பகலும் சென்றது இரவும் வந்தது அதிகாலை தேவனின் வார்த்தை அமிர்தம் போல நம் ஆவியை பெலனடையச்செய்யும்.
நாம் பலபேருடன் பேசுவோம் ,கலந்துரையாடல் செய்வோம் ஆனால் தேவனோடு நாம் பேசும்போது அவர் பேசும் ஒரு வார்த்தை எத்தனை சந்தோசமாக இருக்கிறது .
தேவன் நம்மோடு பேசும்போது கொந்தளிப்பான மனது ஒரு இமைப்பொழுதில் அமைதி அடைகிறதே இதன் ரகசியம் என்ன?அவர் நம் இருதயத்தை பார்க்கிறார்
நம் இருதயத்தில் நம்மை உணர்த்தி கண்டிக்கும் மனசாட்சியை பார்க்கிறார்.எத்தனையாய் அதுவும் சுயநீதியால் கறைப்பட்டு இருக்கிறதே அதை அவர் அறிகிறார்
அங்குதான் அவர் புதுபிக்கும் வேலையை அரம்பிக்கிறார் ஆவியின் உள் உணர்வை நாம் அடையவைக்கிறார்.இப்போது என் மனசாட்சி எத்தனையோ காரியங்களை சுட்டிக்காட்டி அன்பு தகப்பனுக்கு விரோதமாய் நடந்ததை வெளிப்படுத்துகிறது.
ஆ...தேவனே நான் அசுத்தமானவன் என்ன நானே நல்லவனாக இருதயத்தில் கொண்டேனே .என் தந்தையே என்னை பரிசுத்தமாக்கும்
எத்தனையாய் மற்றவர்களின் தவறான செயலை சுட்டிக்காண்பித்து நானோ என்னில் தவறாக நடந்தேன் என்பதை நம் ஆத்துமா வியாகுலம் அடையும் .
தேவ நீதி நம் இருதயத்தில் பதிக்கப்பட்டு தேவனுடையவைகளை ஆராய்ந்து பார்க்கிறது ஆ எத்தனை என் தந்தை நல்லவர் அவர் நம்மை ஒருபோதும் இமைப்பொழுதும் கைவிடவில்லையே பின்ன ஏன் நாம் புலம்பினோம்,கண்ணீர் விட்டோம்.
தேவனுடைய செயல் அனைத்தும் நம்மை புதுப்பிக்கும் போது நாம் மறுப்பு சொல்ல அங்கு வாய்ப்பு ஏதும் இராது அவர் நம் சுயநீதியை தள்ளி தேவநீதியை நம் இருதயத்தில் வைக்கிறார்.
நாம் பேசின எழுதின சத்தியத்தின்படி நம் வாழ்கை இருக்கிறதா என்பதை ஆராயச்செய்கிறார்.நாம் மாய்மாலம் செய்திருக்கும் அநேக காரியங்களை ஒவ்வொன்றாக நம் மனசாட்சி நிறுத்துகிறது .
தேவன் நம்மிடம் கூறும் அந்த ஒரு வார்த்தை மனதார சத்தியத்தை பேசு என்பதே .
ஒளிப்பீடத்தில் இருக்கும் அழுக்கையும் சுட்டிக்காண்பித்து தேவநீதி எவ்வளவாய் நம்மை உணரச்செய்கிறது.
நாம் நடக்காமல் மற்றவர்களை இப்படி இரு என்று புத்திக்கூறும் அணைத்தும் அங்கு ஆராயப்படுகிறது .நல்ல தீர்மானங்கள் நம் உள்ளத்தில் உண்டாகிறது.
இந்த உலகத்தில் படும் பிரையாசம் அனைத்தும் ஆராய செய்கிறது .அது எல்லாம் நம்மைப் பற்றிய ஒரு வட்டத்துக்குள் இருக்கிறது .உலக நீதியை நாம் சார்ந்து இரக்கம் இல்லாதவர்களாய் இருப்பதை உணர்த்துகிறது.
நாம் வாழும் இந்த வாழ்கையை ஆராய்கிறது அங்கு எத்தனை மாயையான காரியத்தில் மனதை செலுத்தி வீணான காரியத்தில் நேரத்தை கொடுத்தோம் என்பதை உணரச்செய்கிறது.
