்தகமா உனக்கு முக்கியம் என்றார்.
அந்த ஊழியக்காரன்போல தான், இன்றைய கிறிஸ்தவமும், ஊழியர்களும் இருக்கின்றார்கள் ?
தேவன் வேதத்தில் மனிதனுக்கு கட்டளையும், கற்பனைகளையும் எழுதி கொடுத்து இதன் படி நடவுங்கள் என்று மோசே மூலமாயும், தீர்க்கதரிசிகள் மூலமாயும், தன் சொந்த குமாரன் மூலமாயும் சொன்னார்.
அதன்படி நாம் நடக்கின்றோம், கட்டாயம்" அதன்படி நடக்க தான் வேண்டும்.
ஆனால் இன்று, கூடுதலாக" முதலாளியே (கர்த்தரே) ஆவியாய் நம்முடைய இருதயத்திலே தங்கி இருக்கின்றார், என்றால் எதற்காக ? சும்மா தங்குவதற்காக அல்ல, நமக்கு கட்டளையிட்டு" சத்தியத்திலே, நடத்தவே."
சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்.
யோவா 16 :13
அந்த முதலாளிபோல ஆவியானவர், இன்று ஒரு புது காரியத்தையோ, வேலையோ செய்ய சொன்னால் " ஆவியானவரே இந்த வசனம் வேதத்தில் இல்லையே, கர்த்தர் இப்படி சொல்வில்லையே, வேதத்தில் என்ன இருக்கின்றதோ, அதுதான் நாங்கள் செய்வோம் என்கின்றார்கள் சில வேத ஞானிகள்.
ஒருமுறை ஆவியானவர், என்னிடம் அடுத்தவர் பொருளை அவர்கள் அனுமதி இல்லாமல் எடுக்க கூடாது, அதுவும் திருட்டுக்கு சமம் ஆகின்றது என்றார்.
ஆவியானவர் சொன்னதும்"
வேதத்தில் இப்படி எதாவது வசனம் இருக்கின்றதா ? என்று தேடியா பார்க்க முடியும் ?
இதேபோல தான் இன்று அநேகர் இருக்கின்றார்கள்.
யாரவது ஒருவர் புதிய தரிசனத்தையோ, வெளிப்பாட்டையோ சொல்லிவிட்டால் போதும், அந்தமாதிரி தரிசனம் வேதத்தில் இல்லையே, அப்படி ஒரு வார்த்தை வேதத்தில் இல்லையே, அவன் பொய்யன், அவன் கள்ளதீர்க்கதரிசி என்று ஏகப்பட்ட Commenta கொட்டி தீர்த்துடுவார்கள்.
அவர்கள் சொல்கின்றது உண்மையா, பொய்யா சரி, நாம் ஆவியானவரிடம் கேட்டுபார்க்கலாம் என்ற அறிவும் இல்லை, ஞானமும் இல்லை, நீதிமானாயிருந்தால் நமக்கு இதைபற்றி தெரியாது,, தெரியாமல் நாம் பேச கூடாது., என்று வாயமூடிகொண்டு அமைதியாயிருப்பான்,
இப்படியெல்லாம் இருப்பதால் தான், வேதம் நம்மை பரிசுத்த ஆவியானவரை" பெற்றுகொள்ள நம்மை வற்புறுத்திகின்றது ! கட்டைளையிடுகின்றது.
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவா 16 :8
யெகோவா சாட்சிகளில், ஒருவர் என்னிடம் எங்களுக்கு வேதம் தான் எல்லாம் , வேதத்தில் என்ன எழுதியிருக்கின்றதோ அது தான் எங்களுக்கு தேவ வார்த்தை, அதில் இருந்து தான் நாங்கள் பேசுவோம்,
யாராவது எதையாவது சொன்னால், அது வேதத்தில் இருந்தால் தான் நாங்கள் ஏற்றுகொள்வோம் என்ன்றார்.
அதினால் தான், யெகோவா சாட்சிகள், இதுவரை ஆவியானவரை சரியாக அறிந்துகொள்ளவும் இல்லை, அவரை புரிந்து கொள்ளவும் இல்லை.
அவர்கள் யெகோவா சாட்சிகள் அல்ல, வேதாகமம் சாட்சிகள், இதை நான் சொல்லவில்லை அவர்களில் ஒருவர் தான் சொன்னார்.
அவர்களுக்கு வேதம் தான் தேவன்"
கர்த்தர் அல்ல ?
அன்று இஸ்ரவேல் ஜனங்கள், தேவனுடைய ஆலயம், மோசே கொடுத்த நியாயப்பிரமாணம் (வேதம்) என்று தேவனைவிட, ஆலையத்தையும், பிராமனத்தையும்., உயர்வாக நினைத்துகொண்டு இருந்தார்கள்.
