ஜீவியத்தைக் குறித்து அக்கறையில்லாமல் உலகத்தானாய் இருந்து மோசம் போகவேண்டாம்!
தேவனுக்கு ஏற்ற ஜீவியத்தை மேன்மையாக எண்ணாமல் அறிவை மேன்மையாக எண்ணுவதால்தான் அநேகர் ஏமாந்து கனி கொடாமல் இருக்கிறார்கள் .
நீயாயத்தீர்ப்பு நாளில் என்ன செய்தாய் என்று கேட்பாரே தவிர என்ன படித்தாய் என்று கேட்கமாட்டார்.
எவ்வளவு திறமையாக எழுதினாய் என்று கேட்காமல் எவ்வளவு தேவபக்தியாக வாழ்ந்தாய் என்றே கேட்பார் .
அதிகமாய் மற்றவர்கள் தந்திரத்தையும்,சூழ்ச்சியையும்,வஞ்சகத்தையும் கண்டுபிடித்து ஜனங்களை எச்சரிக்கும் நாம் தேவனுக்கு ஏற்ற வேறுபாடு ஜீவியம் செய்யாமல் உலகத்தானைப்போல நடந்தால் நாம் எவ்வளவு மாய்மாலக்காரனாக இருப்போம் ஆகையால் மோசம் போகாதிருங்கள் .
நாம் எழுதுவதை வைத்து மனிதர்கள் இவன் நல்லவன் தீர்மானிக்கலாம் ஆனால் ஒருநாள் அவர்கள் உன் ஜீவியத்தைக் குறித்து அறியும்போது அவர்களுக்கு நாம் இடறலாய் இருப்பதால் எழுதுகிறபடியே நடந்துக்கொள்ளவேண்டும் . நடந்துக்கொண்டு அதை எழுதுவதே மிகச்சிறந்தது தேவன் நம்முடை ஜீவியத்தை முழுவதுமாய் அறிந்திருக்கிறார் அவரிடம் நாம் போக்குச்சொல்லமுடியாது.
நம்முடைய பேச்சு மற்றவர்களை ஏமாற்றமடையச் செய்யலாம்.நம் நடவடிக்கைகளே மற்றவர்கள் நாம் யார் என்பதை தீர்மானிச்செய்யும்.
வாழ்கையில் ஒவ்வொரு இமைப்பொழுதும் மிகமுக்கியம் அதை உலக பொழுதுப்போக்கிற்காய் நாம் செலவிடும் எல்லா மாயையான காரியமும் நம் ஜீவியத்தை மெருகு ஏற்றாமல் நம்மை இடறச்செய்யும் கருவிகளே
கிரிக்கெட் முதல் பல்லாங்குழி வரை நாம் நம்மை நஷ்டப்படுத்தும் காரியங்களே .பத்து நிமிடம் ஜெபிப்பது,ஆனால் பலமனிநேரம் கேளிக்கையில் செலவிட்டால் நம்மை தேவன் பார்க்கும் விதம் எவ்விதமாக இருக்கும் .பரிசேயனைப்போல நம்மை நாமே மெச்சுக்கொள்ளவேண்டாம்.
நாம் அதிகமாய் ஞானிப்போல சத்தியத்தைக் கூறி மற்றவர்களை மடக்கலாம் ஆனால் நம்முடைய மாய்மால ஜீவியத்தால் மற்றவர்கள் முன் வெட்கப்படுவோம்!
சிலர் கூறுவார்கள் நான் எப்படி இருக்கிறேன் என்பதை அப்படியே வெளிப்படுத்துகிறேன் ஆகையால் அது மாய்மாலம் இல்லையே என்பார்கள் சரிதான் ஆனால் நாம் உலகத்தானைப்போல் இருந்துக்கொண்டு பிறருக்கு சத்தியவானைப்போல பேசுவது அருவருப்பாக இருக்குமே !ஆகையால் நம் ஜீவியத்தைக் குறித்து எச்சரிப்புள்ளவர்களாய் இருப்போம் !
மாரநாதா !
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:32:30 PM