இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமானே, பரிசுத்தவானே !! உனக்கு ஏன் அநேக நெருக்கங்கள்...!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
நீதிமானே, பரிசுத்தவானே !! உனக்கு ஏன் அநேக நெருக்கங்கள்...!!
Permalink  
 


நீதிமானே!  பாரிசுத்தவானே ! உன் குடும்பங்களாலும், மற்ற மனிதர்களாலும், உலக தேவைகளாலும் நீ அதிகமாய் நெருக்கப்படும் போது சோர்ந்துபோகாதே, அது கர்த்தரால் நியமிக்க படுகின்ற ஒன்று என்பதை அறிந்துகொள்.

 

ஆம், உன் நெருக்கங்கள் தான் மனிதர்களை நெருக்கத்திலிருந்து விடுதலையாக்குகின்றது, 

உன் நெருக்கங்கள் தான் பல மனிதர்களை காப்பாற்றுகின்றது, என்பதை அறிந்துகொள்.

உன்னை நெருக்கி தான் கர்த்தர் தேசங்களையும், மனிதர்களையும், இரட்சிக்கின்றார் என்பதை புரிந்துகொள். 

 

நீதிமானே, பரிசுத்தவானே நீ தேவனுடைய சித்தத்திற்காகவே தனியாக பிரித்தெடுக்கபட்டவன்.....

எல்லோரையும் போலவே நீயும் அல்ல!!

 

வேதாகமத்தில் கர்த்தர்" சில பரிசுத்தவான்களை நெருக்கங்களுக்கு ஒப்புகொடுத்து தான்,  பல காரியங்களை செய்தும் இருக்கின்றார்! முடித்தும் இருக்கின்றார்.

 

ஆபிரகாம் !!

-------------------- 

கர்த்தர் இவனை அழைத்து, அவனை இங்கு போ, அங்கு போ, என்று சொல்லி பல தேசங்களை அவனை சுற்றி திரிய பன்னினார், அவனே சோர்ந்துபோகாமல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தான், அப்படியிருந்தும் அவனுக்கு பிள்ளைகள் இல்லை மற்றும் அதிகமான வயது, அவன் எவ்வளவு நெருக்கப்பட்டு இருப்பான் என்று யோசித்து பாருங்கள், அந்த நேரத்திலே அந்த நெருக்கம் ஏன் என்று ஆபிரகாமுக்கு  தெரியாது ? ஆனால் பாருங்கள் ஆபிராகமுடைய நெருக்கம் தான் இன்று தேவனுடைய ஒரு சந்ததியை உருவாக்க காரணமாக இருந்தது, இன்னும் பல திட்டங்களை தேவன் இவன் மூலம் தான் செய்துமுடித்தார்.

 

யோசேப்பு !!

--------------------

தவறுகள் ஏதும் செய்யாமலே, தன் சொந்த அண்ணன்களாலும், தன் எஜமானாலும் அதிக அதிகமாய் நெருக்கபட்டு, பல வேதனைகளை அனுபவித்தான், நெருக்கபடும் நேரத்தில் கர்த்தருடைய கிரியைகள் அவனுக்கு தெரியவில்லை, ஆனால் கர்த்தர் அவனை கொண்டு தான், இஸ்ரவேல் ஜனங்களை பஞ்சத்தில் இருந்து பாதுகாத்தார்,

பல ஆண்டுகள் எகிப்திலே அவர்களை வாழ பன்னினார், இதற்காக தான்  யோசேப்பு என்னும் நீதிமானை கர்த்தர் நெருக்கி அவனை தன் சித்தத்திற்கு பயன்படுத்தி கொண்டார்....

 

மொர்தெகாய் !!

-------------------

தன் நாட்டு மக்களுக்காய் போராடினபோது, ஆமானால் மிகவும் நெருக்கப்பட்டான், தூக்கில்கிட்டு அவன் சாகுபடியான நெருக்கம் அவனுக்கு ஏற்பட்டது, அவனுக்கு ஏன் இந்த நெருக்கம், என்று அந்த நேரத்தில் அவனுக்கு தெரியவில்லை, ஆனால் பாருங்கள் அவனை நெருக்கி தான் கர்த்தர் யூத ஜனங்கள் ஒருவர் கூட கொல்லபடாமல் பாதுகாத்தார்.

 

தாவீது !!

-------------------- 

தாவீதுக்கு சவுலினால் ஏற்பட்ட நெருக்கத்திற்கு அளவே இல்லை, எத்தனை விதமான நெருக்கங்கள் அவனுக்கு ஏற்பட்டது,  ஆனாலும் கர்த்தர் தன் சித்தத்திற்காக அவனை எந்த அளவுக்கு நெருக்கினாரே, அந்த அளவுக்குச்  அவனை உயர்த்தி" பாதுகாத்து மிக பெரிய ராஜாவாக மாற்றினார், அவன் சந்ததியில் தான் இயேசு  பிறந்தார், மற்றும் தேவனுடைய இதயத்திற்கு ஏற்றவன் என்ற பெயரும் எடுத்தான்.

