Gnana Piragasam//இயேசுவானவரின் வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்வதில் நீங்களும் இதுவரை தவறவேயில்லை என்று சொல்லவருகிறிர்களா?//
இல்லை.
//அல்லது இனிமேல் ஒரு கற்பனையைக்கூட கடைப்பிடிக்க தவறவேமாட்டோம் என்று சொல்லவருகிறிர்களா அண்ணா?//
இதுவும் இல்லை.
இயேசுவின் வாக்கை நம்பி, அவரது வார்த்தைகளின்படி நடக்க முயற்சிக்கிறேன். தேவனின் பார்வையில் எனது முயற்சி வெற்றிபெற்றதாக அங்கீகரிக்கப்பட்டால், நிச்சயம் நான் மரணத்தைக் காணாதிருப்பேன்.
Gnana Piragasam //மேலும் அண்ணா பேதுரு அப்படி பண்ணினது மரணத்திற்க்கு ஏதுவான பாவந்தானா அண்ணா?//பேதுருவின் எந்த பாவத்திற்காக அவருக்கு சரீர மரணம் சம்பவித்தது என்பதைச் சொல்வது என் வேலையல்ல. அவரும் குற்றமுள்ளவராக இருந்தார் என்பதற்கு வேதாகமத்திலிருந்து ஆதாரம் தந்துள்ளேன், அவ்வளவே.
-- Edited by SUNDAR on Monday 22nd of June 2015 03:23:25 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பான சகோதரரே பவுல் என்ற மனுஷன் மேலிருக்கும் உங்களின் நம்பிக்கையை விவாதத்தால் மாற்றிவிட முடியாது என்று அறிகிறேன்.
பவுல் என்றொரு தன்னலம் பாராது கிறிஸ்த்துவுக்காக பாடுபட்ட ஒரு மனுஷன் இருந்ததால்தான் இன்று அனேக நாடுகள் கிறிஸ்த்தவ நாடாக இருக்கிறது எனவே அவரைப்பற்றி குறைகூறிக்கொண்டிருக்க விரும்பவில்லை
நான் என்ன பதில் சொன்னாலும் அதிலிருந்து எதோ ஒரு கேள்வியை நீங்கள் நிச்சயம் எழுப்புவீர்கள். நீங்கள் பவுலை நம்புங்கள் நான் இயேசுவின் வார்த்தையையும் தேவனின் சர்வ வல்லமையையும் நம்புகிறேன்.
ஏசாயா 2:22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
கோலியாத்தை பார்த்து பயந்த இஸ்ரவேல் வீரர்களுக்கு அவர்கள் பயப்பட "பெரிய உருவம்/ பெரிய ஈட்டி/ பெரிய கவசம் போன்ற அனேக காரணம் இருந்திருக்கலாம் ஆனால தேவனுக்குள் இருந்த தாவீதுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
அதேபோல் சரீர மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆக முடியும் என்ற ரகசியத்தை நம்பாமல் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் கேள்விகள் இருக்கலாம் ஆனால் "தேவனுக்குள் எல்லாம் கூடும்" என்ற விசுவாசம் இருந்தால் வேறெதுவும் நமக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.
தேவனின் வார்த்தைகள் மீதுள்ள விசுவாசத்தை உங்களுக்கு ஊட்ட என்னால் முடியாது அதை தேவன் தாமே உங்களுக்கு தரவேண்டும் எனவே விட்டுவிடுவோம்.
எடுத்தவுடன் "அது முடியாது" "தவறான கருத்து" "இல்லாத ஊருக்கு வழி தேடுகிறான்" என்று சொல்லி விலகி போகிறவர்கள் மத்தியில் இவ்வளவு பொறுமையோடு கேள்விகளாய் கேட்டு விவதித்ததர்க்கு கர்த்தருக்குள் என் நி்ன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
இயேசுவின் வார்த்தைகளின் வல்லமையை அப்படியே விசுவாசிக்கும் சகோ ஞானபிரகாசம் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்.
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
என்ற இயேசுவின் வார்த்தைகள் அப்படியே நிறைவேறுகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
-- Edited by SUNDAR on Monday 22nd of June 2015 03:25:45 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Elango Gopal /////நன்றி சுந்தர் அண்ணா. நான் மேலே எங்கேயாவது பவுல் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொன்னேனா அண்ணா? ////
அன்பான சகோதரரே கேள்விகள் கேட்பது சுலபம் எத்தனை பெரிய விளக்கம் கொடுத்தாலும் ஒரே வரியில் திருப்பி ஒரு கேள்வி எழுப்ப முடியும் ஆனால பதில் சொல்வதற்கு அதிக பொறுமை வேண்டும் அதிலும் தாங்கள் கேட்கும் கேள்விகள் எப்படி இருக்கிறது தெரியுமா?
