இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்களே ! யெகோவா சாட்சிகளே ! இயேசு கிறிஸ்து யார் என்று அறிந்துகொள்ளுங்கள்.!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
கிறிஸ்தவர்களே ! யெகோவா சாட்சிகளே ! இயேசு கிறிஸ்து யார் என்று அறிந்துகொள்ளுங்கள்.!!
Permalink  
 


 

இன்று அநேகருக்கு,  இயேசு 

கிறிஸ்து யார் என்று சரியாக தெரியவில்லை ?

 

யெகோவா சாட்சிகளுக்கும், இயேசு கிறிஸ்து யார் என்று கொஞ்சம் கூட தெரியவில்லை, ஆனால் யெகோவா தேவனை அறிந்து இருக்கின்றார்களாம்......

 

பெரும்பாலும் பல கிறிஸ்தவர்களும், ஏன் போதகர், தீர்க்கதரிசிகள் முதற்கொண்டு தாங்கள் வணங்குகின்ற, இயேசுவை சரியாக அறிந்துகொள்ளாமல் வணங்குகின்றார்கள்....

 

கிறிஸ்தவர்கள் பலர் இயேசுவை சரியாக அறியாததினால், யெகோவா சாட்சிக்காரர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், மறுவுத்தரவு சரியான முறையில் கொடுக்க முடியவில்லை, தெரியவில்லை.

 

சரி விஷயத்திற்கு வருவோம்!!

 

இயேசு கிறிஸ்து யார் ?

 

வேதத்தில் பிதாவாகிய யெகோவா தேவன் இவ்வாறாக சொல்கின்றார் !!

 

நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

ஏசா 43 :11 

 

நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.

 ஏசா 45 :5 

 

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசா 45 :6 

 

வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசா 45 :18 

 

இந்த வசனத்தின் மூலம், அவர் ஒருவரே தேவன் என்றும், என்னை தவிர வேறு ஒருவரும் இல்லை என்றும்,

 

இன்னும் தெளிவாய் சொல்ல போனால் அவருக்கு முன் வேறொரு தேவனும் இல்லையாம் , பின்பு வேறொரு தேவனும் எழும்பபோவதும் இல்லையாம்,  என்று தெளிவாய் சொல்கின்றார்.

 

இப்படி இருக்க இந்த கிறிஸ்தவர்கள் வணங்கும்

 

இயேசு கிறிஸ்து யார் ? 

 

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன், கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்,

சங் 2 :7 

 

தேவன், இயேசு கிறிஸ்துவை ஜனிபித்தார், என்றால் எப்படி ஜனிபித்தார்? எதற்க்காக ஜனிபித்தார்?

 

விளக்குகின்றேன் புரிந்துகொள்ளுங்கள் !!

 

ஆதாம் செய்த தவறுகளால் உலகமும், பூமியும் அதில் உள்ள அனைத்து மனிதர்களும், சாத்தானுக்கு அடிமையாகவும், சாத்தானுடைய இராஜ்யத்திற்கு உட்பட்டவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

 

இந்த மனிதர்களையும், உலகத்தையும், மீட்க்க வேண்டுமானால், யார் பூமியையும், மனிதர்களையும் படைத்தாரோ, அவரே வந்து பலியாக  வேண்டும். ஏனென்றால் வேறொரு தெய்வம் நமக்கு இல்லை ?

 

நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை, தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன், அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று.

ஏசா 63 :5 

 

சரி, எல்லாவற்றையும் படைத்தது 

யார் ?  

 

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

சங் 33 :6 

 

ஆம், யெகோவா தேவனே !! வார்த்தையினால் சகலத்தையும் படைத்தார்""!

 

இந்த யெகோவா தேவன் தான் பலியாக வேண்டும்!  

முடியுமா சொல்லுங்கள் ? 

 

முடியாதல்லவா ? ஆனாலும் நாம் அடிக்கடி" சொல்லுகின்றோமே  இரக்கங்களின் பிதாவானர்" என்று அந்த பிதாவாகிய யெகோவா தேவன், மனிதர்களை அப்படியே விட்டுவிட மனதில்லாமல், .

 

மனிதனை மீட்க்க வேண்டும் என்று, மரிக்க முடிவெடுத்தார்.

 

எப்படி ? 

 

பிதாவாகிய யெகோவா" பூமியையும், மனிதர்களையும் எதினால் படைத்தார் தம் வாயின் வார்த்தையின் மூலம் அல்லவா.!!

 

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

சங் 33 :6 

 

ஆம், பிதாவான யெகோவா தன் வாயின், "வார்த்தை" என்ற வல்லமையை (power) தனியாக பிரித்து எடுத்தார், 

அந்த வார்த்தையை மாம்சம் ஆக்கினார். அவர் தான் இயேசு"

 

இப்போ படிங்க அர்த்தம் 

புரியும் !!

 

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவா 1 :14  

 

அந்த மகிமை பிதாவுக்கு ஏற்ற மகிமையாம், இப்போ புரிகின்றதா?

