என் ஆவியை உயிர்பித்து அதனோடு நீர் இனைந்துவிட்டீர் ஐயா !என்னுடைய சிந்தை மறைந்து உம்முடைய சிந்தை எனக்குள் உருவாகுதய்யா!
உம்முடைய ஜீவனின் சுபாவத்தை என்மூலமாய் வெளிப்படுத்த ஆவியில் சிந்தனையை ஏற்படுத்தினீர் ஐயா!அதை நீரே எனக்குள் இருந்து நிறைவேற்றி எனக்குள் நீர் இருப்பதை சாட்சியாக நிருபித்தீர் ஐயா!
இனி நான் வாழ்வது உமக்காக ,ஐயா! என்னை அனுதினமும் என் ஜீவனை பலியாக அர்பணிக்கிறேன் ஐயா ,நான் கிரியை செய்யமாட்டேன் நீர் எனக்குள் இருந்து நற்கிரியை செய்யும்படி என்னைத் தாழ்த்தி ஒப்படைக்கிறேன் ஐயா!
நான். நியாய பிரமானத்தின்படி செய்ய முடியாததெல்லாம் இப்போது நீரே செய்கிறீர் ஐயா!
நான் உம்மில் மகிழ்ந்து களிகூர்கிறேன்.உமது அனுதின வெற்றி எனக்குள்ளே என் ஜீவனில் சமாதானத்தை அனுதினம் உண்டாக்குகிறதையா!