நம் வாழ்க்கையில் இருக்கும் உறவுமுறைகளோடு, நம் தேவனாகிய கர்த்தரின் குணங்களையும், பண்புகளையும் சொல்ல விரும்புகின்றேன்.
இறைவன் - பக்தன் :
""""""""""""""""""""""""""""""
இந்த உறவானது கடவுளை தேடுகின்ற எல்லா மனிதர்களிடமும் உண்டு, இதுவே கர்த்தரிடத்தில் நாம் நுழையும் முதல் உறவுமுறையாகும், ஆம் இறைவன் பக்தன் என்ற உறவு ஆரம்பத்தின் சின்னமே. ஆனால் இந்த உறவு கொஞ்சம் தூரமானது போலவே காணப்படும்.... தம்மை இறைவனைபோல பார்க்கின்றவர்களை அவரும் இறைவனாய் இருந்து பார்க்கின்றார்.
தாய் -மகன் :
""""""""''''''''''''''''''""
இந்த உறவு மிகவும் அன்பு நிறைந்தது, ஒரு மகனுக்காக தாயானவள் எப்படி பரிதபிப்பாலோ, அப்படியே நம் தேவனும் நமக்காக பரிதபிக்கின்றார், ஒரு தாயானவள் தன் பிள்ளையை எந்தநேரமும் கண்ணோக்கி கொண்டே இருப்பது போலவே, கர்த்தரும் தன் பிள்ளைகளையும் எந்நேரமும் கண்ணோக்கி கொண்டே இருக்கின்றார், தன் பிள்ளைகளுக்கு என்ன,என்ன தேவைகள் உண்டு என்று, ஒரு தாயானவள் நன்கு அறிந்து அதை பூர்த்தி செய்வதுபோல, கர்த்தரும் தம்மை தாய் போல பார்க்கின்ற தம் பிள்ளைகளையும் அப்படியே பார்க்கின்றார், செய்கின்றார்.!!
தந்தை-மகன் :
""""""""''''''''''''''''''''''""
தந்தை எப்பொழுதும் பிள்ளைகளை கண்டிக்கின்றவராய் இருக்கின்றார், காரணம் பிள்ளை தன் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகளுக்கு எந்தவித ஆபத்தும் வரக்கூடாது என்று, கர்த்தரும் அப்படியே தன்னை தந்தையாக நினைக்கும் பிள்ளைகளை கடிந்துகொண்டு பேசுகின்றார், தண்டிக்கின்றார், தந்தை என்ற உறவுமுறையானது நம்மை பரிசுத்ததில் அதிக அதிகமாய் வழி நடத்தும் ஒரு உறவாகும், தந்தை இருக்கும் பொழுது எந்த ஒரு கவலையும், பயமும் பிள்ளைக்கு இருக்காது, காரணம் தந்தை தம்முடன் இருக்கின்றார், அவர் எல்லாம் பார்த்துகொள்வார் என்ற நம்பிக்கை, தம்மை தந்தையாக நினைக்கும் யாவருக்கும் கர்த்தரும் தந்தைபோலவே இருக்கின்றார்.!!
எஜமான் - வேலைக்காரன் :
"""'""""'"""'""""""""''"'''''"""""""""""'""'"
எஜமான் தன் சித்தத்தை எல்லாம் தன் வேலைகாரனிடமே செய்ய சொல்வார், அதற்காகவே வேலைக்காரனை தேர்ந்தெடுக்கின்றார், வேலைக்காரன் எப்பொழுதும் எஜமான் கைகளையே எதிர்பார்த்து காத்துகொண்டு இருப்பான், இந்த உறவில் அதிக கடமைகள் இருக்கின்றது, இந்த உறவானது கீழ்ப்படிதலை நமக்கு அதிகமாக கற்று தரும், எஜமானை திருப்தி படுத்த கூடிய உறவு இது, கர்த்தரை எஜமான் போல பார்க்கின்றவர்களுக்கு, கர்த்தரும் எஜமானை போலவே தம்மை வெளிப்படுத்துகின்றார்.!!
காதலன்-காதலி :
"""""'""""'"''""''"""""""""""
இந்த உறவானது எல்லா உறவுகளையும் விட பெரியது
எப்படி ? ஆம், இந்த உறவானது அன்பு, தாகம், வாஞ்சை, ஏக்கம்,போன்ற பல்வேறு குணங்களையும், தேடல்களையும் நமக்கு கொடுக்கும், ஒரு காதலன் காதலியிடமே அதிக நேரம் செலவிடுவான், அவளையே நினைத்துகொண்டு இருப்பான் காதலிக்காக தூக்கத்தையும், பசியையும், ஏன் உலகில் உள்ள அனைத்தையும் மறந்தவனாய் இருப்பான், இவனுடைய ஏக்கம் எண்ணம் விருப்பம் எல்லாம் அவன் காதலியே, கர்த்தரை ஒரு காதலனை பார்ப்பது போல நாமும் பார்த்தால் நம்மையும் அவர் ஒரு காதலியை போலவே பார்ப்பார், இந்த உறவை அடைவது என்பது மிக கடினமானது.!!
கர்த்தர்- நண்பன் :
"""""""""""""""""""""""""""
இந்த உறவானது மிகவும் வழுவானது, யாரிடமும் சொல்லமுடியாத எந்த இரகசியத்தையும் நண்பனிடம் தான் சொல்லுவோம், சோர்ந்து போகின்ற நேரத்தில் தோழனே, நமக்கு தோல் கொடுப்பான், ஆம் கர்த்தரை நண்பனை போல காண்கின்ற யாவருக்கும், கர்த்தர் சிநேகிதனாய் இருக்கின்றார், நண்பனாய் இருந்து, தம்முடைய இரகசியங்களை தெரியப்படுத்துகின்றார்
ஒரு நண்பனோடு பேசுவது போல நம்மோடும் பேசுவார்.!!
கணவன் -மனைவி :
"""""""""""""""""""""""""""'''""
இந்த உறவானது இந்த உலகில் நமக்கு இருக்ககூடிய சாத்தியமில்லை, காரணம் ?
இது முழுமையாக அவரோடுக்கூட இருக்க போகும் உறவாகும், இந்த உறவாது ஒரு மனைவி தன் வீட்டை விட்டு கணவனிடம் நிரந்தரமாக அவருக்கென்றே செல்வதாகும், அதேபோல தான் நாமும், இந்த பூமியை விட்டு நமக்கு நிரந்தரமான தேவனிடத்தில் செல்வோம், அதினால் தான் இந்த உறவானது இந்த பூமியிலே சாத்தியமில்லை என்றேன், ஆனால் எதிர்பார்போடு மணவாட்டியாய் நம்மை பரிசுத்தத்திலே அலங்கரித்து, காத்துக் கொண்டு இருந்தால் கர்த்தரும் நம்மை மணவாட்டியாய் பார்ப்பார்.!!
இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை இதுவரை எப்படி பார்த்துகொண்டு இருந்தீர்கள்.!!!
இதுவரை கர்த்தரை அப்படியாக பார்க்கவில்லை என்றால், இனி எப்படி பார்க்க போகின்றீர்கள்?
நீங்கள் எந்த எண்ணத்தில் உங்கள் தேவனை பார்க்கின்றீர்களோ !
தேவனும் அந்த எண்ணத்திலேயே உங்களை பார்க்கின்றார்.......
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)