அன்புள்ள தேவனே தாழ்மையான ஒரு ஜீவியமே என்னுடைய பங்காக இருக்கட்டும் .நான் எல்லா கஷ்டத்திலும் சந்தோசிக்கச் செய்யும் .
அன்புள்ள கர்தாவே நான் உம்மில் மறைந்து ,கொஞ்சமும் காணப்படாமல் முற்றிலும் மறைந்துப்போகும் வரை நாளுக்கு நாள் சிறியவனாகிக்கொண்டே போக தயவாய் எனக்குப் போதித்தருளும் .
என்னில் உம்முடைய நிறைவைத் தவிர வேறொன்றும் காணப்படாமற்போகும் வரை என்னை நானே வெறுமையாக்கிக்கொள்ள எனக்கு தயை புரிந்தருளும் .
கிருபையுள்ள கர்த்தாவே ,உம்முடைய பரிசுத்த சமுகத்தில் செலவிட ஒரு நாளின் இருபத்துநான்கு மணி நேரமும் எனக்கு போதாது என்று நான் உணரக்கூடிய அளவிற்கு ஒரு இனிமையான ஜெபஜீவியத்தை தந்தருளும் .
சீர்திருத்துதலும் கடிந்துக்கொள்ளுதலும் என்னிலும் இளையவர்களிடத்திலிருந்து எனக்கு வந்தாலும் நான் அவற்றை நேசித்து ஏற்றுக்கொள்ள தயவாய் எனக்கு உதவிசெய்தருளும்.
என்னைப் புகழுகிறவர்களிடத்திலோ,பாராட்டுகிறவர்களிடத்திலோ ,உயர்த்துகிறவர்களிடத்திலோ நான் அன்புபாராட்டுவதைப் பார்க்கிலூம் என்னைக் கடிந்துக்கொள்கிறவர்களிடத்திலும் ,சீர்திருத்துகிறவர்களிடத்திலும்,சிட்சிக்கிறவர்களிடத்திலும் ,தாழ்த்துகிறவர்களிடத்க்திலும் அதிகமாக அன்புப்பாராட்ட எனக்கு கிருபைத்தாரும்.
கர்த்தாவே ,என் இருதயத்திலுள்ள எல்லாப் பொல்லாங்கையும் நீர் அறிவீர்.நான் ஒரு பரிசுத்தவான் அல்லது நீதிமான் என்ற அபிப்பிராயத்தை மற்றவர்களில் உண்டுபண்ண முற்படாமல் ,நான் இரட்சிக்கப்பட்டு தேவகிருபையினால் காக்கப்பட்டு வருகிற ஒரு பாவி மாத்திரமே என்பதையே அவர்கள் காணும்படி செய்வேணாக .
என் பரிசுத்த பிதாவே ,எனது எண்ணங்கள் எழுத்துக்களை யாதொருவரும்,பிசாசும் குற்றமும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு அவற்றை மிகவும் தூய்மையாகவும் பரிசுத்தமுள்ளவையாகவும் மாற்றியருளும்.
என்னை விரோதிப்பவர்கள் அனைவருங்கூட அவைகளை வாசித்து ,நான் அவர்களை எவ்வளவாக உண்மையாக நேசிக்கிறேன் என்பதை விளங்கிக்கொண்டு அதன் முலம் உமது அன்பின் பக்கமாகத் திரும்புவார்களாக
என் இன்ப இயேசுவே என்னால் யாராகிலும் மனதில் புன்படுத்தப்பட்டிருந்தால் குற்றவாளியாக இருந்தாலும் ,இராவிடினும் அந்தநபரின் மனகாயங்களும் ,வேதனைகளும் ஆற்றப்படும்படியாக நான் என்னைத் தாழ்த்தி அந்நபரிடம் மன்னிப்பு கேட்க உதவி செய்யும்
.
என் அன்புள்ள கர்த்தாவே ,என் இருதயம் உமது இருதயத்துக்கு சமீபமாயிருப்பதில் மாத்திரம் நான் திருப்திக் கொள்கிறதில்லை !உமது இருதயத்திலுள்ளவைகளே எனது ஜெபங்களாகவும் ,குறிக்கோளாகவும் இருக்கத்தக்கதாக என் இருதயம் உமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதாக .
