கர்த்தருடைய கோபம் என்பது ஒரு தந்தை தன் மகன் மீது கொள்ளும் கோபமே ஆகும்,தந்தையின் கோபத்தில் மகன் மீது கசப்போ, அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இருக்காது, அது மகனின் நன்மைக்காக தான் இருக்கும், அப்பேடியே தான் நம் தேவனாகிய கர்த்தருடைய கோபமும்."
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
2சாமு 7 :14
எத்தனையோ முறை இஸ்ரவேல் ஜனங்கமேல் கர்த்தருடைய கோபம் எழும்பி, அவர்களை அழிக்க சித்தமாய் இருந்த போது, மோசே கர்த்தரை நோக்கி தாழ்த்தி கெஞ்சம் பொழுது, அந்த கோபம் நீங்கி, உடனே அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்கள் தவறை மன்னித்தார் அது தான் கர்த்தரின் இரக்கம்.......!!
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார், அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
சங் 78 :38
நினிவே ஜனங்களின் பாவத்தின் நிமித்தம், தேவனுடைய கோபம், அந்த தேசத்தையே அழிக்க எழும்பின பொழுது, அந்த ஜனங்கள் தங்களை தாழ்த்தி உபவாசிக்கும் பொழுது, கர்த்தர் அழிப்பேன் என்று சொன்னதை செய்யாமல், அவர்கள் மேல் இரக்கம் உள்ளவர் ஆகி, உடனே தாயை போல பரிதபிக்கின்றார், அது தான் கர்த்தரின் இரக்கம்....!!
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
யோனா 4 :11
"தேவனாகிய கர்த்தர்" பயங்கரமானவராயிருந்தும், மிகுந்த கோபம் கொள்பவராயிருந்தும்.!!
தன்னை தாழ்த்தி, கண்ணிர்விட்டு யார் கூப்பிடாலும், ஒரு நொடியிலே தாயை போல மாறிவிடுங்கின்றார், அவர்கள் என்ன தவறு செய்து இருந்தாலும் ஒரு நிமிடத்தில் அதை மண்ணித்து, தாயைபோல அவர்கள் மேல் இரக்கபட்டு, மனதுருகி அவர்களை ஆசிர்வதிக்கின்றார், அது தான் கர்த்தரின் இரக்கம்..!!
அவர் கோபத்தையும், இரக்கத்தையும் உணர்ந்த ஒரு பக்தன் அவரை பற்றி எவ்வளவு அழகாய் சொல்கின்றான் பாருங்கள்.!!
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு, சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
சங் 30 :5
ஆம், அவருடைய கோபம் ஒரு நிமிடம் தான், அந்த ஒரு நிமிடம் கோபம் கூட ஏனென்றால்,
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே....!!
என் பிள்ளைகள் பாவம் செய்து சாத்தானிடம் மாட்டிகொள்ள கூடாது, அவர்கள் எந்தவிதமான வேதனைகளையும், துன்பங்களையும், அனுபவிக்க கூடாது என்ற கர்த்தரின் விவரிக்கமுடியாத, இரக்கமே அதற்கு காரணம். !!
இப்படிப்பட்ட ஒரு இறைவனை" நாம் ஆராதிப்பதே பெரிய பாக்கியமாகும், தயவுசெய்து கர்த்தரின் கோபத்தையும், கன்டிப்பையும் புரிந்து கொண்டு அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, நீதி நியாயங்களை செய்து, இரக்கமுள்ளவர்களாய் இருந்து தேவனை பிரியப்படுத்துங்கள்.
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)