நாம் மாய்மாலமாய் பேசாமலும் ,நடக்காமலும் இருபோம்! தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மை ஆராய்கின்றது!
ஒவ்வொருவரும் தன்னை நல்லவர்களாகவும்,பக்திமான்கள் போலவும்,தாழ்மையானவர்கள் போலகாட்டிக்கொள்கிறார்கள்!
1.தேவனுடைய வரத்தை உடையவர்கள் தன்னை எல்லோரும் கனப்படுத்தவேண்டும் என்பதில் கவனமாக இருந்து காரியங்களை நடப்பித்து புகழ்சியை விரும்புகின்றனர்.
2.நல்லா பிரசங்கம் செய்யும் சிலர் தங்களை வேதபண்டிதர்களாய் மற்றவர்கள் முன் தன் மேட்டிமையான பேச்சினால் பேதையான மனிதர்களை அசட்டைசெய்து,தன்னை உயர்த்திக் காண்பிக்கிறார்கள்.
3.அநேகருக்கு புத்திமதிகள் கூறும் சிலர் ,தனக்கு விரோதமாய் மற்றவர்கள் தீங்கு விளைவிக்கும்போது,பொறுமைக்காக்காமல் உலகத்தான் போல தன்னை வெளிப்படுத்தி இவர்களும் உனக்கு நான் குறைந்தவன் அல்ல என்று தன்னைத்தானே உயர்த்துகிறார்கள்.
4.குழுவுக்குள் இருந்துக்கொண்டு குழுவில் உள்ள ஒருவரின் மதிகேட்டை சுட்டிக்காட்டி எச்சரிக்கமுடியாதபடி உலக நட்பு என்ற கண்ணிக்குள் சிக்கி உலக ஐக்கியத்துக்காய் சத்தியத்தை தாரைவார்த்துவிடுகின்றனர்.
தேவனே நானோ எல்லாவற்ரையும் ஆராய்ந்தேன் நான் நல்லவன் அல்ல! நான் எவ்வளவு நிலையற்றவன்.நான் உமது வார்த்தையைக் கூற தகுதியற்றவன்.
தேவரீர் நீர் தந்த ஞானத்தினால் அநேகருக்கு உபதேசத்தை செல்ல கிருபை செய்தீர் உம்முடைய வேதத்தை அசட்டை செய்யும் ஜனங்களை நான் கடிந்துக்கொண்ட நானும் சில நேரம் மாம்சத்தில் வைராக்கியம் கொண்டு கிருபையை போக்கடித்தேனே! என்னை மன்னியும்!
என்னை நித்தவர்களை பழிக்குபழியாய் நிந்தித்தேன்!ஆகையால் இப்போது உமது பாதபடியில் என் வாயை பொத்திக்கொண்டு அமர்ந்திருப்பேனாக!
என் மதீயீனமான செயலைக் கண்டு முகம் சுழித்த நீர் என்மேல் கோபம் கொண்டீர், நான் என் நாவினால் பொய் பேசும்போதும் நீர் என்னைக் கண்டித்து உணர்த்தினீர் .என் மேல் இவ்வளவு இரக்கமாய் இருந்ததின் காரணத்தை அடியேன் அறியவில்லை!
நான் நிலையற்றவன்! என் வாழ்கை ஒரு புகையைப்போல மறைந்துப்போகும்! ஆனால் நித்திய தேவனே எல்லோருடைய வாழ்கையின் தொடக்கத்தையும் முடிவையும் நீர் பார்த்துக்கொண்டிருக்கிறீர் ஆகையால் நான் என் உமது வார்த்தைக்கு கீழ்படிவேனாக! உமது பக்கமே நான் என்ரும் இருப்பேனாக!
பெருமையான வாய்கள் பேசும் போது ,நான் அவர்களின் அழிவையே நினைத்து ஏதும் சொல்லாமல் அமர்ந்திருப்பேனாக!
நான் நல்லவனும் இல்லை!உமக்கு முன்பாக நான் எப்போதும் இருக்கிறேன் உமது கண்கள் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் வீன் வார்த்தைகளையும்,பெருமையான வாய்களையும்,புகழ்சியை விரும்பும் நூதான செயல்களையும் ,எல்லா மனிதனின் வழியை நீர் ஆராய்கிறீர் ஆகையால் தேவனே! நான் ஏதும் பேசாமல் உம் கண்களைப் பார்த்தேன் நீர் இப்போது இரக்கத்தோடு என்னைப் பார்த்தீர் அப்போதும் நான் மதிகெட்டவனாய் நடந்த எல்லா சம்பவங்களும்,மீறினப் பாவங்களும் என் மனதை வந்து குத்துகிறது.அப்போது ஐயோ நான் பாவி! என்னை நானே வஞ்சித்துக்கொண்டு மற்றவர்களுக்கு புத்தி சொல்லிக்கொண்டுவந்த மாய்மாலக்காரன் நான் .என் தேவனே! என்னை மன்னியும்!இனி நான் என் மாம்சத்தை உயர்த்தாமல் இருப்பேனாக!பரியாச உதடுகளுக்கு பதில் கொடாமல் சாந்தமாய் இருப்பேனாக!
தேவனே நீர் என்னை ஆராய்ந்து என் மதிக்கேட்டை உணர்த்தினீர் அதற்காய் நன்றி!
நான் நல்லவனாக ஒருபோது இருப்பதில்லை! ஆனால் நீர் என்னில் நிலைத்திருக்கும் போது உம்முடையவனாக இருக்கிறேன் .
என்னை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று போலியாக வாழ இனித்தேவையில்லை! ஆகையால் மாய்மால எல்லா சிந்தைகளைக் களைந்து உண்மை பேசுவேனாக! எனக்கு நீர் தந்த சிட்சைகளை நினைத்து சந்தோசப்படுகிறேன்
நன்றி தேவனே! உம் செயல் எப்போதும் எனக்கு நன்மையையே கொண்டுவரும்!
அல்லேலூயா!
நம்மை நாமே உயர்வாய் காண்பிக்காதிருப்போமாக! தேவன் நமக்கு முன்பாய் நின்று நம்முடைய செயல் அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்!
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:48:45 PM