புத்தன் இயேசு காந்தி என்று சொல்லி சிலர் புத்தரை ஆண்டவராகிய இயேசுவோடு சேர்த்து ஒப்பிடுவதை கேட்டு அவர்கள் அறியாமையை நினைத்து மிகவும் வருந்தியதுண்டு.
ஒருமுறை புத்தர் தங்கியிருந்த குடிலுக்கு இறந்துபோன தன் குழந்தையை தூக்கிவந்த ஒரு பெண். தன மகன் செடி கொடிகளுக்குள்ளே ஊர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது ஒரு நச்சு பாம்பு தீண்டியதால் இறந்துபோனான். மிகப்பெரிய மாகானாகிய நீர் எப்படியாவது என் மகனை உயிர்ப்பித்து தரவேண்டும் என்று வேண்டுகிறாள்.
அவளின் பரிதபிப்பை பார்த்த புத்தர் சொல்கிறார் "நீ உடனே புறப்பட்டு போய் நாவிய கடுகு அரைப்படி வாங்கி வரவேண்டும் அதுவும் சாவினை அறியாத வீட்டில் அதை வாங்கி வரவேண்டும் என்று சொல்கிறார்.
அந்த பெண்ணும் பகலெல்லாம் அலைந்தும் யாரும் கடுகு கொடுக்கவில்லை இறுதியில் ஒரு ஏழைப்பெண் கடுகை கொடுக்க முன்வருகிறாள். அவள் கடுகை அளந்து மடியில் போட வரும்போது இந்த தாய் கேட்கிறாள் "அம்மா இது சாவினை அறியாத வீடுதானா?" என்று. உடனே அந்த பெண்மணி சாவு இல்லாத வீடு எங்கம்மா இந்த உலகத்தில் இருக்கிறது? என்று சொல்லி கடுகை போடுவதை நிறுத்தி விடுகிறாள்.
இறுதியில் கடுகு இல்லாமல் திரும்பி வந்த பெண்மணியிடம் "சாவு இல்லாத வீடு எங்குமே இல்லை, எனவே மரணம் என்பது எல்லோருக்கும் நிர்ணயித்த ஓன்று அதனால மரித்த உன் பிள்ளையை பிழைக்க வைப்பது என்னால முடியாது" என்பதுபோல் சொல்லி புரியவைத்து அனுப்பிவிடுகிறார்.
புத்தரால் இவ்வளவுதான் செய்ய முடிந்தது.
ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு செய்ததை பாருங்கள்!
14. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;.....இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
21. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
23. இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
24. அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
32. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:34. அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்; 35. இயேசு கண்ணீர் விட்டார்.
38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
41. அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
42. நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்.
இயேசு செய்ததற்கும் புத்தர் செய்ததற்கும் எவ்வளவு வேறுபாடு என்று பாருங்கள்!
மரித்தனவனை உயிரோடு எழுப்பியதோடு "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று தேவனேயல்லாமல் வேறு எந்த மனுஷனால் சொல்ல முடியும்?
எனவே அன்பர்களே இயேசு காணக்கூடாத தேவனின் காணக்கூடிய உருவமாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஜீவனுள்ள தேவனை உலக மனுஷர்கள் தகுதியோடு ஒப்பிட்டு பேசாதீர்கள்!
-- Edited by SUNDAR on Wednesday 17th of June 2015 04:07:53 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)