 

இயேசு !!

--------------------

இவர் நெருக்கபட்டதை வார்த்தையினால் சொல்லி விவரிக்க முடியாது, அவ்வளவு நெருக்கங்கள், தன் பிதாவின் நிமித்தம் எல்லா நெருக்கங்களையும் பொருத்துக்கொண்டார், பிதாவானவர் இயேசுவை நெருக்கத்தில் ஒப்புகொடுத்ததினால் தான்! இன்று அநேகருக்கு இரட்சிப்பும், பரிசுத்த வாழ்வும், பரலோக பாக்கியமும், நீத்திய ஜீவனும் கிடைத்து இருக்கின்றது.

 

இன்னும் வேதத்தில்

தானியேல், ஏசாயா, எரோமியா, எசேக்கியல், போன்ற பல பரிசுத்தாவான்கள் கர்த்தருடைய சித்தத்தின் படி பலவாறு நெருக்கப்பட்டார்கள், அவர்களாலே தான் இஸ்ரவேல் ஜனங்கள் பல ஆழிவிலிருந்து பாதுகாக்க பட்டும், மன்னிக்க பட்டும் இருந்தார்கள்.

 

வேதாகமத்தில் உள்ள பரிசுத்தவான்களின் நெருக்கங்கள், அந்த நேரத்தில் அவர்களுக்கு வேதனையாகவும் குழப்பமாகவும் தான் இருந்தது, ஏன் கர்த்தர் நம்மை இப்படி எல்லாவிதத்திலேயும் நெருக்குகின்றார் என்று. 

 

ஆனால் பாருங்கள், அந்த எல்லா நெருங்களும் எதற்காக என்று ?  அவர்களை கொண்டு தான் கர்த்தர் தேசத்துக்கும், மனிதர்களுக்கும், எல்லாவற்றையும் செய்யதார், செய்து முடித்தார்.

 

நீதிமானே, பரிசுத்தவானே ! இவர்களைபோலவே நீயும் உன் சொந்த குடும்பத்தாலும், மற்ற மனிதர்களாலும், தேவைகளாலும், நெருக்கபடுகின்றாயா ? கவலைபடாதே,  கொஞ்சம் காலம் பொருத்துகொள், உன்னை கொண்டு கர்த்தர் ஏதோ செய்ய நினைக்கின்றார் உன்னை கொண்டு  பல தேசங்களும், மனிதர்களும் காப்பாற்றவும், இரட்சிக்கவும், வேண்டி இருக்கின்றது........ 

 

ஆதாலால் உன் நெருக்கத்திலே தேவனை இன்னும் அதிகமாக தேடு 

 

எந்த நெருக்கங்களும் அதிகநாள் இருக்காது என்பதை அறிந்துகொள்,.,...



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
RE: நீதிமானே, பரிசுத்தவானே !! உனக்கு ஏன் அநேக நெருக்கங்கள்...!!
Permalink  
 


அருமையான பதிவு!

புயலும் ,மழையும் ,பெருவெள்ளமும் மோதி அடிக்கும்போது மரம் அதிகமாக உருகுழைந்து காணப்படும் அதன் பக்கவேர் எல்லாம் அறுந்துவிடும் ஆனால் ஆனிவேர் பெலத்தில்தான் அவை நிற்கும் புயல் ஓய்ந்தப் பிறகு அங்கு ஒரு அமைதி உண்டாயிருக்கும் . அந்த அமைதியில் இழப்புகள் ஆராயப்படும் அவைகளை பெரிதாக என்னாமல் மரத்தின் ஆணிவேர் இன்னும் அதிகமாக மழையால் குளிர்ந்த பூமியில் இன்னும் ஆழமாக வெர் செல்லும்.

அப்படியே மனிதனின் வாழ்கையில் ஆணிவேராகிய கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் உறுதியாய் ஆழமாக இருக்கும்போது எத்தனை போராட்டம்,சோதனை ,நிந்தைகள்,அவமானங்கள் ,கஷ்டங்கள் மத்தியில் அதிகமாக நமக்கு பக்க வேரான பொருள் இழப்புகள்,வாய்ப்புகள்,நன்மைகள் இழந்துப்போனாலும் கிறிஸ்துவின் அன்பின் உறவில் நம்முடைய ஆத்துமா அவரை உறுதியாய் பற்றிக்கொண்டு எவ்வித பதட்டமும் இல்லாது இருக்கும்.

அப்படியே மரம் விழுவதற்கு தேவன் ஒப்புக்கொடுத்தாலும் (மரணம்) அதன் நிமித்தம் அநேக விசுவாச மரங்களின் விதைகள் நிலத்தில் விழவும் அந்த மரத்தினை செதுக்கி அதன் உறுதித்தன்மையை ஆராய்ந்து அது எல்லோருக்கும் பயனுள்ள பலகையாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

அநேக ரத்த சாட்சிகள் மரித்தும் இன்றும் பேசப்படுகிறார்கள்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard