மாயையான இவ்வுலகில் அழிந்துப்போகும் காரியத்துக்காய் மனிதனின் பிரயாசங்கள் எத்தனை!
நாட்கள் கடந்துப்போகிறது ,உலகத்தின் வேசம் மாறிமாறி தன்னை உண்மை போல் காண்பிக்க பிரயாசப்படுகிறது.
மானிட வாழ்கையில் நிலையில்லாத இந்த உலகில் எத்தனைப் போட்டிகள் ,பொறாமைகள் ,சண்டைகள் .வாக்குவாதங்கள் .
ஒருசிலர் மேன்மை ,புகழ் ,உயர்வு என்ற எண்ணங்கள் உடையவர்களாய் தேவனிடம் உண்மையாக இருந்து அவைகளை அடையும் நோக்கத்தில் ஜெபத்திலும் ,உபவாசத்திலும் நேரத்தை செலவிடுகிறார்கள் .தேவனை அறிகிற அறிவு இவர்களுக்கு இருந்தால் எத்தனை நலமாக இருக்கும்.
இன்னும் ஒருசிலர் உலகத்தை தகாதவிதமாக அனுபவிக்க தேவனிடம் தங்கள் சுய ஆசைகளைக் கூறிக்கொண்டு தேவனே இவற்றை எனக்கு தாரும் என்று கெஞ்சுகின்றனர்.
போராட்டம் ,சோதனை நேரத்தில் அவைகள் இந்த மாயையான உலகத்தில்,எந்தப்பாதிப்பை தரும் ?என்று யோசனைகள் இல்லாதபடி கிறிஸ்துவின் அன்பை ருசிக்கமுடியாதபடி புலம்பும் ஒருகூட்டம்.
சூரியனுக்கு கீழே மாயையை பற்றிக்கொண்டு ,தேவனை தூசிக்கும் கூட்டம் எத்தனை .அவர்கள் மரித்து பாதாளத்தில் கிடத்தப்படும் நாளை அறியாமல் இருக்கிறார்கள் .
நவீனகால பரிசேயர்கள் நிறைந்த கடைசி கால கட்டத்தில் இவ்வுலகம் வந்துவிட்டது.தான் பரிசுத்தமாய் நடவாமல் மற்றவர்கள் தப்பிதங்களைப் பார்த்து சுட்டிக்காண்பித்து தன்னையே உயர்த்திக்காண்பிக்கும் மாண்பு எத்தனை அருவருப்பாய் இருக்கிறது.
சுய நீதியில் திருப்திக்கொண்ட வேதபாரர்களே முதலாம் நூற்றாண்டில் இருந்தனர் .இன்றோ தன்னைப் பரிசுத்தவானாக காட்டிக்கொண்டு மற்றவர்களை வஞ்சிக்கும் வஞ்சகர்களாய் கிரியைகளை நடப்பிக்கும் மனிதர்களும் ஏறாளமாய் இருக்கிறார்கள் .
சகலமும் தேவனுக்கென்று இருக்கும்போது என் ஆன்மாவே உனக்கென்று எதைத் தேடுகிறாய் ?
இவ்வுகத்திலும்,மறுமையிலும் உயர்வை தேடுவாயானால் இன்னும் தேவனை நீ சரியாக அறிந்துக்கொள்ளவில்லை .
ஒருவனை உயர்த்துவது,தாழ்த்துவது குயவனின் அதிகாரம் அல்லவா?நீ உயர்வை விரும்புவாயென்றால் இன்னும் நீ தேவனை அறியவில்லை .
அவருக்கென்று என் வாழ்கை என்று கூறும் என் ஆன்மாவே துன்பநேரத்தில் அவரே அதை சந்திப்பதால் நீ ஏன் புலம்பவேண்டும்?
சகலத்தையும் நான் அறிந்துவிட்டேன் என்று உன்னில் கூறிக்கொள்ள துனிகரம் கொள்ளாதே கொஞ்சம் அறிந்ததும் உன்னைவிட்டு நீங்கிவிடும் .
உன் மனதில் உன்னை விவேகியாய் எண்ணாதே !அப்பொது நீ மூடன் என்று நிருபிக்கப்படுவாய் !
உன்னை ஞானி என்று எண்ணம் கொள்ளாதே உன்னுடைய சிறு மதிகேடு உன்னை குழியில் தள்ளிவிடும் .
என் ஆன்மாவே !உனக்கென்று இவ்வுலகில் எதையுமே தேடாதே!சகலமும் அவருக்கென்றே இருக்கிறது ,அவர் மகிமைப்பட வேண்டும் என்ற நோக்கமே உனக்குள் இருக்கட்டும் !
உனக்குள் கிரியைகள் நடப்பிக்கும் நேர்மை ,உண்மை ,தாழ்மை ,இரக்கம்,உத்தமம் இவைகள் உன்னுடைய கிரியைகள் என்று ஒருபோதும் மேன்மைப் பாராட்டி மதிகேடனாக இருக்கவேண்டாம்.நாம் அவருடைய செய்கையாய் இருக்கிறோம் .அவரே உனக்குள் இருந்து தன்னுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறார்.
என் ஆன்மாவே நீ நன்றாக உணர்ந்துக்கொள் நீ அவருக்காகவும் அவருக்கென்றே இருக்கிறாய் பிரதிபலனுக்காய் கிரியை நடப்பிக்காதே!தேவனுக்கு பயந்து அவருக்கு அடங்கி கிரியைகளை நடப்பிக்கவேண்டும்!
இவ்வுலகத்தில் பயித்தியனாய் நீ தென்படலாம் அதைக்குறித்து எதையும் பொருட்படுத்தாதே!அவைகள் உன் கருப்பு முடியையை வெள்ளையாக்கக்கூட முடியாதே!
சகோதர ஐக்கியத்தில் முதன்மையைக் காட்ட முயலாதே !உனக்குத் தெரிந்ததை அவர்கள் அங்கிகரிக்கவேண்டும் என்று வீம்பு பாராட்டாதே!உன்னை கடையானவனாக நிறுத்துவதிலே குறிக்கோளாக வை !பெருமை என்ற உயிர்கொல்லி உன்னை அனுகாது!
உன் கருத்துக்கள் அருமையாக இருக்கலாம் பிறர் கருத்துகள் சரியில்லாதபடி இருக்கலாம் ஆனாலும் ,அங்கு உன் கருத்தை வலியுறுத்தி அழுத்தம் கொடுக்காதே !அப்படி செய்வாயானால் சகோதர அன்பை காலப்போக்கில் நீ இழந்துவிடுவாய் !
எல்லோருக்கும் அதிகாரி தேவனே ஆகையால் நீ மற்றவர்களுக்கு முன் அதிகாரம் செலுத்தாதே !அப்படி அதிகாரம் செலுத்தினால் உனக்குள் தேவன் ஒருபொதும் கிரியைகளை நடப்பிக்கமுடியாதே !
ஓ என் தேவனே என் ஆன்மா உம்முடைய செயல் அனைத்தையும் கண்டு மகிழட்டும் !
தேவனே உம்முடைய ஆளுகைக்கு எதிராக எவரும் நிலைநிற்பதில்லை!
இந்த மாயையான உலகில் எங்களை உமக்கென்று பயன்படுத்தும் .
நாங்கள் உம்முடையவர்கள் உம்முடைய சொத்து நீர் எங்களை ஆளுகை செய்யும் .
மாரநாதா
ஆமேன் !
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:37:58 PM