மனிதர்களின் வாழ்கை அர்த்தமற்றதாய் இருப்பதுப்போல் உணர்ந்தேன்
சுயநலம் ஒவ்வொருவரையும் தன் கூண்டுக்குள் தானாய் வருபோரை சேர்த்துக்கொண்டு சந்தோசமாய் இருந்தது.
நானோ கூண்டு அருகில் அதன் வாசல் அருகே நின்று அழுதுக்கொண்டு நின்றேன் சுயநல கூண்டு என்னை வா வா என்று கூவி அழைத்தது.
என் இருதயத்தை அதற்கு அடைத்து நடக்கலானேன் .திரும்பி பார்த்தேன் சுயநல கூண்டுக்குள் இருந்தவர்கள் மெய்மறந்து சந்தோசமாய் ஆடிப்பாடி குதித்து மகிழ்ந்துக்கொண்டிருந்தனர்.துன்மார்க்கர்கள் மதுபான வெறி கொண்டிருந்ததைக் கண்டேன்,கிறிஸ்தவர்கள் இவ்வுலகில் தான் சுகமாய் இருப்பதற்காய் அந்த கூண்டுக்குள் இருந்து தேவனை புகழ்ந்து பரவசத்தோடு மகிழ்ந்துப் பாடி துதித்துக்கொண்டிருந்தனர்.
நான் என் கண்ணீரை துடைத்துக்கொண்டு என்முகத்தை சுயநல கூண்டைவிட்டு திருப்பினேன்
தேவனை நோக்கி என் இருதயம் புலம்பி அழுதது!
தனித்தவனாய் நிற்கிறேன் என்னோடு யாருமில்லை!
மழையில் நனைந்துக்கொண்டே சென்றுக்கொண்டிருந்தேன்.என்னால் திக்கற்ற என் ஜனத்துக்கு உதவமுடியலியே! உதவி உதவி என்ற சப்தம் என் காது கிழியக் கேட்டது.
என்னால் முடியலியே நானும் உங்களைப்போல ஒருவந்தான் என்று தேற்றப்போனேன் .அங்கோ உதவி கிடைக்காமல் அநேகரை மரணம் வாரிக்கொண்டு போய் கொண்டிருந்தது தடுக்க நினைத்தஆறுதல் வார்த்தைகள் வெற்று வார்த்தையாய் என்னிடமே திரும்பி வந்தது.
என் காலையும் அவர்களின் துக்க இருள் பிடித்தது நான் உணர்ந்தேன்.
இனி இவ்வுலகில் ஜீவனம்பண்ணி என்ன பயன் .எல்லோரும் சுயநலக் கூண்டுக்குள் ஆசையாய் ஓடிப்போய்விட்டார்கள்.நான் ஒருவனாய் வெளியே! வாழ்கை என்னும் படகில் பயனித்த அநேகர் சூறாவழியிலும்,பெருமழையிலும் பாதிக்கப்பட்டு கரையோரமாய் நடக்கமுடியாமல் முனங்கிக்கொண்டிருந்தவர்கள் அருகில் சென்றேன்.
இருள் என்னைக் கவ்வினது,நான் மரிக்க ஆசைப்பட்டேன்.
அப்போது ஒன்றை உணர்ந்தேன் என்னால் நடக்கமுடிகிறது அவர்களால் ஏன் முடியவில்லை! அப்போது ஒரு குரல் என்னிடம் நீ நிற்பது கன்மலை நீ நடக்கும் போது கன்மலையின் பாறை தன்னை நீட்டிக்கொள்ளும் என்றது.
நான் “ஆனால் என் மனம் அவர்களைப்போன்று அழுதுக்கொண்டிருக்கிறதே! ”என்றேன்
என் அருகில் என்னோடு இருவர் நிற்பதை என் உள் ஆவியின் உணர்வில் உணரமுடிந்தது என்னோடு இருவர் என்னைப்போல் அழுதுக்கொண்டு என் முன்னே சென்றுக்கொண்டிருந்தனர் நான் அவர்கள் யார் என்று அறிய முற்பட்டேன்.
சூறாவளி புயலால் வந்த சாரல் மழை அவர்கள் முகத்தை மறைத்துகொண்டே இருந்தது.என் கண்ணை கூர்மையாக்கி பார்த்தேன் .எனக்கு தெரிந்தவர் போல உணர்ந்தேன்.பின்னிட்டுப் பார்க்கும் போது இருளும்,ஆங்காங்கே குழிகளும் பள்ளங்களும் இருப்பதை அறிந்தேன் .நான் எப்படி இந்த பள்ளத்திலும் குழியிலும் விழவில்லை அது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.ஆனாலும் என் உள்ளத்தின் துக்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் அழத் தொடங்கியது.
என் அருகில் முன்னே போனவர்களின் சாயல் இயேசுகிறிஸ்துவுப்போலவும்,மோசே போலவும் இருப்பதாக என் ஆன்மா கூறினது.அப்போது ஒருகணம் அமைதி நிலவியது ஒவ்வொருவராய் அந்த பாதையில் கொஞ்சபேர் பயனிப்பதை அறிந்தேன் .எல்லோரும் என்னைப்போலவே இவ்வுலகில் நடக்கும் அநியாயத்தையும் ,புறக்கணிப்புகளையும்,மற்றவர்களின் திக்கற்ற நிலவரத்தைக் கண்டு புலம்பி அழுதுக்கொண்டே செல்வதைக் காணமுடிந்தது.
நான் தனியே அல்ல என்னோடு பயனிக்க சிறு கூட்டம் உண்டு !அப்போது என்னோடு போராடிய மரணம் தூரமாய் விலகிப்போனதை உணர்ந்து விழித்தேன்.அப்போது மாம்சத்தின் நினைவுகள் என்னை பதம் பார்த்தது.என் வாழ்கையில் நான் படும் எல்லா துன்பத்தையும் ஒவ்வொன்றாய் நிறுத்தியது என் ஆவியிலோ இல்லை நான் அழுகிறதுக்கென்றே இவ்வுலகில் தேவனால் படைக்கப்பட்டேன் .அதை சரியாக நிறைவேற்றவேண்டும் என்று உறுதி எடுத்தவனாய் அமர்ந்தேன்.என் வாழ்வில் என்பது கிடையாது என் துக்கத்தோடு மற்றவர்களின் துக்கத்தையும் சுமந்து கிறிஸ்து எனக்காய் விட்டுச் சென்ற கொஞ்சப் பாடுகளையும் நிறைவேற்றவேண்டும்.இனிமேல்தான் கிறிஸ்துவோடு இனைந்து சுனாமிகளும்,கொந்தளிப்புகலையும் சந்திக்கப் போகிறேன் ............................