சுவிசேஷகர்,அப்போஸ்தலர்:-ராஜியத்துக்குரிய சுவிசேஷத்தையும்,கிறிஸ்துவைப் பற்றியதான சுவிசேஷத்தையும் கூறி அவர்களை கிறிஸ்துவண்டை (ஜீவனுடைய வழி,அது இடுக்கமான வழி )வழிநடத்த வேண்டும், முதலில் சீஷனாக்க வேண்டும், எப்படியெனில்லூக்கா14:26 யாதொருவன்என்னிடத்தில்வந்து, தன்தகப்பனையும்தாயையும்மனைவியையும்பிள்ளைகளையும்சகோதரனையும்சகோதரிகளையும்,தன்ஜீவனையும்வெறுக்காவிட்டால்எனக்குச்சீஷனாயிருக்கமாட்டான்.
சுவிசேஷம் கூறும்போதே தன்னைத்தான் வெறுத்து கிறிஸ்துவை நேசிக்க அர்பணம் செய்யவைக்கவேண்டும்,உலகத்தையும்,அதில் உள்ளவைகளையும் நேசிக்காமல் கிறிஸ்துவை நேசிக்க அர்பணம் செய்யவைக்கவேண்டும் .இதுதான் முதலில் ஒருவன் கிறிஸ்துவில் அஸ்திபாரம் போடப்படுவதைக் குறிக்கிறது.ஆகையால் சுவிசேஷகனின் வேலை சீசனாக வாழ அர்பனிப்புக்குள் வழிநடத்துவதே! ஆகையால்தான் பாவத்தை கண்டித்து மனந்திரும்புதலுக்கு ஏதுவாக சுவிசேஷம் கூறி தேவனுடைய கிருபையால் பாவத்தில் இருந்து மன்னிப்பும்,பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்பும் கிடைக்கப் பெற்று கிறிஸ்துவின் அடிமையாகுகிறான்,அவனுக்கு தன் மேல் அதிகாரம் இல்லை .தன் விருப்பம் அல்ல கிறிஸ்துவின் விருப்பத்தையே நிறைவேற்ற அர்பணிப்புள்ள வாழ்கைக்குள் வருகிறான்.சுயத்தை அனுதினமும் சாகடிக்கும் வாழ்கையின் தொடக்கம் வரை சுவிசேஷகனின் பொறுப்பு.
அப்போஸ்தலர்,மேய்ப்பர் களின் பொறுப்பானது சுயத்தை அனுதினமும் சாகடிக்கும் வாழ்கைக்குள் அடியெடுத்தவனுக்கு அதற்கான சத்தியத்தைக்கூறி கன்மலையாகிய கிறிஸ்துவில் உறுதியானாய் ஊண்றக் கட்டப்பட அஸ்திபாரமான சத்தியத்தில் அவனை வழிநடத்தி கற்பிப்பதே! போதகனின் வேலை அவனுடைய எல்லா காரியத்தையும் கண்கானித்து அவனுக்கு தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து கிறிஸ்துவில் விசுவாசமாய் வாழ தைரியப்படுத்தி ,உறசாகமூட்டி வழிநடத்துவத்துவதும்,அப்படியே தீர்க்கதரிசியின் வேலை அவன் பாவ வழியில் செல்லுவதை தேவன் கண்டிப்பதையும்,அவனைக் குறித்ததான தேவ திட்டத்தையும் விவரித்து கிறிஸ்துவில் பொறுமையாய் வழிநடத்தவும் தேவனுடைய வாயாய் இருக்கவேண்டும்.
ஆனால் இன்று மனந்திரும்புதல் சத்தியத்தைக் கூறி கிறிஸ்துவில் வழிநடத்தப்பட்டவர்களை சீஷனாக்காமல்,மருபடியும் அடிமையின் நுகத்துக்குள்ளாய் சிறைபிடிக்கப்பட தேவன் வெறுக்கிற பொருளாசையையும்,உலகத்தில் உயர்வையும்,மேன்மையையும் நாடத்தக்கதாக! அநேக பிரசங்கிக்கப்படுகிறது.உன்னை யோசேப்பைப்போல் தேவன் உயர்த்துவார் என்று உற்சாக வார்த்தையை முன் நிறுத்தி பேசும் ஊழியர்கள் அவன் உயர்த்தப்பட எவ்வளவாய் நிந்தையையும்,அவமானத்தையும்,இளைப்பாறுதலை இழந்து சிறைச்சாலையில் ,அவனுடைய ஆத்துமா இரும்புக்குள் அடைப்பட்டு விடுதலை அடைய அவன் வாஞ்சித்தும் மனிதனால் புறக்கனிக்கப்பட்டு அதன் மூலம் அவன் பயிற்சி அளிக்கப்பட்டு அந்த மேன்மையான இடத்துக்கு தேவன் உயர்த்தும் போதோ யோசேப்பு மிக தாழ்மையுள்ளவனாய் காணப்பட்டான் அவன் தனக்காய் அன்று வாழாமல் அநேகருக்காய் வாழ்ந்தான் இதற்காய் தேவன் அவனை தன்னைத்தான் வெறுக்க இவ்விதமான வழியில் வழிநடத்தினார் இதை முன் மொழிந்து இன்று பிரசங்கிக்கப்படுகிறதா?
தானியேல் சுகபோகத்தையும்,ராஜ உபசரிப்பையும் உதரிதள்ளினபடியால் தேவன் அதிகாரியாக வைத்தார் .இதைக் குறித்து பிரசங்கிக்கப்படாமல் தானியேலைப்போல தேவன் உயர்த்துவார் என்கிறார்கள்,ஆபிரகாமைப்போல் தேவன் ஆசிர்வதிப்பார் ,எப்படி?ஆபிரகாம் தன் மகனைவிட தேவனை நேசித்தான் ,தன்னைத்தான் பரதேசியாய் அர்பணம் பன்னி தன் விருப்பத்தின்படி நடவாமல் தேவனின் விருப்பத்தின்படி நடந்தான் இதனால் தேவன் அவனை ஆசிர்வதித்தார்,ஆனால் இன்றோ தானியேலைப்போல அல்ல,யோசேப்பைப்போல அல்ல,ஆபிரகாமைப்போல அல்ல,கிறிஸ்துவைப்போலவே நாம் ஜீவிக்க புதிய உடன்படிக்கைக்குள்ளாய் வந்திருக்கிறோம் அதிக உன்னத ஜீவியமே! இவை இங்கு ஒருவன் தன்னைத்தான் வெறுக்க வேண்டும்,சுயத்தை அனுதினம் சாகடிக்கவேண்டும்,அதற்காய் வரும் எல்லா உபத்திரவங்கள் எல்லாம் ஒரு பரிட்சையே! இதில் நாம் நிலை நிற்கும்போதுதான் விசுவாசப் பாதையில் ஒவ்வொரு அடியாய் எடுத்து கிறிஸ்துவுக்குள் அவருக்கு ஒப்பாய் கட்டப்பட்டு வரமுடியும்,பாடுகளும் உபத்திரவம்யும் கிறிஸ்துவின் இடுக்கமானா பாதையில் வைக்கப்பட்டிருக்கிறது இதை ஒருவன் கண்டு புலம்பி ஓடுவானானால் அவன் உன்மையில் தன்னைத்தான் வெறுக்காமல் எகிப்துவை அதாவது உலகத்தை அல்லது விசாலமான பாதையை நோக்கி பயனிக்கிறான் என்றே அர்த்தம்.
ஊழியம் என்பது ஒருவனை கிறிஸ்துவில் ஊண்றக்கட்டப்பட அவனுக்குத் தேவையான அனைத்தையும் ஒரு தகப்பன் போல கவனித்து ஒரு தாயைப்போல அன்புகாட்டி,கிறிஸ்துவை நேசிக்கவும்,அவரைப்போல அவருடைய சுபாவத்தில் வளரவும் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே சிந்தையுள்ளவர்களாய் சகோதரர்களாய் கிறிஸ்துவில் அங்கமாய் காணப்பட வழிநடத்துவதே! கிறிஸ்து தலை என்றால் நம்முடைய சிந்தைக்கும்,நம்முடைய தீர்மானத்துக்கும் வழி அங்கு இல்லை அங்கு தீர்மானிப்பது கிறிஸ்துவே,அவருக்காய் அவருடையவர்களாய் ,அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதே உன்மையில் நாம் அவரை நேசிக்கிறோம் ,அவருடைய பிள்ளை என்று அர்த்தமாகும்.
இதை வாசிக்கும் சகோதர சகோதரியே உன்னை ஆராய்ந்து நியும் கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மேல் அதாவது கிறிஸ்துவைப்போல அர்பணிப்புள்ளவனாய் அவர் பிதாவின் சித்தத்தை செய்ததுப்போல நீயும் செய்ய கிறிஸ்துவுக்குள் அடங்கி கிறிஸ்து உனக்கு வழிகாட்டுகிறபடி செய்யுங்கள் ,ஒவ்வொரு நாளும் சுயத்தை சாகடித்து கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 10:58:54 PM