இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மோசம் போகாதிருங்கள்! நித்திய அக்கினிக்கு தப்பித்துக்கொள்ளுங்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
மோசம் போகாதிருங்கள்! நித்திய அக்கினிக்கு தப்பித்துக்கொள்ளுங்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்
Permalink  
 


மோசம் போகாதிருங்கள்! நித்திய அக்கினிக்கு தப்பித்துக்கொள்ளுங்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

இந்த கட்டுரையை கட்டாயம் வாசியுங்கள் இது நம் எல்லோருக்காகவும் அவசரமான செய்தியாய் எழுதப்பட்டுள்ளது!

நீங்கள் நியாயதீர்ப்பில் போய் ஏமாந்து நித்திய அக்கினியில் பங்கடையக்கூடாதே என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது! வெறுமனே like கும்,comment போட்டுக்கொண்டு போகாதீர்கள் .உங்கள் like ம் தேவையில்லை,உற்சாகப்படுத்தும் comment ம் தேவையில்லை வாசியுங்கள் அதுவே பலன்.உங்களை வஞ்சகத்தில் இருந்து தப்புவிக்கும்,வாசிக்கிறவன் பாக்கியவான்.

 

தீத்து 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

 

தீத்து 1:16அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

 

 

எப்படி உபதேசிக்கிறார்கள் தேவனுடைய வசனத்தை தனக்கு சாதகமாக்கி திரித்து பேசுகிறார்கள்.

ஆலயத்துக்கு கொடுங்கள் வாய்கிழிய பேசும் ஊழியர்கள் அநேகர் சிறுமைப்பட்டவர்களுக்கும்,திக்கற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதை விரும்பவில்லை .இந்த ஊழியர்கள் நீங்கள் அங்கு(ஏழைக்கு) கொடுக்கக்கூடிய காசை ஆலயத்துக்கு கொடுங்கள்,அது பரலோகத்தில் கனக்கில் கொள்ளப்படும் என்கிறார்கள். நீங்கள் ஆலயத்துக்கு கொடுக்கும் போது அதை வைத்து அநேக ஊழியத்தைச் செய்யமுடியும் என்று மிக சாதுரியமாய் பேசுகிறார்கள்.

 

பரலோகத்தில் பொக்கீசம் உண்டாகவேண்டுமானால் வேதம் என்னக்  கூறுகிறது:

 

நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.(மத்19:21)

 

நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்ட வாலிபனுக்கு இயேசுகிறிஸ்து இவ்வாறாக கூறினார் (மத்தேயு 19:16)

 

 

எபிரெயர் 13:16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

 

1திமோ 6:18,19 :- நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,

 

நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு,-----என்று இல்லாதவர்களுக்கும்,குறைவில் உள்ள ஏழைகளுக்கும் ,ஏழை விசுவாசிக்கும் நண்மை செய்யுங்கள் என்று வேத சத்தியம் தெளிவாக கூறும்போது சில நூதான ஊழியர்கள் சத்தியத்தை திரித்து தனக்கு சாதகமாய் பேசுவது கண்டிக்கத்தக்கது!

 

 

இயேசுகிறிஸ்து கொடுத்த கட்டளை என்ன?

 

மாற்கு 14:7 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; 

 

இன்றய கிறிஸ்தவன் சபையில் ஆடிப்பாடி மகிழ்வான் ,பரவசம் கொண்டு சந்தோசப்படுவான் ஆனால் தேவனை சந்தோசப்படுத்தும் செயலான தரித்திரர்களுக்கோ இரங்கி நன்மை செய்யமாட்டான் எவ்வளவு சுயநலம்.

 

கிறிஸ்தவனே! இன்று உனக்கு முன் இருக்கும் கிறிஸ்துவின் கட்டளைகளுள் ஒன்று தரித்திரர்களுக்கு கொடு என்பதை நீ நிறைவேற்றாமல் சுயநலமாய் பரலோகம் செல்லலாம் என்று பகல் கனவு கானாதே!

 

நியாயத்தீர்ப்பு பற்றி இயேசுகிறிஸ்துவே கூறியிருப்பதை இன்றய ஊழியக்காரர்கள் எவரேனும் பிரசங்கிப்பதில்லை அது என்ன சத்தியம் தெரியுமா?

 

பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;

 

அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.