 

இன்னும் என் ஆண்டவராகிய இயேசு" யார் என்று தெளிவாக விளக்க விரும்புகின்றேன்!!

 

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவா 1 :1

 

ஆதியிலே வார்தை, தேவனிடத்தில் இருந்தது என்றால் என்ன அர்த்தம் ? 

 

தேவன் பக்கத்தில் வார்த்தையிருந்ததா ? 

 

அப்படி தேவன் பக்கத்தில் வார்த்தை இருந்தால், ஏன்  வசனம் இப்படியாக சொல்லவேண்டும்?

 

அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவா 1 :1.......... என்று...

 

சரி, ஒரு உதாரணத்தோடு இதை சொல்ல விரும்புகின்றேன் புரிந்துகொள்ளுங்கள்.

 

ஆதியிலே பிதா  இருந்தார், பிதாவோடு கையிருந்தது, பிதாவோடு கால் இருந்தது, பிதாவோடு கண், வாய் இருந்தது என்றால் என்ன அர்த்தம் ?

 

பிதா தனியாக இருந்தார், பிதாவின், கண் தனியாக இருந்தது, பிதாவின் கை, கால் தனியாக இருந்தது 

என்பதாகவா அர்த்தம் வரும் ?

 

எல்லாம் பிதாவோடு கூடவே இருந்ததாக, தானே அர்த்தம் வரும். 

 

அப்போ வார்த்தை,  அதுவும் அதே போல தானே ? 

 

கொஞ்சம் யோசிங்க !

 

இப்ப படியுங்க இந்த வசனத்தை 

 

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவா 1 :1 

 

அந்த வார்த்தை தேவனோடு இருந்தது என்றால், தேவன் தன் வாயினால் பேசிகின்றார் அல்லவா ! 

 

 ...... அந்த வார்த்தை தான்.....

 

இப்போ புரிகின்றதா இயேசு" யார் என்று,  இயேசு இன்னொரு தெய்வம் அல்ல யெகோவா தேவனின் வார்த்தை........அதாவது பிதாவின் வார்த்தை !!! 

 

இயேசு , தேவனின் வார்த்தை தான் என்று அருமையான வசன ஆதாரம் தருகின்றேன் பாருங்கள்.....

 

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார், அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

வெளி 19 :13 

 

இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் தெரியுமா உங்களுக்கு ?

 

" தேவனுடைய வார்த்தை ",... 

 

யெகோவா சாட்சிகளே" இப்பொழுது கீழே சொல்லப்பட்ட வார்த்தைகளை படித்து புரிந்துகொள்ளுங்கள்

யெகோவா தேவன்" ஏன் இப்படி சொல்கின்றார் என்று "!!!!

 

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

 ஏசா 43 :10 

 

இன்னும் யெகோவா சாட்சிகள் தெளிவான வசன ஆதாரம் கேட்பார்கள் இல்லையென்றால் நம்பமாட்டாங்க ?

 

யெகோவா தேவனே, நான்,இயேசு என்று சொல்லும்,  சரியான வசனம் ஆதாரம் தருகின்றேன் ஏற்றுகொள்ள மனம் இருந்தால் ஏற்றுகொள்ளுங்கள் ? 

 

ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

ஏசா 63 :1 

 

இந்த வசனத்தை நன்கு கவனியுங்கள் 

 

தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? 

 

என்று யெகோவா தேவனே கேட்க்கின்றார் ? 

 

அந்த யெகோவா தேவனே இவர் யார் ? என்று பதில் சொல்கின்றார் பாருங்கள்.

 

நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

 

திரும்பவும் அந்த வசனத்தை இரண்டு, மூன்று முறை படித்து பாருங்கள், புரியும் !

 

கிறிஸ்தவர்களே, இப்பொழுது தெரிந்து கொண்டு இருப்பீர்கள் இயேசு கிறிஸ்து யார் என்று.

 

நமக்கு மூனு தேவனே, நாலு தேவனே இல்லை ஒரே தேவன் தான்"

 

அவரே நமக்கும், இயேசுவுக்கும் பிதாவானவர்

 

இயேசு யெகோவா தேவனுடைய வார்த்தையானவர்.,,,

 

ஆக, அனைத்து பிதாவாகிய யெகோவா தேவனே!!! 

 

யெகோவா சாட்சிகளே,  இயேசு சாதரனமானவர் அல்ல  நீங்கள் யெகோவா, யெகோவா என்று சொல்கின்றீர்களே அவருடைய வார்த்தை தான் இயேசு" என்பதை மனதில் வைத்துகொண்டு பேசுங்கள்.

 

மொத்தத்தில்.......

 

அந்த யெகோவா தேவனே" மனிர்களை மீட்க தன்னை பிரித்து கொண்டு செயல்படுகின்றார் என்பதை இப்பொழுதாவது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்....

 

இந்த பதிவை, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் share செய்யுங்கள்,  இயேசு கிறிஸ்து யார் என்று கேட்கின்றவர்களுக்கு மறுவுத்தரவு கொடுக்கட்டும்.....



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard