முதலாவது, தேவனுடைய வித்து என்பதற்கு என்ன அர்த்தம் .....?
பூமியில் தந்தையைப் போலவே பிள்ளை என்பார்கள் !!
ஆம், தேவனைப்போலவே எவன் ஒருவன் இருக்கின்றானோ அவனே தேவனுடைய வித்து ஆவான்.
சரி தேவன் எப்படி இருக்கின்றார் ?
தேவன் இரக்கமும், அன்பும். நீதியும், நியாயமும், ஒழுக்கமும்,பரிசுத்தமும், தாழ்மையும், நீடிய பொருமையும் நிறைந்தவராயிருக்கின்றார்.
ஆக, தேவனை போலவே எவன் ஒருவன் இரக்கம், அன்பு, நீதி நியாயம், ஒழுக்கம், பரிசுத்தம் நிறைந்தவனாய் இருக்கின்றானோ, அவனே தேவனுடைய உண்மையான வித்து ஆவான்.
அப்போ ? தேவனுடைய வித்தாக இருப்பதற்கு நற்கிரியைகள் தான் காரணமா ...?????
ஆம், நற்கிரியைகள் தான் ஒருவரை தேவனுடைய வித்து என்றும், சாத்தானுடைய வித்து என்றும் பிரித்துகாட்டுகின்றது.!!!
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1யோவா 3 :9
இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் யாருடைய வித்தாய் இருக்கின்றீர்கள் ?????
தேவனுடைய வித்தாகவா ? சாத்தானுடைய வித்தாகவா.?
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)