அதினால் தான், இயேசு சொன்ன புதிய சத்தியங்கள்" போதனைகள், அவர்கள் வேதத்தில் இல்லை என்பதால்,,
அவரை விசுவாசிக்காமல், இவன் வேதத்திற்கு புறம்பாக சொல்கின்றான், என்று சொல்லி இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.
இன்றைய, கிறிஸ்தவமும் அப்படி தான் இருக்கின்றது !
அதினால் தான், நம் ஆண்டவராகிய இயேசு இப்படியாக சொன்னார் ?
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவருக்கு ஈடுடாக, ஒன்றையும் உங்கள் உள்ளத்திலே வைக்காதீர்கள்.
கர்த்தருடைய வார்த்தை தான் வேதம் , ஆனால் கர்த்தர் நினைத்தால் வேதத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவார், மாற்றியிருக்கின்றார்.
இயேசுவின் காலத்தில் யெகோவா" தேவன் தாம் சொன்ன வார்த்தையையே, தன் குமாரன் மூலம் பல காரியங்களை மாற்றி இருக்கின்றார், என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் நன்கு அறிவோம்.
அப்படி இருக்க, இப்பொழுது கர்த்தரே ஆவியாய் நமக்குள் இருக்கின்றார்,
கர்த்தரே ஆவியானவர். 2கொரி 3 :17
இப்படி கர்த்தர் நமக்குள் ஆவியானவராய் இருக்கும்போது, புதிய காரியங்கள். புதிய தரிசனங்கள்! தோன்றாதா ? புதிதாக ஏதும் ஆவியானவர் சொல்லமாட்டாரா ?
எல்லோருக்கும், தோன்றும்! சொல்லுவேன் என்று கர்த்தர் வாக்கு பண்ணாரே ?
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
யோவே 2 :28
இந்த ஆவியானவரே" அப்போஸ்தலர்௧ள் காலத்தில் இறங்கி வந்தவர் "
வேதத்தில், அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவராலே மறைந்திருந்த இரகசியங்களை நமக்கு எழுதினார்களே ?
இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.
எபே 3 :6
ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எபே 3 :11
அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியானவரால், எழுதினதை தான் இன்று நாம் புதிய ஏற்பாடு - வேதம் என்று சொல்கின்றோம்.
பவுலுக்கும், மற்ற அப்போஸ்தலருக்கும் மட்டும் தான் ஆவியானவர் பேசி இரகசியங்களை வெளிப்படுத்துவாரா ? மற்றவர்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்தமாட்டாரா ?
பவுலுக்குள்ளும், மற்ற அப்போஸ்தலருக்குள்ளும் இருந்த அதே ஆவியானவர் தானே இன்று எல்லோருக்குள்ளும் இருக்கின்றார் "
இந்த கடைசி காலத்திலே உலகம் எப்படி advance ஆக போகுகின்தோ, அதேபோல தான், ஆவிக்குரிய உலகமும் ரொம்ப வேகமாய் போகின்றது"
இனி எந்த இரகசியமும் இல்லை" மறைபொருளும் இல்லை, அவன், அவனுடைய விசுவாசத்திற்கு கேற்ப எல்லாம் Open...தான்.
இதைதான், அழகாக நம் தேவ குமாரன் சொல்லி இருக்கின்றார்"
வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை, அறியப்படாத இரகசியமும் இல்லை.
மத் 10 :26
பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவா 3 :12
பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவா 1 :51
இப்படியாக கர்த்தருடைய ஆவியானவர், கடைசி காலத்தில் புதிய காரியங்களையும், இரகசியங்களையும் வெளிப்படுத்துவார்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆனால் ஒன்று இந்த கடைசிகாலத்தில் எவன் பொய் சொல்கின்றான், எவன் உன்மையை சொல்கின்றான் என்பதை, நாம் தான் ஆவியானவர் துனைகொண்டு பகுத்தறிய வேண்டும்.
இது தீர்க்கதரிசிகளின் காலம் அல்ல "
இது வேதாகமம் காலமும் அல்ல "
இது பரிசுத்த ஆவியானவரின் காலம் "
ஆவியிலே நிறைந்து இருங்கள்!
ஆவியிலே அனலாய் இருங்கள்........
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
Page 1 of 1 sorted by
இறைவன் -> கிறிஸ்த்தவ கட்டுரைகள் -> வேதமும், ஆலயமும், நமக்கு தேவன் அல்ல ? கர்த்தரே" நமக்கு தேவன்" அவருடைய ஆவியானவரே நமக்கு வேதம்"