நம் மனதுக்கு இன்பமான எல்லாவற்றையும் அனுபவித்தோம்!பரிதாபம் .தேவனின் சித்தம் மறைக்கப்பட்ட நிலையில் மாயையான காரியங்களிலேயே ஆனந்தமும் அடைந்தோம்.
இப்போது தேவன் நம்மொடு இடைபடுகிறார் மகனே நீ செய்யும் செயல் அனைத்தும் எனக்கு வேதனையாக இருக்கிறது .இந்த உலகத்தில் என்னுடைய சாயலை நீ பிரதிபலிக்கும்படி உனக்கு காலத்தையும் நேரத்தையும் கொடுத்தேன் .ஆனால் நீ உண் சுயத்தை எவ்வளவாக சந்தோசப்படுத்தினாய் உன்னை நீயே வஞ்சித்துக்கொண்டு இருந்துவிட்டாய் நீ சினிமா பார்க்கவில்லை என்று உன் சுய நீதியில் சந்தோசமாக இருந்தாய் ஆனால் சினிமாவின் காட்சி உன் இருதயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதே!
கற்பனை செய்து உன்னையே கெடுத்துக்கொண்டாய் மாயையான நினைவுகளை விட்டு வெளியே வா!
இவர்கள் மாயையான சினிமா விளையாட்டு ,சுய அலங்காரம் இப்படிப்பட்ட காரியத்தில் தன் மனம்சார்ந்த வழியிலே நடக்கிறார்கள் என்று தீர்ப்பிட்டு என் சொந்த வாழ்வில் நானோ மாயையானவைகளை சிந்தித்து பரிசேயனாக இருந்துவிட்டேன் என்பதை அறிக்கை இடுகிறோம்!
தேவையானது ஒன்று தேவனோடு ஐக்கியம் .இதைவிட்டுவிட்டு நம் மனம்சார்ந்தபடி உலக சினேகிதனோடு நாம் பேசும் வார்த்தைகள் எத்தனையாய் உலகத்தானுக்கு ஒப்பாக இருக்கிறது .தேவ பிள்ளைகளுடன் பேசும் ஒவ்வொரு விசுவாச வார்த்தைகள் தேவன் மேல் அசையாத நம்பிக்கை வைப்பதை சார்ந்திருக்கிறது.
உலகத்தானிடம் பேசும்போது நாம் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டாம்.உலகத்தான் சினிமா பார்க்க கூப்பிடும் அளவுக்கு நம்முடைய சுபாவம் அவனுக்கு ஒப்பாக இருக்கிறது.
நான் சினிமா பார்க்க மாட்டேன் ஆனால் வெட்டியாக நேரத்தை செலவிடுவேன் என்பது எப்படி சரியாகும் .
நான் கிரிக்கெட் பொன்ற காரியத்தில் என் பொண்ணான காரியத்தை வீனாக்கமாட்டேன்.ஆனால் நாம் வெட்டியாக எத்தனை ஆகாத சம்பாசனை செய்கிறோம் .
நாம் கிறிஸ்துவின் சீஷனா?ஒ நம்மை நாமே ஏமாற்றவேண்டாம்கிறிஸ்து இவ்வுலகத்தில் எப்படி ஜீவித்திருந்தால் உலகம் அவரை பகைத்திருக்கும்.நாம் உலகத்தில் உள்ளவைகளை நேசித்து இருப்பதால் உலகம் நம்மை சினேகிக்கிற்து
நான் உலகத்தான் அல்லாததுப்போல நீங்களும் உலகத்தார் அல்ல !என்ற கிறிஸ்துவின் சத்தம் நம்மை உணர்த்துகிறது.
வேறுபாடு ஜீவியத்துக்கு முக்கியம் கொடாதபடி நாம் செய்யும் அனைத்தும் வீண் .
தான் செத்து மீன் பிடிக்க வேண்டாம் என்ற சொல் எவ்வளவாக நம்மை எச்சரிக்கிறது .
சத்தியத்தை மற்றவர்களுக்கு கூறி அந்த சத்தியத்துக்கு கீழ்படியாவிட்டால் என்ன புரோஜினம் .
ஆ எத்தனையாக ஊழியம் செய்தாய் ஆனால் பிரதிபலனை பெற்றுக்கொள்ள உன் சுபாவம் கிறிஸ்துவின் சுபாவமாய் மாற்றப்படிருக்கனுமே! இதை மறந்துவிட்டோம் .
நாம் உணர்வடைவொம்!
மாரநாதா !
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:35:12 PM