 

ஆனால் இன்று சிறுமைப்பட்டவர்களுக்கும்,ஏழைக்கும் உதவி செய்யாமல் வெறுமனே  ஆலயத்துக்கு மாத்திரம் காணிக்கைக்கொடுத்துக்கொண்டிருக்கும் விசுவாசி கூறுகிறான்:-

 

அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.

 

இப்படி இவர்கள் மறு உத்தரவு கொடுப்பதற்கு காரணம் இன்றய சில ஊழியக்காரர்களே காரணம் இவர்கள் ஆலயத்துக்கு கொடு என்பார்கள் ஆனால் தரித்திரருக்கு இரங்க வேண்டும் என்ற இயேசுகிறிஸ்துவின் பிரதான கட்டளையை அலட்சியப்படுத்தி ஜனங்களுக்கு மறைத்துவிட்டார்கள் அதன் விளைவே! இவைகள்.

 

இவர்கள் நினைத்தது ஆலயத்துக்கு கொடுத்ததால் தேவனுக்கு கொடுத்துவிட்டோம் என்ற மென்மைப்பாராட்டுதலோடு இருந்து வஞ்சிக்கப்பட்டதால் தேவனிடம் இப்படி பிரதியுத்தரவு கொடுத்தார்கள் என்பதை கவனியுங்கள் .

 

வஞ்சிக்கப்பட்ட விசுவாசிகள் அநேகர் நித்திய அக்கினியிலே பங்கடைய இருக்கிறார்கள் எச்சரிக்கை! எச்சரிக்கை! மோசம் போகாதிருங்கள் ஆகையால் தரித்திரர்களுக்கு இரங்கி தேவனிடத்தில் இரக்கம் பெற்றுக்கொள்ளுங்கள்.

 

ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம்மேன்மைபாராட்டும்.( யாக்கோபு 2:13 )

 

இவைகள் இப்படி இருக்க வஞ்சிக்கப்பட்ட ஜனத்தைப் பார்த்து தேவன் என்னக் கூறுகிறார் பாருங்கள்:-

 

அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: “மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”

 

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

 

துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.(சங்112:9,10)

 

 

அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.(மத்25:46)

 

 

ரோமர் 3:12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

 

ஏழை விசுவாசிக்கு நன்மைகள் செய்ய வேண்டும்:-

 

இன்று நீங்கள் போகும் சபையில் எத்தனை விசுவாசிகள் சரியான வேலை இல்லாமல் இருக்கும் போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைகள் காலியாக இருந்தால் உங்கள் ரெக்கமண்ட் மூலமாக அப்படிப்பட்ட ஏழை விசுவாசிக்கு நன்மை செய்யலாமே!

 

உங்கள் கனவனோ,அல்லது உங்கள் தகப்பனாரோ வெளிநாட்டில் இருந்தால் ஏழை விசுவாசிகளுக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்க உதவலாமே!

ஆனால் இன்று கிறிஸ்தவனோ தான் உண்டு தன் சபை உண்டு என்று போகும் பாரம்பரிய பக்தியை தேவன் வெறுக்கிறார்.

 

இதை வாசிக்கும் சகோதரனே இந்த வார்த்தை உண்ணைப் புடமிடுகிறது

நீ இந்தக் காலத்தில் உனக்கு நன்மை செய்ய வாய்ப்புகள் இருந்து செய்யாமல் போனால் உனக்கு ஐயோ!

 

கலாத்தியர் 6:10 ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும்,நன்மைசெய்யக்கடவோம்.

 

 

I பேதுரு 2:15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

 

சகோதரர்களே நன்மை செய்வதில் ஒருவனும் உங்களை தடைப்பண்ணாதிருப்பானாக! தடை செய்கிறவன் உங்களை அக்கினிகடலில் பங்கடையும்படி வஞ்சிக்கிறான்.

 

II தெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

 

யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

 

தீமை செய்யாதிருப்பது மாத்திரம் போதும் என்று திருப்திப்படவேண்டாம் நன்மை செய்யாதிருப்பதும் பாவமே! அதுவே உங்களை அக்கினிக்கடலில் பங்கடையச் செய்ய போதுமானது! ஆகையால் மோசம் போகாதிருங்கள்.

 

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

 

யோவான் 5:29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

 

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

 

அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,

 

மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். (யூதா21,-23)



-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 11:01:45 PM



-- Edited by johnsondurai on Wednesday 17th of June 2015 11:24:23 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard