உம் சந்தோசத்தின் நோக்கம் உம்முடையப் பாதையில் நீர் எதையல்லாம் சந்தித்தீரோ அதில் மிகச் சிறியதை அனுமதித்து அப்போது என் உள்ளத்தை உற்றுக் கவனிக்கிறீர் .நான் துன்பங்களை சகிக்கும் காரணத்தை அறிந்து சந்தோசப்படுகிறீர்
நீர் சத்தியத்தின் நிமித்தம் துன்பப்பட்டீர்!
ஆனால் நானோ நான் செய்த பாவம் எவ்வளவு மோசங்களை விளைவித்தது என்பதை உணரும்படி துன்பப்படுகிறேன்.
நான் செய்த பாவங்களை நீர் மண்ணித்தாலும்.அந்த பாவம் எத்தகைய கொடுமையானது என்பதை துன்பங்கள் வழியாய் எனக்கு உணர்த்துகிறீர்.
உம்முடைய பாடசாலையில் நான் படிக்கும் ஒழுங்கற்ற மாணவன் ஆகையால் எனக்கு அநேக பிரம்பு அடிகள் கிடைக்கிறது! நீர் என்னை நேசிப்பதால் என்னை தண்டித்து திருத்துகிறீர் .
தேவனே உம் சந்தோசம் உம்முடைய வழியில் எனக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை சுமக்கும் போது உம்மைப்போல எல்லா சூழ்நிலையிலும் நடந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே!
ஒவ்வோரு பாடுகளிலும் உம்முடைய சுபாவத்தில் நான் வளரும்படி செய்கிறீர்.
உம்முடைய கிரியைகளை தொடர்ந்து செய்யுங்க என் தந்தையே!