மாற்கு 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன்,மரணத்தைருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 9:27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தைருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மனுஷ குமாரன்கூட தேவன்தான் எனவே
"தேவனுடைய ராஜ்ஜியம் பலத்தோடு வருவதை காணும் முன் மரணத்தை ருசி பார்ப்பதில்லை" என்றும் நாம் எடுத்துகொள்ள முடியும்.
இது எதை குறிக்கிறது என்றால் பெந்தேகோஸ்தே நாளில் தேவனின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் பலத்தோடு இறங்கி வந்த அனுபவத்தையே குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவரும் தேவன் தானே. அவர் வருகையும் தேவ ராஜ்ய வருகைதானே.
தேவனுடைய ராஜ்ஜியம் எப்பொழுது வரும் என்று இயேசுவிடம் கேட்டபோது அவர் இவ்வாறு பதில் தந்தார்:
லூக்கா 17:21இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடையராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
எனவே நமக்குள் இருப்பதுதான் தேவனின் ராஜ்ஜியம். அந்நேரம் இரட்சிப்பை மாத்திரம் பெற்று பரிசுத்த ஆவியானவர் அருளப்படாததால் பலம் இல்லாமல் இருந்தது. பரிசுத்த ஆவிக்கு பின்னர் அது பலம் பொருந்தியதாக மாறியது.
மேலும் ரோமர் 14:17தேவனுடையராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
"பரிசுத்த ஆவியாலுண்டாகும் சந்தோசம் சமாதானம்தான் தேவனுடைய ராஜ்ஜியம்" என்றும் வசனம் சொல்கிறது. மேலும் பரிசுத்த ஆவியானவரும் தேவனின் ஆள்த்துவமே எனவே அவர் பலத்தோடு வந்ததை தேவனின் ராஜ்ஜியம் வருகையாக எடுத்துகொள்ள முடியுமே.
-- Edited by SUNDAR on Thursday 4th of June 2015 03:55:43 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)