தேவனை முழுமையாக அறிகிறதுக்கு தேவனை அறிகிற அறிவு வேண்டும்.அந்த அறிவு தேவனோடு உறவாடுகிறதினால் மாத்திரம் வருவதில்லை தேவனுடைய சிந்தை அறிவதினால் மாத்திரம் முற்றிலும் தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து முதிற்ச்சி அடைந்துவிடலாம் என்பதும் இல்லை! மேற்கூரிய இவைகள் அந்தப்பாதையில் வரும் அனுபவங்களே அப்படியானால் தேவனை அறிகிற அறிவு என்பது என்ன?
எரேமியா 22:16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்படியானால் தேவனுடைய சிந்தையில் இருப்பது திக்கற்றவர்களுக்கும்,ஏழைகளுக்கும்,சிறுமையடைந்து தேற்ற ஆள் இல்லாதவர்களுக்கும், எளியர்களான பெலவான்களால் நசுக்கப்பட்டு புறக்கனிக்கப்பட்டவர்களுக்கு உதவவே தேவனுடைய சிந்தையில் இருப்பது இதை நாம் தேவனுடைய சிந்தையைப் பெற்று தேவனுடைய சுபாவங்களுடன் தேவபெலத்தால் நிறைவேற்ற நிறைவேற்ற படிப்படியாக தேவனின் விருப்பத்தையும் நோக்கத்தையும் அறிந்து அவருடன் ஒருமித்து சஞ்சரிப்பவர்களாக காணப்படுவோம்!
இது ஜீவனின் அனுபவமே தவிர கிருபையில்லாத வெறும் வேத றிவல்ல!
II கொரிந்தியர் 10:5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
நமக்குள் ஏற்படும் கிருபையில்லாத வேத அறிவினால் பெருமையும் மேட்டிமையுமே உண்டாகும்.இதன் பிரதிபலிப்பே இனக்கமும் இசைவும் இல்லாமல் தர்க்கம் செய்யும் குணம் நம்மில் மேலோங்குகிறது.
எத்த அளவுக்கு தேவனை அறிகிற அறிவில் வளர்கிறோம் என்கிற அளவுகோல் நம்மில் எந்த அளவுக்கு தேவனிடத்தில் இருந்து மனத்தாழ்மையை கற்றுஅதை உலகத்தில் கிறிஸ்துவை (ஆவிக்குரிய சுபாவங்களை) பிரதிபலிக்கும் அளவின்படி இருக்கிறது.