ஆதலால், போதகர்களே, தீர்க்கதரிசிகளே, விசுவாசிகளே மிகுந்த எச்சரிக்கையாய் இருந்து, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துகொள்ளுங்கள்.
நான் நல்லா ஜெபிக்கின்றேன், ஆலயத்துக்கு போகிறேன், காணிக்கை கொடுக்கின்றேன், 40 நாள் பாஸ்டிங் போடுரேன், என்ற இந்த குழந்தை தனமான பேச்சை விட்டு விட்டு, ஞானவான்கள் போல நடந்துகொள்ளுங்கள்......
வேதத்தில் உள்ள, நீதி நியாயங்களின் படி நடக்க உங்கள் இருதயத்தை திருப்புங்கள் !!
நீதி தான் அநீதியை தடுக்க முடியும் !!
பரிசுத்தம் தான் அசுத்தத்தை அடக்க முடியும் !!
தாழ்மை தான் பெருமையை எதிர்க்க முடியும் !!
உண்மை தான் பொய்மையை வெல்ல முடியும் !!
ஆகையால் நீதி நியாயம், தாழ்மை, உண்மை போன்ற பட்டயத்தை உங்கள் சரிரத்திலே நன்கு தீட்டி வைத்துகொள்ளுங்கள்.
உங்களை எந்த ஒரு தீங்கும் நெருங்க முடியாதபடி, உங்களுக்குள் இருக்கும் பரிசுத்தமும், நீதியும், சுடர் ஒலி பட்டயமாக உங்கள் சரிரத்தில் வீசிகொண்டே இருக்கும்....
அதுவும் இல்லாமல் கர்த்தருடைய" கண்கள் உங்கள் மேல் எப்பொழுதும் நோக்கமாய் இருந்து, உங்களையே கவனித்துகொண்டே இருக்கும்.
பாவம் செய்து. கர்த்தருடைய கண்களில் இருந்து மறைந்து போகாதிருங்கள், கர்த்தர் தம்முடைய கண்களை உன்னை வீட்டு நீக்கினால் போதும், ஒரு நொடி பொழுதே சாத்தானுடைய கண்கள் உன் மேல் வந்துவிடும், அப்புறம் உன் வாழ்க்கையில் சுனாமியும், பூகம்பமும் பேரலைகளும் எழும்பும்.
அய்யோ,!! தேவனே என்று நீ கர்த்தரை நோக்கி கூப்பிட்டால் கர்த்தர் சொல்வார்..
உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணினது, இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
எரே 4 :18
ஆதலால், இந்த எச்சரிப்பின் செய்தியை கேட்டு இன்றே உன் பாவத்தையும், அசுத்தத்தையும் உன்னை விட்டு அகற்றி கர்த்தரிடத்தில் மண்டியிடு.
பாவம் செய்து பிசாசின் கோபத்துக்கு ஆளாகிவிடாதே,
அவன் காத்துகொண்டு இருக்கின்றான்.
தயவு செய்து என் நண்பா / சகோதரா, சகோதரி நீ அவனிடம் மாட்டிகொள்ளாதே ?
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
1பேது 5 :8
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)