இந்த உலகத்தில் மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, பணத்தையோ, பொருளையோ தேடி, ஓடி அழைக்கின்றார்கள்...
என்ன தான் தேவை கேற்ப பணமும், செல்வமும், பொருளும் வந்தாலும் மனிதர்கள் அதில் திருப்தியாகாமல் , உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் அதற்காகவே பிரயாசபடுகின்றார்கள்.
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை, செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை, இதுவும் மாயையே.
பிர 5 :10
மனிதர்கள் பணத்தையும், பொருளையும் சம்பாதிப்பது எதற்காக? சரிர தேவைகளுக்கு தானே, ஆனால் அந்த சரிரம் சரியில்லை என்றால் சம்பாரித்த எதையும் அனுபவிக்க முடியாதல்லவா ?
ஆம், உலகத்தில் மனிதனுக்கு மிகவும் முக்கியமானது, உடல் ஆரோக்கியம், இந்த உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், நீ சம்பாரித்த அனைத்தையும் அனுபவிக்க முடியும், ஓட முடியும், நன்கு உண்ண முடியும்....
நீ கோடி கோடியாய் சம்பாரித்தாலும் ஒரு "சுகரோ, பிபியோ" வந்தால் உனக்கு அப்புறம் கட்டுபாடு உணவு தான், நீ சம்பாதித்த பணம் எல்லாம் மருத்துவரிடம் திரும்பவும் கொடுக்க வேண்டி இருக்கும்...
உடலில் ஆரோக்கியம் இல்லாமல்" பணம், பொருள், கார், பங்களா போன்றவைகள் இருந்தும் என்ன பயன் ?
ஆதலால் என் அன்பு சகோதர்களே, சகோதரிகளே !!!
ஜஸ்வரியத்திலேயும் பணத்திலேயும், பொருட்களிலேயும் மட்டும் குறியாக இருக்காமல், உடல் ஆரோக்கியத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து பாருங்கள்....
நீங்கள் பாஸ்டர்களிடம் கேட்டால் நல்லா ஜெபிங்க பிரதர்/சிஸ்டர் என்று சொல்லி உங்களை அனுப்பிவிடுவார்கள்..
டாக்டரிடம் சென்றால் இதை சாப்பிடாதே, அதை சாப்பிடு, இந்த மாத்திரைபோடு, என்று உங்களை வெறுப்பேத்தி இன்னும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடுவார்கள்.
நம் அரோக்கியத்துக்காக" ஒருவர் மிகுந்த அக்கரையோடு சொல்கின்றார் அவர் வார்த்தைக்கு கீழ்படிவீர்களா ?
நம்மை உண்டாக்கினவரும்,
நம் மீது அதிக அக்கரையும். அன்பும் உள்ளவரும், நம்மை சுமந்து தாங்கினவரும், நம்மை கரம் பிடித்து நடத்தினவரும், நமக்காக உயிரையும் கொடுத்தவரும், நாம் அழுதால் நம்மோடு அழுபவரும், நாம் புலம்பினால் நம்மோடு சேர்ந்து புலம்புவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் சொல்கின்றார் ?
அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.
உபா 5 :29
நாம் வியாதிகள், பிரச்சனைகள் இல்லாமல் நன்றாய் இருக்க வேண்டும் என்பதற்காக, நம் மீது அதிக அக்கரை உள்ள நம் தேவன், எனக்கு பயந்து என் வார்த்தைக்கு கீழ்ப்படியுங்கள் என்று சொல்கின்றார்.....
காரணம் ?
நீங்களும், நானும் மற்ற மனிதர்கள் அனைவரும், உலகத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே நம் தேவனின் எண்ணம்.!!
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
சங் 91 :7
சகோதரா / சகோதரி.....!!!
உன் ஆரோக்கியத்தை பாவங்களினாலும், அசுத்தங்களினாலும் நீ ஏன் கெடுத்துகொள்ள வேண்டும்..?
பாவத்தையும், அசுத்தத்தையும் விட்டு என்னிடம் ஓடி வா....!! என்று கர்த்தர் தம் கரத்தை நீட்டிகொண்டு உனக்காக காத்துகொண்டு இருக்கின்றார்....
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார், நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
எரே 4 :1
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)