அன்றய அப்போஸ்தலரின் விசுவாச அறிக்கையும் இன்றய போலி ஊழியர்களின் அறைகூவலும்
இன்றய போலி ஊழியர்:- நாம் தரித்திரர்களா????????????
ஓ தேவனுடைய பிள்ளையே நீ பிச்சக்காரனாய் இருக்க உண்ணை தேவன் அழைக்கவில்லை இவ்வுலகத்தில் நீ சமாதானமாக இருந்து ஆபிரகாமைப்போல ஐசுவரியவானாய் வாழவே விரும்புகிறார்.
நீ தேவனுக்குக் கொடுத்தால் (இருதயத்தில் எல்லாம் எனக்குத்தான்) தேவன் 100 மடங்கு ஆசிர்வதிப்பார்.
பொருளாசை விசுவாசி:-
அது சரிதான் நான் எவ்வளவோ கொடுத்துவிட்டேன்,ஆனால் 100 மடங்கு ஆசிர்வதித்திருந்தால் பாஸ்டரை விட ஐசுவரியவனாகிருப்பேனே! பின்ன ஏன் நான் இப்படி இருக்கிறேன்
இன்றய போலி ஊழியர்:- நீ விசுவாசிக்கவில்லை அதனால்தான்............
பொருளாசை விசுவாசி:-எதை?
இன்றய போலி ஊழியர்:- 100 மடங்காய் தேவன் ஆசிர்வதிப்பார் என்பதை!
பொருளாசை விசுவாசி: போங்க பாஸ்டர் தேவன் என்னை 100 மடங்கு ஆசிர்வதிப்பார் என்று விசுவாசித்தே பத்தில் ஒன்று கொடுத்தேன் ...
இன்றய போலி ஊழியர்:- நீ விசுவாசித்தால்தான் பெறமுடியும்!.....ஆனால்....(தந்திரமாக) ஏதோ உன்னில் குறைவு இருக்கிறது அதை தேவ சமுகத்தில் ஆராய்ந்து ஜெபி.....
II பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
ரோமர் 15:26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;
யாருக்கு கொடுத்தார்கள்?
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.
தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.IIகொரிந்தியர்8 :1-4
இதன் நோக்கம் என்ன?
எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,
15. சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.(IIகொரிந்தியர்8 :14-15)
இயேசு கிறிஸ்து;-
அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.(லூக் 6:20,21)
இயேசுகிறிஸ்து:-யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
அப்போஸ்தலர் :- சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.(அப்போஸ்தலர் 14:22 )அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.(ரோ:51-4)II கொரிந்தியர் 7:4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.
1தெசலோ3:2:3இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:41:30 PM