அன்புள்ள தந்தையே ,நீர் ஜீவனோடு இருக்கிறீர் என்பதை இவ்வுலகில் பல கோடி ஜனங்கள் விசுவாசியாதிருக்கிறார்கள் .அவர்கள் எல்லொரும் உம்மை விசுவாசித்து பின்பற்றத்தக்கதாக நீர் இன்றும் ஜீவிக்கிறீர் என்பதை நான் உம்முடைய சுபாவத்தை என்னில் இருந்து வெளிப்படுத்த எனக்கு தயை செய்தருளும் .
என் திவ்விய நேசரே உம்முடைய பரிசுத்த வேதம் தேனிலும் தேன் கூட்டிலுமிருந்த்து ஒழுகும் தெளித்தேனிலும் மதுரமுள்ளதாக இருப்பினும் அநேகர் அதை ருசிப்பதில்லை ஆகையால் என்னுடைய ஜீவியத்தை உம்முடைய வார்த்தையின்படி நடக்கக்கூடியவனாக மாற்றி என்னைப் பார்க்கிறவர்கள் உம்முடைய வார்த்தையை அறிந்துக்கொள்ளத்தக்கதாக என்னுடைய சாட்சியுள்ள ஜீவியமாக இருக்கட்டும் .
சமாதாணத்திற்கு காரணராகிய என் தந்தையே உம்முடைய நோக்கத்தை எல்லா இடங்களிலும் தெரிவித்து சமாதானத்துக்குரிய பாத்திரமாக என்னை வணையும்.
ஏழைகளின் தேவனே ஏழைகள் விடும் பெருமூச்சுகளுக்கு பதில் கொடுக்கும் தந்தையானவர் நீர் ஆகையால் எந்த சூழ்நிலையிலும் ஏழைகளுக்காக வாழ எனக்கு உதவிச் செய்யும் .
சிறு பிள்ளைகளை நேசிக்கும் தாயுள்ளம் கொண்ட இரச்சகரே சிறுபிள்ளகளுக்கு வருகிற எல்லா தீமைகளை அறிவீர் ஆகையால் அவர்கள் வாழ்கை சூனியமாகப் போனாலும் பரத்தில் அவர்களை நான் பார்ப்பேனாக !இவ்வுலகம் அவர்களுக்கு சாதகமாக இல்லை !இவ்வுலகில் அவர்கள் பட்ட எல்லா துன்பத்துக்கும் அவர்கள் காரணமில்லை ஆகையால் நீதி செய்கிற என் நீதிபதி அவர்களுக்கு பரத்தில் இளைப்பாறுதலை கொடுக்கிறீர் அதைக் காணும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக !
அன்புள்ள தந்தையே பானபலியாக நான் வார்க்கப்பட்டாலும் என் சகோதர சகோதரிகள் எக்காரணத்தாலும் வஞ்சிக்கப்படு மோசம் போகக்கூடாது ,நான் நிலத்தில் மடிந்தாலும் என்னுடைய விசுவாசம் சோர்வின் பள்ளத்தாக்கில் இருப்போரை எழுந்திருக்கச்செய்யும்படிச் செய்யட்டும் .
தரித்திரர்களைப் போசிக்கும் தந்தையே உம்முடைய அரசாட்சியில் அவர்கள் மகிழுவதை நான் பார்க்கும்படியான சிலாக்கியத்தை தந்தருளும் .
எல்லாவற்றையும் இழந்து தவிப்போரை அரவணைக்கும் தாயுள்ளம் கொண்டவரே இவ்வுலகத்தில் அவர்கள் பட்ட வியாகுலத்தின் தன்மைகள் பெரிது ஆகையால் பரமராஜியத்தில் அவர்களுக்கு பங்கு கிடைக்க அவர்களை இவ்வுலகில் தெரிந்துக்கொள்ளும் .
தேவனே நான் சாகும்போது உம்முடை மடியில் படுத்துக்கொண்டும் நான் விழிக்கும்போது உம்மோடு இருக்கத்தக்கதாக வழிநடத்தும் .
என்னை நோகடிக்கும் எல்லா பெலவீனங்களிலும் உம்முடைய பெலன் கிரியை செய்யட்டும் .
நான் கோதுமை மனியாக நிலத்தில் விதைக்கப்படும்போது லட்சங்கள் விசுவாசத்தின் இழைகள் இட்டு எழும்பட்டும் அப்படிப்பட்ட முடிவாக என்னுடைய முடிவு இருப்பதாக