ஜீவனுக்குப் போகிற வழியை மறைத்து உலகத்தில் மேன்மை ,உயர்வு,புகழ் அடையவேண்டுமானால் பரிசுத்தமாய் இரு! என்று போதிக்கும் வேறசுவிசஷம்
தன்னைத்தான் வெறுத்து தனக்கு கொடுக்கப்பட்ட தேவராஜியத்துக்குரிய வழியில் அநேக உபத்திரவமான சிலுவையை எடுத்துக்கொண்டு தேவன் எப்படி உலகத்தை ஜெயித்தாரோ அப்படி உலகத்தின் சுகபோகத்தை நேசியாமல் தேவனின் விருப்பப்படி வாழும் வாழ்கையை இன்று அநேகர் தெரிந்துக்கொள்ளாமல்,உலகத்தில் தேவன் என்னை உயர்த்த வேண்டும்,மேன்மையடைய வேண்டும்,என்ற நோக்கத்தில் தன்னைத்தாழ்த்துவதும்,நற்கிரியைகளை நடப்பிப்பதும் சரியான பக்தியல்ல!
இவைகள் ஆதாயாத்துக்காய் தேவனைப் பின்பற்றுவதையே குறிக்கும்.ஆனால் இப்படி நடக்கத்தான் போதகர்களும் ,பிரங்கிகளும் ஜனங்களுக்கு போதிக்கிறார்கள்
.அவை எப்படியெனில் ,யோசேப்பைப்போல தேவன் உயர்த்த வேண்டுமானால் பாவம் செய்யாதே! தானியேலைப்போல தேவன் உன்னை மேன்மைப்படுத்த வேண்டுமானால் உன்னை பிரதிஸ்டையுள்ளவனாய் உலகத்தை நேசிக்காமல் ஜீவிக்கவேண்டும். இங்கே சொல்லும் விடயம் சரியானது ஆனால் அதின் நோக்கமோ சுயத்தின் ஆசையை நேர்மையான வழியில் அடையும்படி நூதனமான பிசாசின் போதனையாக இருக்கிறது .இதுதான் வேற சுவிஷேசம் .
இதுதான் சபைகளிலும் கன்வென்சன் மீட்டிங்கிலும் ஜனங்களை கவரும் விதத்தில் பிரசங்கிக்கப்படுகிறது.ஆனால் தேவனோ தெளிவாகக்கூறிவிட்டார். ஒருவன் என்னைப் பின்பற்ற வேண்டுமானால் முதலில் தன்னைத்தானே வெறுக்கவேண்டும். பின்பு தேவனின் விருப்பப்படி வாழவேண்டும்.இங்கு நம்முடைய சுய ஆசையும்,சுய மேன்மைக்கும் எவ்வளவும் இடமே இல்லை!
மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.( மத்தேயு 7:13,14 )
இந்த வசனத்துக்கு கீழேதான்
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
அப்படியானால் இன்று ஜீவனுக்கு போகிற வழியை பிரசங்கிக்காமால் கேட்டுக்குப் போகிற சுய வழியைப் போதிக்கிரார்கள் அதுதான் மேலான நோக்கம் மேன்மை,உயர்வு,புகழ் இவற்றைப் பெற வேண்டுமானால் நீ நற்கிரியை செய்! தேவனுடைய பிரமானங்களைக் கடைப்பிடி என்கிறார்கள் ஆனால் பிரமானங்களும் ,கட்டளைகளும் தேவனுடைய வழியில் செல்ல நமக்கு கொடுக்கப்பட்ட கருவிகள் அதை சுய மேன்மைக்காகவும்,புகழுக்காகவும் பயன்படுத்தினால் அது மிக கொடிய வஞ்சகத்தில் நம்மை கொண்டு தள்ளி இடுக்கமான வாசல்வழியாய் பிரவேசிக்கும் சத்தியத்தை நம் நினைவில் இருந்து எடுத்துவிடும்.
தேவனுடைய வார்த்தை உலக சுகபோகத்துக்கும்,உலகத்தில் மேன்மை அடைவதற்கும் விரோதமாய் இருக்கிறது!
சத்தியத்தை அறிந்தவர்கள் தேவனுடைய விருப்பப்படி வாழ அநேக கிரயம் செலுத்த வேண்டும் .இரட்சிப்பு இலவசம் ஆனால் நித்திய ஜீவனைப் பெறவேண்டுமானால் .தேவன் நமக்குக் கொடுத்த வாழ்கையில் முழுவதும் அவர் விருப்படியே வாழவேண்டும்.அங்கு அநேக உபத்திரவங்கள் வரலாம்,போராட்டம் வரலாம்.பிரச்சனைகள் வரலாம்.
உலகம் பச்சைமரத்துக்கு அதாவது இயேசுகிரிஸ்துவுக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு நாமக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களைஉலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
ஆகையால் தேவன் யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
யோவான் 12:25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்
யோவான் 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
யோவான் 17:9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
யோவான் 17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
யோவான் 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
யோவான் 17:15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
I கொரிந்தியர் 2:12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
I கொரிந்தியர் 4:9 எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
I கொரிந்தியர் 4:13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.
I கொரிந்தியர் 11:32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
I தீமோத்தேயு 6:6,7 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
பிலி 3:7-உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
. ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
21. அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
கலாத்தியர் 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொருசுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:44:08 PM
__________________
Page 1 of 1 sorted by
இறைவன் -> கிறிஸ்த்தவ கட்டுரைகள் -> ஜீவனுக்குப் போகிற வழியை மறைத்து உலகத்தில் மேன்மை ,உயர்வு,புகழ் அடையவேண்டுமானால் பரிசுத்தமாய