நீதிமானுக்கு, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பதே மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே நீதிமானின் மெய்யான சந்தோஷம்.
ஏனென்றால் ?
நீதிமானுடைய தேவன் அப்படிப்பட்டவர்
தேவனுக்கு" எல்லா மனிதர்களும் சந்தோஷமாக மகிழ்ந்து இருக்க வேண்டும் என்பதே ஒரே எண்ணம் !
அந்த எண்ணமே தேவனை" உண்மையாய் வணங்குகின்ற எந்த ஒரு நீதிமானுக்கும் இருக்கின்றது.
சிலர் வேதத்தில் எழுதி இருக்கின்றது என்பதினால் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள், அது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வது என்பது எழுத்தால் மட்டுமல்ல, முழுமனதார செய்ய வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதும் ஒரு ஊழியம் தானே,
இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
1தீமோ 3 :13
மற்றவர்கள் சந்தோஷத்தில், நீதிமான் அடைகின்ற சந்தோஷம் இருக்கின்றதே அதில் அளவே கிடையாது!!
உண்மையாகவே அது ஒரு தனி சந்தோஷம் தான்.......
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)