ஒரு பிச்சைகாரன் தங்களிடம் வந்து ஐயா வயிறு ரொம்ப பசிக்குது தலை எல்லாம் சுற்றுது ஐயா இரண்டு நாளாக சாப்பிடலை ஐயா என்று சொல்கிறார். உடனே நீங்கள் மனமிரங்கி பக்கத்து கடையில் ஒரு பார்சல் இட்லி வாங்கி அவனிடம் கொடுக்க போகிறீர்கள். அப்பொழுது அவன் உங்களை பார்த்து "நான் இட்லி வேண்டும் என்று எப்போதாவது கேட்டேனா? " என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
பவுல் மரித்துபோய்விட்டார் என்பதற்காக இயேசுவின் வார்த்தைகளையே மாற்றி பொருள் கொள்ள முயர்ச்சிக்கிறீர்கள் ஆனால் "பவுல்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று நான் சொன்னேனா? என்று கேள்வி கேட்கிறீர்கள்"
Elango Gopalமேலும் // ரோமர் 7:24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? //
நிர்பந்தமான மனுஷன் நான் என்று பவுல் சொல்வது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்க்கு முன்பு அவரது வாழ்க்கை நிலையை வவரித்து உதாரணப்படுத்தியிருக்கிறாரா? அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபிறகும் அவர் பாவத்திற்க்கு அடிமையாயிருந்ததை குறிக்கிறதாயிருக்கிறதா? நீங்கள் என்ன சொல்றீங்க அண்ணா.
இந்த கேள்வியும் அதேபோல்தான் இருக்கிறது,
நான் குறிப்பிட்டுள்ள வசனத்துக்கு மேலேயுள்ள ஒரு 6 - 7 வசனத்தை நன்றாக படியுங்கள் எதில் ஏதாவது இறந்த காலத்தை குறிக்கும் வார்த்தையாக இருக்கிறதா?
15 நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். (செய்தேன் அல்ல)
16நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.
18நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
19விரும்பாத தீமையையே செய்கிறேன்.
21என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
இருக்கிறேன்/ செய்கிறேன் / காண்கிறேன்/ ஒத்துகொள்கிறேன் என்ற வார்த்தைகள் எல்லாமே அவர் நிருபம் எழுதும்போதுள்ள நிகழ்காலத்தை குறிக்கும் சொற்கள் என்பது தங்களுக்கு தெரியும்தானே?
பவுல் ரோமாபுரிக்கு நிருபம் எழுதும்போது கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டிருந்தார் தானே?
பிறகு என்ன இப்படியொரு கேள்வியை கேட்கிறீர்கள்?
பவுல் என்ன சொல்கிறார்: நான் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டு ஆவிக்குரியவனாக இருந்து நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதற்க்கு விரோதமாக தீமை செய்ய போராடும் ஒரு பிரமாணத்தை என் சரீரத்தில் காண்கிறேன் என்கிறார்.
ஆம்! அவர் சொன்னது மிக சரியான ஒன்றுதான் இயேசுவை ஏற்றுக்கொணடு அபிஷேகம் பெற்று உத்தமமாய் வாழ நாம் மனதுக்குள் வாஞ்சித்தாலும் கூட நம் கண் என்ற அவயமானது கண்ட ஸ்திரிகளை நோக்குகிறதே அதைதான் அவர் சொல்கிறார்.
சொல்லிவிட்டு
அதனால் "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?"
என்ற கேள்வியை எழுப்புகிறார்.
யார் என்னை விடுதலையாக்குவார்?"என்ற வார்த்தை நிகழ் மற்றும் எதிர் காலத்தை குறிக்கும் வார்த்தைகள். இறந்தகாலம் என்று சொல்வதற்கு அங்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அதாவது கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்டபின்னர் அவர் ஆவியின்
பிரகாரமாக பாவத்துக்கு அடிமை இல்லை, ஆனால் பாவ சரீரத்தின் பிரகாரமாக பாவத்துக்கு அடிமை என்று சொல்கிறார்
Elango Gopal///பிறகு ஏன் அவரே பின்வரும் வசனங்களில் இப்படி சொல்கிறார் -> கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே என்று சொல்கிறார்?////
மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே என்று சொல்லி தானும் மரிக்காமல் மறுரூபம் ஆவோம் என்று விசுவாசித்தவர் தான் பின்னாளில் மரித்துபோனார். அதனால்தன அவர் விசுவாசத்தில்/ இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றியதில் எங்கோ தவறு இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்கிறேன்.
எனக்கு தங்களை ஒரே ஒரு கேள்வி கேட்க அனுமதி கிடைக்குமா?
மாற்கு 10:27இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
இயேசு சொன்ன இவ்வசனங்களில் "எல்லாம் கூடும்" என்ற வார்த்தையின் சரியான பொருள் என்ன?
Subject to Paul's words & Paul's life every thing is possible to God. என்று இயேசு சொன்ன வசனத்தை மாற்றிவிடலாமா? அல்லது இவ்வசனம் குறித்த உங்கள் விளக்கம்தான் என்ன?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)