கிறிஸ்த்துவின் இரட்சிப்பினுள் இருக்கும் ஆவிக்குரியவர்களாகிய நாம் நியாயப்பிரமனத்துக்கு கீழ்படவர்கள் இல்லை என்பது உண்மைதான். அனாலும் நாம் இந்த உலகத்தில் வாழும் வரை நியாயப்பிரமாணம் நம்மை ஆள்கிறது என்பதை அறியவேண்டும்.
ரோமர் 7:1 ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம்அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?
நம் உலக வாழ்வில் வரும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம் தேவனின் வார்த்தைகளை மீறி நாம் செய்யும் காரியங்கள்தான் என்பதை நிச்சயம் அறிய வேண்டும்.
சிறு பிள்ளைகளிடம் "வேகமாக வண்டி ஓட்டாதே" "துஷ்டனிடம் சேராதே" "ஒழுங்காக படி" என்று அனேக அறிவுரை சொல்கிறோம் காரணம் செய்யக்கூடாத காரியங்களை செய்வதினால வரும் தீமைகளை நாம் அறிந்திருக்கிறோம் எனவே அதை நம் பிள்ளைகளுக்கு முன்னமே சொல்லிகொடுக்கிறோம்.
அதே போல்
"ஹெல்மெட் அணியுங்கள்" "குடி குடியை கெடுக்கும்" "வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதே" என்று பல அறிவுரைகள் பொதுவாக எழுதப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். காரணம் இந்த காரியங்களை செய்ததினால் பலர் மரித்திருக்கலாம் பல விபத்துக்கள் நடந்திருக்கலாம் பல குடும்பங்கள சிதைந்திருக்கலாம். இதை எல்லாம் அறிந்து அனுபவபட்டவர்கள் அடுத்தவர்களும் அதுபோல் வேதனையில் விழகூடாது என்று எண்ணி முன் எச்சரிக்கையாக இவற்றை எழுதி வைத்துள்ளனர்.
அதேபோல்தான் தேவனும்,
அவர் எந்தனையோ காலம் காலமாக அனாதியாக என்றென்றும் வீற்றிருக்கிறார். மனுஷன் தன ஞானத்தில் இதுபோன்ற எச்சரிக்கையை எழுதும்போது அவருடைய ஞானம் எவ்வளவு பெரியது.
யோபு 12:12முதியோரிடத்தில் ஞானமும் வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. 13. அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
அந்த சர்வஞானம் உள்ள தேவன் இந்த உலக வாழ்வில் "எது நல்லது எது கேட்டது" "எதை செய்யலாம் எதை செய்யகூடாது" என்று விளக்கமாக எழுதிகொண்டுத்த புத்தகம்தான் நியாயப்பிரமாணம்.
எப்படி ஒரு மனுஷன் இத்தியாவில் பிறந்துவிட்டால் இந்திய சட்டங்கள் அவன்மீது தானாக அமுலுக்கு வருகிறதோ அதுபோல் இந்த உலகத்தில் நாம் பிறந்துவிட்டாலே நியாயப்பிரமாணமதான் நம்மை ஆழுகை செய்கிறது.
எனவே துன்பம் துன்பம் என்று தவிக்கும் ஒவ்வொரு மனுஷனும் தேவன் தந்த வார்த்தைகளை கருத்தாய் கவனித்து கைகொண்டு நடந்தால் கண்டிப்பாக கொடிய வேதனைகளுக்கு தப்ப முடியும் என்பதற்கு நானும் என் வாழ்க்கையுமே சாட்சி.
அதுமட்டுமல்ல தேவனின் இருதயத்துக்கு ஏற்ற தாவீது அதை முன்மொழிந்துளர்.
சங் 119:105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
அவர் மகன் ஞானியான சாலமோனும் அதை வழி முன்மொழிந்துள்ளார்