மனிதனுக்குள் உடனே வருவது பரிதாபப்படும் குணம்தான்.அது நம்மையும் பிறரையும் ஒப்பிடும்போது உண்டாகும். அது கிரியையில்லாத விசுவாசம் போன்றது.
மற்றவர்கள் பிரச்சனை வேதனையை உணர்ந்து அவர்களுக்கு ஏதாகிலும் செய்யவேண்டுமே என்கிற சிந்தையே தயை.
இரக்ககுணம் தேவனுடையது அவர் நமக்குள் இருந்து கிரியை செய்வதால் வருவது. இரக்கத்தில் சுயநலம் வருவதில்லை!
பரிதாபம் கொள்வதில் சுயநலம் இருக்கும் ஐயோ பாவம் என்று வேதனையோடு நம்மால் ஏதும் செய்யமுடியாது என்று உள்ளத்தில் தீர்மானிப்பதுடன் முடிவடையும்,அத்தகைய முடிவை மேற்கொண்டு அவர்களுக்கு உதவும்படி நம்மில் ஏவிக்கொண்டு இருப்பது நமக்குள் கிரியைசெய்யும் தேவ அன்பு .அப்படியே தேவ அன்பினால் நாம் செய்யும் கிரியையே நற்கிரியை அது பூர்த்தியாகும் செயல்வடிவத்துக்குத்தான் இரக்கம் பாராட்டுதல் என்கிற பதம் முற்றுப்பெருகிறது.
ஆகையால் பிறர் படும் துன்பங்கள் கண்டு கண்ணீர்வடிப்பது நமக்குள் இருக்கும் ஆவியானவரின் கிரியையே அதன் செயலுக்கு முழுக்காரணம் தேவனாகவே இருக்கமுடியும் ஏனென்றால் பரிசுத்த ஆவியானவராலே தேவனுடைய அன்பு நமக்குள் வந்து நம்மூலமாக தேவனுடைய குணங்களை பிரதிபலிக்க வழிவகைசெய்கிறது. இதில் நம்முடைய பங்கு தேவனால் நமக்குள் கொடுக்கப்பட்ட விசுவாசத்தை ஏற்றுக்கொள்வதே!அதாவது கீழ்படிவதே அதற்கும் நமக்குள் மனத்தாழ்மை மிக அவசியம் அத்தகைய மனத்தாழ்மையை கிறிஸ்துவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.